ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான |
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
சிறியவர்,பெரியவர், சுதந்திரமானவர், அடிமை அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.புகாரி:1512.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தும் ஃபித்ரா:
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.புகாரி:1509. ஃபித்ரா |
No comments:
Post a Comment