Tuesday, 3 November 2020

ஸாலிஹீன்களாக (நல்லவர்களாக) வாழ ஆசைப்படுவோம்!!!

 ஸாலிஹீன்களாக (நல்லவர்களாக) வாழ ஆசைப்படுவோம்!!


ஸாலிஹான நல்லடியாராக வாழ்வதென்பது அல்லாஹ் வழங்கும் அற்புதமான வரமாகும். மகத்தான கொடையாகும்.


ஓர் ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் எல்லா வகையிலும் அல்லாஹ்வால் மேன்மை படுத்தப்பட்ட மேன்மக்களான நபிமார்களும் கூட ஸாலிஹீன்களாக வாழ்வதற்கு விரும்பியிருக்கின்றார்கள்.


அந்தப் பாக்கியம் கிடைக்கப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்தித்தும் இருக்கின்றார்கள்.


அந்த அளவிற்கு அற்புதங்களும், அருள்வளங்களும் நிறைந்த ஓர் உன்னதமான வாழ்வு தான் ஸாலிஹான நல்லடியாராக வாழ்வது.


இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்…


رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ()


“என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை நீ ஸாலிஹான உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக!”  (அல்குர்ஆன்:26:83 )

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...