Thursday, 25 September 2014

ஹதீஸ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), 

"முஆத்! அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். 
நான், 

"அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே வணங்கப்பட வேண்டும். அவனுக்கு எதுவும் இணையாக்கப்படக்கூடாது"என்று கூறிவிட்டு, 

"அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கு இணைகற்பிக்காமல்)செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள்.

அதற்கு நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

"(இத்தகைய) அடியார்களை அவன் (#மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதாகும்" என்று சொன்னார்கள். இதை அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 50.

No comments:

Post a Comment