Monday, 29 October 2018

அல்லாஹ் சிரித்த நிகழ்வு ஓர் பார்வை ….

அல்லாஹ் சிரித்த நிகழ்வு ஓர் பார்வை ….

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّاسَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « هَلْ تُضَارُّونَ فِى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ » . قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ . قَالَ « فَهَلْ تُضَارُّونَ فِى الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ » . قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ . قَالَ « فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ ………،
ثُمَّ يَفْرُغُ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ ، وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ هُوَ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولاً الْجَنَّةَ فَيَقُولُ أَىْ رَبِّ اصْرِفْ وَجْهِى عَنِ النَّارِ ، فَإِنَّهُ قَدْ قَشَبَنِى رِيحُهَا وَأَحْرَقَنِى ذَكَاؤُهَا . فَيَدْعُو اللَّهَ بِمَا شَاءَ أَنْ يَدْعُوَهُ ثُمَّ يَقُولُ اللَّهُ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَنِى غَيْرَهُ . فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ ، وَيُعْطِى رَبَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ مَا شَاءَ ، فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ ، فَإِذَا أَقْبَلَ عَلَى الْجَنَّةِ وَرَآهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ قَدِّمْنِى إِلَى بَابِ الْجَنَّةِ . فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَنِى غَيْرَ الَّذِى أُعْطِيتَ أَبَدًا ، وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ . فَيَقُولُ أَىْ رَبِّ . وَيَدْعُو اللَّهَ حَتَّى يَقُولَ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ . فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ ، وَيُعْطِى مَا شَاءَ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ ، فَيُقَدِّمُهُ إِلَى بَابِ الْجَنَّةِ ، فَإِذَا قَامَ إِلَى بَابِ الْجَنَّةِ انْفَهَقَتْ لَهُ الْجَنَّةُ فَرَأَى مَا فِيهَا مِنَ الْحَبْرَةِ وَالسُّرُورِ ، فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ أَدْخِلْنِى الْجَنَّةَ . فَيَقُولُ اللَّهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَ مَا أُعْطِيتَ - فَيَقُولُ - وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ . فَيَقُولُ أَىْ رَبِّ لاَ أَكُونَنَّ أَشْقَى خَلْقِكَ فَلاَ يَزَالُ يَدْعُو حَتَّى يَضْحَكَ اللَّهُ مِنْهُ فَإِذَا ضَحِكَ مِنْهُ قَالَ لَهُ ادْخُلِ الْجَنَّةَ . فَإِذَا دَخَلَهَا قَالَ اللَّهُ لَهُ تَمَنَّهْ . فَسَأَلَ رَبَّهُ وَتَمَنَّى حَتَّى إِنَّ اللَّهَ لَيُذَكِّرُهُ يَقُولُ كَذَا وَكَذَا ، حَتَّى انْقَطَعَتْ بِهِ الأَمَانِىُّ قَالَ اللَّهُ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ » .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிற நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி…

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிக்கும் போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் எஞ்சியிருப்பார். அவர் தான் சுவனத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார்.

அவர், “என் இறைவா! என் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவாயாக! அதன் வெப்பக் காற்றால் என் மூச்சு அடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்து விட்டது.” என்று கூறுவார்.
பின்னர் அல்லாஹ்விடம் எதைச் சொல்லி பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடியிருக்கின்றானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார்.

பிறகு அல்லாஹ் அவரிடம் ”நீ கேட்பதை நான் நிறைவேற்றினால் இதுவல்லாத இன்னொன்றையும் நீ கேட்கக் கூடும் அல்லவா?” என்று வினவுவான். அதற்கவர், இல்லை என் இறைவா! உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் கேட்கப்போவதில்லை” என்று கூறி இறைவன் நாடிய வாக்குறுதிகளையும், உறுதி மொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார்.

அதன் பின்னர் அல்லாஹ் அவரின் முகத்தை நரகத்தை விட்டு வேறு பக்கம் திருப்பி விடுவான். அவர் சுவனத்தை முன்னோக்கி பார்வையை செலுத்தும் போது அல்லாஹ் நாடிய நேரம் வரை அவர் அமைதியாக இருப்பார்.

பிறகு, “என் இறைவனே! சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு செல்வாயாக!” என்று கூறுவார். அதற்கு, அல்லாஹ் அவரிடம் “உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒரு போதும் என்னிடம் கேட்கமாட்டேன் என முன்னர் உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் நீ என்னிடம் வழங்கவில்லையா?” என்று கேட்டு விட்டு, மனிதா உனக்கு கேடுதான்! உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கேட்பான்.

அதற்கவர், “இல்லை உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன்” எனக் கூறிவிட்டு,  இறைவன் நாடிய வாக்குறுதிகளையும், உறுதி மொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார்.

ஆகவே, அல்லாஹ் அவரை சுவனத்தின் வாசல் வரை கொண்டு செல்வான். சுவனத்து வாசலின் முன்புறம் அவர் நிற்கும் போது சுவனத்தின் வாசல் அவருக்காக திறக்கும். அப்போது, அவர் சுவனத்து சுக போகங்களை சுவனவாசிகள் அனுபவிப்பதைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய நேரம் வரை அமைதியாக நிற்பார்.

பிறகு, “என் இறைவா! என்னை சுவனத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கூறுவார். அப்போது, அல்லாஹ் அவரிடம் “உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒரு போதும் என்னிடம் கேட்கமாட்டேன் என முன்னர் உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் நீ என்னிடம் வழங்கவில்லையா?” என்று கேட்டு விட்டு, மனிதா உனக்கு கேடுதான்! உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கேட்பான்.

அதற்கவர், “என் இறைவா! உன் படைப்புகளிலேயே துர்பாக்கியசாலியாக நான் ஆகிவிடக்கூடாது” என்று பிரார்த்திக் கொண்டே இருப்பார். இறுதியில் அல்லாஹ் அவரின் செயல் கண்டு சிரித்து விடுவான். அவரைக் கண்டு சிரித்த அந்தக் கணத்திலேயே “சுவனத்தில் நுழைந்து கொள்” என்று கூறுவான்.

சுவனத்தில் அவர் நுழைந்த பின்னர் “நீ விரும்பியதை ஆசைப்படு” என்று அல்லாஹ் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார்.

இறுதியில், அல்லாஹ்வே அவருக்கு ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாக நினைவு படுத்தி “இன்னதை நீ ஆசைப்படு, இன்னின்னதை நீ ஆசைப்படு” என்று கூறுவான்.

கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும். அதன் பின்னர் அல்லாஹ், “நீ விரும்பிக் கேட்ட இதுவும் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று கூறுவான்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிற இன்னொரு அறிவிப்பில்…

فيسمع أصوات أهل الجنة فيقول : أي رب أدخلنيها ، فيقول : يا ابن آدم ، ما يصريني منك ؟ أيرضيك أن أعطيك الدنيا ومثلها معها ؟ قال : يا رب أتستهزئ مني وأنت رب العالمين ؟ فضحك ابن مسعود ، فقال : ألا تسألوني مم أضحك ؟ فقالوا : مم
تضحك ؟ قال : هكذا ضحك رسول الله ( صلى الله عليه وآله ) ، فقالوا : مم تضحك يا رسول الله ؟ قال ( صلى الله عليه وآله ) : من ضحك رب العالمين حين قال : أتستهزئ مني وأنت رب العالمين ؟ فيقول : إني لا أستهزئ منك ،

தங்களிடம் பயின்ற மாணவர்களிடையே ஒரு நாள் இந்தச் செய்தியை அறிவிக்கும் போது…

அவர் சுவனத்தில் நுழைந்ததும், அல்லாஹ் அவரைப் பார்த்து

        ( நூல்: புகாரி, பாபு கவ்லில்லாஹி “உஜூஹுய் யவ்மயிதின் நாளிரா” )

حدثنا محمد بن أبي عمر المكي حدثنا سفيان عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة فقالوا كيف يا رسول الله قال يقاتل هذا في سبيل الله عز وجل فيستشهد ثم يتوب الله على القاتل فيسلم فيقاتل في سبيل الله عز وجل فيستشهد وحدثنا أبو بكر بن أبي شيبة وزهير بن حرب وأبو كريب قالوا حدثنا وكيع عن سفيان عن أبي الزناد بهذا الإسناد مثله

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ இரு மனிதர்களின் விஷயத்தில் ”அல்லாஹ் சிரிக்கின்றான்”  ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்கிறார் இவரும், கொலை செய்யப்பட்டவரும் சுவர்க்கத்தில் நுழைவதைக் கண்டு அல்லாஹ் சிரிக்கின்றான்” என்று நபி {ஸல்} அவர்கள் தம் தோழர்கள் நிரம்பியிருந்த ஓர் சபையில் கூறிய போது...

“அல்லாஹ்வின் தூதரே! அது எப்படி சாத்தியமாகும்?” என்று நபித்தோழர்கள் வினவ, அதற்கு நபி {ஸல்} அவர்கள் “போர்க்களத்தில் எதிரும் புதிருமாக இரு அணிகளில் உள்ள இருவர், ஒருவர் அல்லாஹ்வின் சத்திய சன்மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலந்து கொண்டவர். மற்றொருவர், சத்திய இஸ்லாம் மேலோங்கக் கூடாது எனும் முனைப்போடு எதிர்க் களத்தில் பங்கு பெற்றவர்.

எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாம் மேலோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கலந்து கொண்டவரை களத்தில் கொலை செய்கிறார். அவருக்கு ஷஹீத் உடைய அந்தஸ்து வழங்கப்படுகிறது. அவர் சுவனத்தில் நுழைவிக்கப் படுகிறார்.

பின்நாளில், எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாத்தைத் தழுவுகின்றார். பின்னர் தாம் எதிரும் புதிருமாய் இருந்த காலத்தில் யுத்த களத்தில் செய்த கொலைக்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பாச் செய்கிறார்.

அல்லாஹ் அவருக்கும் ஓர் நற்பேற்றை வழங்குகின்றான். அவர் சத்திய சன் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்கிற அடிப்படையில் நடக்கிற யுத்தத்தில் கலந்து கொண்டு தீனுக்காக தம் உயிரை அர்ப்பணிக்கிறார், ஷஹீதாகின்றார். எனவே, இவரும் சுவனத்தில் நுழைவிக்கப்படுகின்றார்” என்று கூறிய அண்ணலார் இதன் காரணத்தினாலேயே அல்லாஹ் சிரிக்கின்றான்” என்று கூறினார்கள்

( நூல்: அபூதாவூத் )

உதாரணத்திற்கு ஹம்ஸா (ரலி) அவர்களை இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் வஹ்ஷீ (ரலி) அவர்கள் கொலை செய்திருப்பார்கள். இஸ்லாத்திற்கு வந்த பின்னர் யமாமா யுத்தத்தில் பொய்யன் முஸைலமாவை கொன்று விட்டு அந்தப் போரில் தாமும் ஷஹீத் ஆகிவிடுவார்கள்.

(حديث مرفوع) حَدَّثَنَا مُحَمَّدٌ مِنْ لَفْظِهِ ، حَدَّثَنِي أَبُو الْمَيْمُونِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدٍ الْمُعَدَّلُ , مِنْ لَفْظِهِ سَنَةَ ثَمَانٍ وَتِسْعِينَ وَثَلاثِ مِائَةٍ ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عِيسَى أَبُو الْعَبَّاسِ الْعَمَّارِيُّ بِالأَثَارِبِ ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْعَمِّيُّ ، حَدَّثَنَا هُشَيْمٌ ، حَدَّثَنَا مُجَالِدُ بْنُ سَعِيدٍ ، عَنْ أَبِي الْوَدَّاكِ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلاثَةٌ يَضْحَكُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ : الرَّجُلُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يُصَلِّي ، وَالْقَوْمُ إِذَا صَفُّوا لِلصَّلاةِ ، وَالْقَوْمُ إِذَا صَفُّوا لِقِتَالِ الْعَدُوِّ " . غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ سَعْدِ بْنِ مَالِكِ بْنِ سِنَانٍ الْخُدْرِيِّ ، لا أَعْلَمُ حَدَّثَ بِهِ عَنْهُ غَيْرَ أَبِي الْوَدَّاكِ جَبْرِ بْنِ نَوْفٍ ، وَمَا كَتَبْنَاهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ ، وَحَدَّثَ بِهِ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ، عَنْ رَجُلٍ عَن هُشَيْمٍ ، فَكَأَنِّي سَمِعْتُهُ مِنْ عَبْدِ اللَّهِ ابْنِهِ .

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மூன்று வகை மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ் சிரிப்பான். முதல் வகையினர், இரவில் நின்று வணங்கிய வணக்கசாலிகள். இரண்டாம் வகையினர், தொழுகைக்காக ஸஃப்ஃபில் அணிவகுத்து நின்றவர்கள். மூன்றாம் வகையினர், போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திப்பதற்காக அணிவகுத்து நின்றவர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                ( நூல்: இப்னு மாஜா )

وأما ما ذكرته من كون الله تعالى إذا ضحك لعبد فلا حساب عليه، فقد روى أحمد في مسنده هذا الحديث وصححه الألباني رحمه الله ولفظه: وإذا ضحك ربك إلى عبد في الدنيا فلا حساب عليه.

அல்லாஹ் சிரிக்கிறான் என்பதற்கு என்ன பொருள் என்பதை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் விளக்கம் தருகிற போது “எவரைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றானோ அவரை அல்லாஹ் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் நுழைவித்து விடுவான்” என கூறினார்கள்.    

  ( நூல்: அஹ்மத் )

No comments:

Post a Comment