Friday, 9 July 2021
தொழுகையின் சிறப்பு...
கருமித்தனம்.....
கருமித்தனம்
إيَّاكُم والشُّحَّ، فإنَّما هلَكَ مَن كانَ قبلَكُم بالشُّحِّ، أمرَهُم بالبخلِ فبخِلوا، وأمرَهُم بالقَطيعةِ فقطعوا، وأمرَهُم بالفجورِ ففجَروا .
الراوي : عبدالله بن عمرو | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند
| خلاصة حكم المحدث : صحيح
கருமித்தனம் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் கருமித்தனம் செய்ததால் தான் அழிந்து போனார்கள்.அவர்களின் கருமித்தனம் அவர்கள் தர்மம் செய்ய வேண்டாமெனக் கட்டளையிட்டது எனவே அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள்.
அவர்களின் கருமித்தனம் உறவினர்களைத் துண்டித்து வாழக் கட்டளையிட்டது எனவே அவர்கள் உறவினர்களைத் துண்டித்து வாழ்ந்தார்கள் .
கருமித்தனம் அவர்களைப் பாவங்கள் செய்யக் கட்டளையிட்டது எனவே அவர்கள் பாவங்கள் செய்தார்கள் என்று நபி ஸல் உரை நிகழ்த்தும்போது கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்னத் 801
நளினமாக நடப்பதின் சிறப்பு....
நளினமாக நடப்பதின் சிறப்பு
أدخلَ اللهُ عز وجل رجلاً كان سهلاً، مشتريًا، وبائعًا، وقاضيًا، ومُقتضيًا الجنةَ.
الراوي : عثمان بن عفان | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 4710 | خلاصة حكم المحدث : حسن
விற்கும்போதும் வாங்கும்போதும் கடனை நிறைவேற்றுகின்ற போதும் ( கடனைத் ) திருப்பிக் கேட்கின்றபோதும் யார் நளினமான முறையில் நடந்துகொண்டாரோ அத்தகைய மனிதரை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தில் நுழைய செய்வான் என்று நபி ஸல் கூறியதாக உஸ்மான் பின் அஃப்ஃபான் ( ரலி) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் நஸாயீ 4710
பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு.....
பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு.
للمؤمنِ على المؤمنِ ستُّ خصالٍ يعودُهُ إذا مرضَ ويشْهدُهُ إذا ماتَ ويجيبُهُ إذا دعاهُ ويسلِّمُ عليْهِ إذا لقيَهُ ويشمِّتُهُ إذا عطسَ وينصحُ لَهُ إذا غابَ أو شَهدَ.
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 1937 | خلاصة حكم المحدث : صحيح
ஒர் இறை நம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்
1- அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை உடல் நலம் விசாரிப்பது
2- அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவில் பங்கேற்பது
3- அவர் அழைத்தால் அவருக்கு பதிலளிப்பது
4- அவரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் கூறுவது
5- அவர் தும்மி ( அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி)னால் ( யர்ஹமுகல்லாஹ் என்று ) அவருக்கு மறுமொழி கூறுவது
6- அவர் உடன் இருக்கும்போது இல்லாதபோதும் அவருக்கு நல்லதே நினைப்பது என்று நபி {ﷺ}கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் நஸாயீ 1937
நபி{ﷺ}அவர்களுடைய வழிமுறை மீறியவர்கள் இவர்கள்.....
நபி{ﷺ}அவர்களுடைய வழிமுறை மீறியவர்கள் இவர்கள்.
يا روَيْفعُ لعَلَّ الحياةَ ستطولُ بِكَ بعدي ، فأخبرِ النَّاسَ أنَّهُ من عقدَ لحيتَهُ ، أو تقلَّدَ وَترًا ، أو استَنجى برجيعِ دابَّةٍ ، أو عَظمٍ فإنَّ محمَّدًا صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ منهُ بريءٌ.
الراوي : رويفع بن ثابت الأنصاري | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 36 | خلاصة حكم المحدث : صحيح
ருவைஃபி உவே ! எனக்குப் பிறகு உம்முடைய வாழ்நாள் நீடிக்கலாம் அப்போது நீர் மக்களிடம் யார் தம் தாடியை முடிச்சுப் போடுகிறாரோ அல்லது கயிற்றை கழுத்தில் ( தாயத்து போன்று ) மாலையாகப் போட்டுக் கொள்கிறாரோ அல்லது கால் நடைகளின் விட்டையால் அல்லது எலும்பால் ( மலம் கழித்தபின் ) தூய்மை செய்கிறாரோ அவரிடமிருந்து முஹம்மத் நீங்கிக் கொண்டார் என்று தெரிவித்துவிடு என்று கூறினார்கள் என ருவைஃபிஉ பின் ஸாபித் ( ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 36
பிரார்த்தனை ஏற்றுகொள்ளப்படும் நேரம் .......
பிரார்த்தனை ஏற்றுகொள்ளப்படும் நேரம்
قلتُ يا رسولَ اللَّهِ أيُّ اللَّيلِ أسمَعُ قالَ جوفُ اللَّيلِ الآخرُ فصلِّ ما شئتَ فإنَّ الصَّلاةَ مشْهودةٌ مَكتوبةٌ حتَّى تصلِّيَ الصُّبحَ...
الراوي : عمرو بن عبسة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : | خلاصة حكم
المحدث : صحيح
அல்லாஹ்வின் தூதரே ! இரவில் எந்த நேரத்தில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரவின் கடைசிப் பகுதி எனவே அந்த நேரத்தில் நாடிய அளவு நீ தொழுதுகொள்
ஃபஜ்ரு தொழும் வரை அங்கு வானவர்கள் வருகிறார்கள் அதற்குரிய நன்மையை எழுதுகிறார்கள் என்று கூறினார்கள்.
இதை அம்ர் பின் அபஸா ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1277