அழுகையும், சிரிப்பும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்!!
அழுகையும் சிரிப்பும் மனிதனுக்கு இயற்கையாக ஏற்படுகிற சுபாவங்களில் ஒன்றாகும்.
கவலையும், துக்கமும், கஷ்டமும், நோவினையும் ஏற்படுகிற போது மனிதன் அழுகின்றான்.
மகிழ்ச்சியும், சந்தோஷமும், இன்பமும், வெற்றியும் ஏற்படுகிற போது மனிதன் சிரிக்கின்றான்.
யதார்த்தத்தில் இது மனிதனுக்கு ஏற்படுகிற உணர்வாக இருந்தாலும் கூட உண்மையில் அழவைப்பவனும், சிரிக்கவைப்பவனும் இறைவன் தான் என்று இஸ்லாம் போதிக்கின்றது.
وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى ()
”மேலும், அவனே சிரிக்க வைக்கின்றான்; அவனே அழவும் வைக்கின்றான்”
(அல்குர்ஆன்: 53:43 )
ஏனெனில், எந்த ஒரு மனிதனாலும் நான் சாகும் வரை சிரிக்கவே மாட்டேன் என்றோ, நான் சாகும் வரை அழவே மாட்டேன் என்றோ உறுதியிட்டுக் கூற முடியாது.
மனித வாழ்க்கையை அல்லாஹ் இத்தகைய உணர்வுகள் சுழன்று வரும் வகையிலேயே அமைத்திருக்கின்றான்.
ஆகவே, மனிதன் அழுவதாகட்டும், சிரிப்பதாகட்டும் அதனதன் எல்லைகளில், வரம்புகளில் நின்று கொள்ள வேண்டும் என்றும், அதற்காக நாளை மறுமையில் கூலி வழங்கப்படும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ ()
“அவர்கள் குறைவாக சிரிக்கட்டும்; அதிகமாக அழட்டும்! ஏனெனில், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றின் அளவு கூலி கொடுக்கப்படுவார்கள்”.
(அல்குர்ஆன்: 9:82 )

No comments:
Post a Comment