மனைவியிடம் உணர்ச்சியை தூண்டும் வகையில் செல்போனிலோ அல்லது நேரிலோ பேசலாமா?
கணவன் மனைக்கு இடையில் இதுபோன்று நடப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் அடுத்த ஆணை வர்ணித்து, பெண்ணை வர்ணித்து உணர்ச்சியை தூண்டும் வகையில் செய்யக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம்-அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல் :புகாரி (5240)
வெளிநாட்டில் இருப்பவர் தன் மனையிடம் உணர்ச்சியை தூண்டும் வண்ணம் பேசுவது சரியல்ல. ஏனெனில் அப்பெண் தவறுவதற்கு இந்த பேச்சுகள் வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம்.
No comments:
Post a Comment