Pages

Tuesday, 17 November 2020

பாவமன்னிப்பு...

 பாவமன்னிப்பு துஆக்கள் பற்றின நபிமொழி தொகுப்பு



" اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ".


حكم الحديث: حديث صحيح رجاله ثقات

என் இறைவா ! என்னை மன்னித்தருள் எனக்கு கருணை காட்டு ,என் தவறை மன்னித்து அருள்செய் , நிச்சயமாக நீ தான் பாவங்களை மன்னிக்கக் கூடியவன் பெரும் கருணையாளன் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள் ( ஹதீஸ் சுருக்கம்)


நூல் : முஸ்னத் அஹ்மத் 5354 தரம் : ஸஹீஹ்


 

اللَّهُمَّ إنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، ولَا يَغْفِرُ الذُّنُوبَ إلَّا أنْتَ، فَاغْفِرْ لي مَغْفِرَةً مِن عِندِكَ، وارْحَمْنِي إنَّكَ أنْتَ الغَفُورُ الرَّحِيمُ.


الراوي : أبو بكر الصديق | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 834 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! நிச்சயமாக நான் எனக்கு அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன்; உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை; உன் புறத்திலிருந்து எனக்கு விசேஷமான மன்னிப்பை வழங்கு! எனக்குக் கருணை காட்டு !

நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன் என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்ததாக அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹுல் புஹாரி 834 தரம் : ஸஹீஹ்


رَبِّ قِنِي عَذَابَكَ يَومَ تَبْعَثُ، أَوْ تَجْمَعُ، عِبَادَكَ.


الراوي : البراء بن عازب | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 709 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! உன் தண்டணையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக ! உன் அடியார்களை நீ ஒன்று சேர்க்கும் நாளில் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக பராஉ பின் ஆஸிப்( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 709 தரம் : ஸஹீஹ்


اللَّهمَّ ربَّ جَبرائيلَ وميكائيلَ ، وربَّ إسرافيلَ ، أعوذُ بِك من حرِّ النَّارِ ، ومن عذابِ القبرِ


الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 5534 | خلاصة حكم المحدث : صحيح


என் இறைவா ! ஜிப்ரயீல் மற்றும் மீக்காயீலுடைய இறைவனே ! இஸ்ராஃபீலுடைய இறைவனே ! நரகத்தின் உஷ்ணத்தை விட்டும் ,கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்து வந்ததாக முஃமீன்களின் அன்னை ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹ் நஸாயீ 5534 தரம் : ஸஹீஹ்


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي ؛ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ.


حكم الحديث: صحيح


என் இறைவா.. நிச்சயமாக நீ ஒருவன்; தனித்தவன்; முழுமையானவன்;எவருடையத் தேவையுமற்றவன்; நீ யாரையும் பெற்றெடுக்கவுமில்லை; யாருக்கும் பிறந்தவனுமில்லை; உனக்கு நிகராக எதுவும் இல்லை என்று கூறி உன்னிடம் கேட்கிறேன்

என் இறைவா ! எனக்கு என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருள் ! நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன் நிகரற்ற அன்புடையவன் .


நூல் : நஸாயீ 1301 தரம் : ஸஹீஹ்


عَنِ النبيِّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، أنَّهُ كانَ يَدْعُو بهذا الدُّعَاءِ: اللَّهُمَّ اغْفِرْ لي خَطِيئَتي وَجَهْلِي، وإسْرَافِي في أَمْرِي، وَما أَنْتَ أَعْلَمُ به مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لي جِدِّي وَهَزْلِي، وَخَطَئِي وَعَمْدِي، وَكُلُّ ذلكَ عِندِي، اللَّهُمَّ اغْفِرْ لي ما قَدَّمْتُ وَما أَخَّرْتُ، وَما أَسْرَرْتُ وَما أَعْلَنْتُ، وَما أَنْتَ أَعْلَمُ به مِنِّي، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ علَى كُلِّ شيءٍ قَدِيرٌ.


الراوي : أبو موسى الأشعري عبدالله بن قيس | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2719 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! எனது குற்றத்தையும் அறியாமையையும் என் காரியத்தில் நான் வரம்பு மீறியதையும் என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கும் என் குற்றங்களையும் எனக்கு மன்னிப்பாயாக.

என் இறைவா ! நான் முந்திச் செய்ததையும் ,பிந்திச் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் ,வெளிப்படையாகச் செய்ததையும் என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கும் என் குற்றங்களையும் எனக்கு நீ மன்னித்துவிடு.


நீதான் முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக அபூ மூஸா ( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2719 தரம் : ஸஹீஹ்


اللَّهمَّ اغفِرْ ذنبَه وطهِّرْ قلبَه وحصِّنْ فرْجَه


الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 370 | خلاصة حكم المحدث : إسناده صحيح


என் இறைவா ! எனது குற்றத்தை மன்னித்தருள் ! எனது உள்ளத்தை தூய்மைப்படுத்து ! எனது கற்பைப் பாதுகாத்துக் கொள் என்று நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 370 தரம் : ஸஹீஹ்


رَبِّ اغْفِرْ لي خَطِيئَتي يَومَ الدِّينِ.


الراوي : عائشة أم المؤمنين | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 214 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! மறுமை நாளில் எனது தவறை மன்னித்தருள் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக அன்னை ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 214 தரம் : ஸஹீஹ்


سبحانَ اللهِ وبحمدِهِ، سبحانَكَ اللهمَّ وبحمدِكَ، أشهدُ أنْ لا إلهَ إلَّا أنتَ أستغفرُكَ وأتوبُ إليكَ، ...


الراوي : جبير بن مطعم | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 81 | خلاصة حكم المحدث : صحيح على شرط مسلم


அல்லாஹ்விற்க்கே புகழ் அனைத்தும் அவனையே துதிக்கிறேன்.இறைவா உன்னை புகழ்ந்து துதிக்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன் உன் பக்கமே மீளுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்தார்கள் என ஜுபைர் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 81 தரம் : ஸஹீஹ்

சாபத்திற்குரியவர்கள்...

 சாபத்திற்குரியவர்கள் பற்றிய நபிமொழி தொகுப்பு


مَنْ آذَى المسلِمينَ في طُرُقِهمْ وجَبَتْ عليه لعنَتُهُمْ


الراوي : حذيفة بن أسيد وأبو ذر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 5923 | خلاصة حكم المحدث : حسن


முஸ்லிம்கள் பயன்படுத்தும் பாதைகளில் அவர்களுக்கு ஒருவர் இடைஞ்சல் தந்தால் அவர் மீது முஸ்லிம்களின் சாபம் உண்டாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என ஹுதைபா இப்னு அஸீத் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹுல் அல் ஜாமி 5923 தரம் : ஹஸன்


اتَّقوا الملاعِنَ الثَّلاثَ : البَرازَ في المواردِ، وقارِعةِ الطَّريقِ، والظِّلِّ


الراوي : معاذ بن جبل | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 139 | خلاصة حكم المحدث : صحيح


தண்ணீர் துறைகளில், நடைபாதைகளின் ஒரத்தில், நிழல் உள்ள இடத்தில் மலம் கழித்தல் ஆகிய சாபத்திற்குரிய மூன்று செயல்களை அஞ்சிக்கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : அல் ஜாமிவு ஸகீர் 139 தரம் : ஸஹீஹ்


لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ البَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ.


الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 6799 | خلاصة حكم المحدث : [صحيح]


அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹுல் புஹாரி 6799 தரம் : ஸஹீஹ்


ملعونٌ من أتى امرأتَهُ في دبرِها


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2162 | خلاصة حكم المحدث : حسن


யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2162 தரம் : ஹஸன்


لعنَ رسولُ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ الرَّاشِيَ والْمُرْتَشِيَ


الراوي : عبدالله بن عمرو | المحدث : الترمذي | المصدر : سنن الترمذي | الصفحة أو الرقم : 1337 | خلاصة حكم المحدث : حسن صحيح


இலஞ்சம் வாங்குபவனையும் இலஞ்சம் கொடுப்பவனையும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சபித்தார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ரு ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸுனன் திர்மிதீ 1337 தரம் : ஹஸன் ஸஹீஹ்


لَعَنَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقالَ: هُمْ سَوَاءٌ.


الراوي : جابر بن عبدالله | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1598 | خلاصة حكم المحدث : [صحيح]


வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், "இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்" என்று  நபி ஸல் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1598 தரம் : ஸஹீஹ்


لعَنَ اللهُ مَن لعنَ والدَه ، و لعَنَ اللهُ مَن ذَبِحَ لغيرِ اللهِ ، و لعَنَ اللهُ مَن آوى مُحْدِثًا، و لعَنَ اللهُ مَن غيَّرَ منارَ الأرضِ.


الراوي : علي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4434 | خلاصة حكم المحدث : صحيح


தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல்,மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்" என நபி ஸல் கூறியதாக அலி ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் நஸாயீ 4434 தரம் : ஸஹீஹ்


مَن أشارَ إلى أخِيهِ بحَدِيدَةٍ، فإنَّ المَلائِكَةَ تَلْعَنُهُ، حتَّى يَدَعَهُ، وإنْ كانَ أخاهُ لأَبِيهِ وأُمِّهِ.


الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2616 | خلاصة حكم المحدث : [صحيح]


ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால்,அவர் அதைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே" என்று  நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2616 தரம் : ஸஹீஹ்


لَعَنَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ الواصِلَةَ والمُسْتَوْصِلَةَ.


الراوي : أسماء بنت أبي بكر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5936 | خلاصة حكم المحدث : [صحيح]


நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும்  சபித்தார்கள். என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் புஹாரி 5936 தரம்: ஸஹீஹ்


رَأَيْتُ أبِي اشْتَرَى حَجَّامًا، فأمَرَ بمَحَاجِمِهِ، فَكُسِرَتْ، فَسَأَلْتُهُ عن ذلكَ قالَ: إنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ نَهَى عن ثَمَنِ الدَّمِ، وثَمَنِ الكَلْبِ، وكَسْبِ الأمَةِ، ولَعَنَ الوَاشِمَةَ والمُسْتَوْشِمَةَ، وآكِلَ الرِّبَا، ومُوكِلَهُ، ولَعَنَ المُصَوِّرَ.


الراوي : وهب بن عبدالله السوائي أبو جحيفة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 2238 | خلاصة حكم المحدث : [صحيح]


என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரின் தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகிற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடுத்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்தி விடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!' என்று பதிலளித்தார்கள்!'


நூல் : ஸஹீஹ் புஹாரி 2238 தரம் : ஸஹீஹ்


لَعَنَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بالنِّسَاءِ، والمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بالرِّجَالِ


الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5885 | خلاصة حكم المحدث : [صحيح]


ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் நபி ஸல் சபித்தார்கள். என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் புஹாரி 5885 தரம் : ஸஹீஹ்


ملعونٌ من سبَّ أباهُ ملعونٌ من سبَّ أُمَّهُ ملعونٌ من ذبح لغيرِ اللهِ ملعونٌ من غيَّرَ تُخُومَ الأرضِ ملعونٌ من كَمَهَ أعمى عن طريقٍ ملعونٌ من وقع على بهيمةٍ ملعونٌ من عمل بعملِ قومِ لوطٍ


الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/266 | خلاصة حكم المحدث : إسناده صحيح


1.தன் தந்தையைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

2. தன் தாயைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

3.அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் ( பிராணிகளை ) அறுத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

4. பூமியின் ( எல்லைக் கல்,மைல் கல்,வரப்பு உள்ளிட்ட ) அடையாளங்களை மாற்றியமைத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

5. கண்பார்வை அற்றவரைத் தவறான வழியில் செலுத்தியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

6. விலங்கைப் புணர்ந்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

7. இறைத்தூதர் லூத் ( அலை) சமூகத்தாரின் ஈனச் செயலைச் ( தன்பாலுறவு) செய்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான் என்று நபி ஸல் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : முஸ்னத் அஹ்மத் 3/266 தரம் : ஸஹீஹ்



Thursday, 12 November 2020

நபியின் மீது ஸலவாத் கூறுவோம்...

 நபியின் மீது ஸலவாத் கூறுவோம்



إنَّ للَّهِ ملائِكةً سيَّاحينَ في الأرضِ ، يُبلِّغوني من أُمَّتي السَّلامَ


الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 1281 | خلاصة حكم المحدث : صحيح


நிச்சயமாக அல்லாஹ்வுக்கென சில மலக்குகள் இருக்கின்றனர் அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து என் உம்மத்தின் ஸலாமை எத்திவைக்கின்றனர் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் நஸாயீ 1281 தரம் : ஸஹீஹ்


أكْثِرُوا الصلاةَ عليَّ ، فإنَّ اللهَ وكَّلَ بي ملَكًا عند قبري ، فإذا صلَّى عليَّ رجلٌ من أُمَّتِي قال لي ذلك المَلَكُ : يا محمدُ إنَّ فلانَ بنَ فلانٍ صلَّى عليك الساعةَ


الراوي : أبو بكر الصديق | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1530 | خلاصة حكم المحدث : حسن


என் மீது ஸலாத்தை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் அல்லாஹ் என் மண்ணறையில் ஒரு

வானவரை சாட்டியுள்ளான். என் உம்மத்தில் ஒருவர் என் மீது ஸலவாத்துக் கூறினால்,

முஹம்மதே ! இன்னாரின் மகன் இன்னார் உங்கள் மீது இப்போது ஸலவாத்துக் கூறினார் என்று எனக்கு அந்த வானவர் கூறுவார் என்று நபி ஸல் கூறியதாக அபூபக்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்


 நூல் :ஸில்ஸிலா ஸஹீஹா 1530 தரம் : ஹசன்


ما مِن أحدٍ يسلِّمُ عليَّ إلَّا ردَّ اللَّهُ عليَّ روحي حتَّى أردَّ علَيهِ السَّلامَ


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2041 | خلاصة حكم المحدث : حسن 


எவராவது எனக்கு ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை மீட்டித் தராமலிருப்பதில்லை என நபி ஸல் கூறினார்கள் என்று அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2041 தரம் : ஹசன்


البخيلُ الَّذي مَن ذُكِرتُ عندَهُ فلم يصلِّ عليَّ


الراوي : علي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3546 | خلاصة حكم المحدث : صحيح 


உண்மையில் கஞ்சன் யாரென்றால் எவருக்கு முன்னால் என்னைப் பற்றி கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவர்தான் என நபி ஸல் கூறியதாக ஹுஸைன் பின் அலி ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3546 தரம் : ஸஹீஹ்


سمِع رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم رجلًا يدعو في صلاتِه لم يحمَدِ اللهَ ولم يُصَلِّ على النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: ( عجِل هذا ) ثمَّ دعاه فقال له: ( إذا صلَّى أحدُكم فليبدَأْ بتحميدِ اللهِ والثَّناءِ عليه ثمَّ ليُصَلِّ على النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم ثمَّ ليَدْعُ بعدُ بما شاء)


الراوي : فضالة بن عبيد | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 1960 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه


ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப் படுத்தாமலும் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வை அவர் புகழ்ந்து கண்ணியப் படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டட்டும் என்று கூறினார்கள்.

என ஃபளாலா பின் உபைத் (ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1960 தரம் : ஸஹீஹ்

Friday, 6 November 2020

பள்ளிவாசல் கட்ட உதவுவது...

 பள்ளிவாசல் கட்ட உதவுவது


مَن بَنى مَسجدًا للَّهِ كمِفحَصِ قَطاةٍ ، أو أصغرَ ، بَنى اللَّهُ لَهُ بيتًا في الجنَّةِ


الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 609 | خلاصة حكم المحدث : صحيح


யாரேனும் அல்லாஹ்வுக்காக புறா போன்ற பறவையின் இறக்கை அளவோ அல்லது அதனை விட சிறிய அளவோ பள்ளிவாயில் கட்டுவதில் பங்கெடுத்துக் கொண்டால் அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 609 தரம் : ஸஹீஹ்

அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) அவர்கள் சிரித்திருக்கின்றார்கள்…..

 அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) 

 அவர்கள் சிரித்திருக்கின்றார்கள்….


حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - إِذْ جَاءَهُ رَجُلٌ ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ . قَالَ « مَا لَكَ » . قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِى وَأَنَا صَائِمٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا » . قَالَ لاَ . قَالَ « فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ » . قَالَ لاَ . فَقَالَ « فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا » . قَالَ لاَ . قَالَ فَمَكَثَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِىَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالْعَرَقُ الْمِكْتَلُ - قَالَ « أَيْنَ السَّائِلُ » . فَقَالَ أَنَا . قَالَ « خُذْهَا فَتَصَدَّقْ بِهِ » . فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّى يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الْحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِى ، فَضَحِكَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ « أَطْعِمْهُ أَهْلَكَ » .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி(ﷺ‬)  அவர்களுடன் அமர்ந்திருந்த சபைக்கு ஸுலைமான் இப்னு ஸஃக்ர் அல்பயாளீ (ரலி) எனும் நபித்தோழர் வந்தார். வந்தவர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார்.


அல்லாஹ்வின் தூதர் (ﷺ‬) 

 அவர்கள் “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார்கள். நான் ரமழானில் நோன்பு நோற்றுக் கொண்டு என் மனைவியுடன் பகலில் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று ஸுலைமான் (ரலி) பதில் கூறினார்கள்.


அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் “இதற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “என்னால் இயலாது” என்றார்.


அப்படியானால், ”இரண்டு மாதங்கள் தொடர்படியாக நோன்பு நோற்க வேண்டும் உம்மால் இயலுமா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்று கூறிவிட்டார்.


அப்படியென்றால், அதற்குப் பரிகாரமாக “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். உம்மால் இயலுமா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்று கூறி விட்டார்.


அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) 

 அவர்கள் கொஞ்ச நேரம் அப்படியே எங்களுடனே அமர்ந்திருந்தார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன்பாக பேரீத்தம் பழங்கள் நிறைந்த “அரக்” எனும் பெரிய கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது.


அப்போது, நபி {ஸல்} அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ”இதோ நான் இங்கிருக்கின்றேன்” என்று கூறி ஓரிடத்திலிருந்து எழுந்து நபி {ஸல்} அவர்களின் அருகே வந்தார்.


”பேரீத்தம் பழக்கூடையை நீர் எடுத்துச் சென்று உம்முடைய அந்தச் செயலுக்குப் பரிகாரமாக ஏழைகளுக்குத் தர்மம் செய்வீராக!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


அப்போது, அவர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்குத் தானே நான் தர்மம் செய்ய வேண்டும்?” அப்படியானால், இதோ தெரிகிற மதீனாவின் இரு கரும்பாறைகளுக்கு – மலைகளுக்கு இடையே வசிப்போரில் என் குடும்பத்தாரை விடப் பரம ஏழை யாருமில்லை” என்று கூறினார்.


இதைக் கேட்ட நபி {ஸல்} அவர்கள் “தங்களது கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்; பிறகு, “இதை உம் குடும்படத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்று கூறினார்கள். 


( நூல்: புகாரீ, முஸ்லிம் )


ஆக வாழ்வில் யதார்த்தமாக நடக்கிற நிகழ்வின் போதோ, நகைச்சுவையான சம்பவங்களின் போதோ சிரிப்பது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இந்த உம்மத்திற்கு தெளிவானதொரு வழியைக் காண்பித்து இருக்கின்றார்கள்.


ஆனால், சதா எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது, பிறரை கேலி செய்து சிரிப்பது, பிறர் துன்பத்தைக் கண்டு சிரிப்பது, நயவஞ்சகத்தோடு சிரிப்பது, பொய்யாகச் சிரிப்பது போன்ற சிரிப்புக்களை இஸ்லாம் விமர்சிக்கிறது.


 சில சிரிப்புக்களால் பாவங்கள் உருவாகும் என எச்சரிக்கின்றது.


حدثنا علي بن محمد حدثنا أبو معاوية عن أبي رجاء عن برد بن سنان عن مكحول عن واثلة بن الأسقع عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة كن ورعا تكن أعبد الناس وكن قنعا تكن أشكر الناس وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا وأحسن جوار من جاورك تكن مسلما وأقل الضحك فإن كثرة الضحك تميت القلب


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களை நோக்கி ”அபூஹுரைராவே! பேணுதலைக் கடைபிடித்து வருவீராக! நீர் ஏனைய மக்களை விட உயர்ந்த வணக்கசாலி ஆகிவிடுவீர்! போதுமென்ற மனத்தைக் கொண்டவராக வாழ்வீராக! ஏனைய மக்களை விட அல்லாஹ்விற்கு அதிகம் நன்றி செலுத்துபவராக ஆகிவிடுவீர்! உமக்கு விரும்புவதையே நீர் பிறர் விஷயங்களிலும் விரும்புவீராக! நீர் முழுமையான இறைநம்பிக்கையாளனாக ஆகிவிடுவீர்! உமக்கு தீங்கிழைத்தோருக்கும் நீர் நலவை நாடுவீராக! நீர் முழுமையான முஸ்லிமாக ஆகிவிடுவீர்!


அபூஹுரைராவே! குறைவாகவே சிரிப்பீராக! ஏனெனில், அதிகமாகச் சிரிப்பது உள்ளத்தை  ( மௌத்தாக்கி விடுகிறது) சரிவர இயங்கவிடாமல் செய்து விடுகிறது” என்று கூறினார்கள்.                                         ( நூல்: இப்னு மாஜா )


قال الفقيه ابو الليث السمرقندي :اياك وضحك القهقهة فان فيه ثمانيا من الافات 

اولها :ان يذمك العلماء والعقلاء

الثانيه: ان يجترئ عليك السفهاء والجهال

والثالثة : انك لو كنت جاهلا ازداد جهلك وان كنت عالما نقص علمك

والرابعة : ان فيه نسيان الذنوب الماضية

والخامسة : فيه جراءة على الذنوب في المستقبل لانك اذا ضحكت يقسو قلبك

والسادسة : ان فيه نسيان الموت وما بعده من امر الاخرة

والسابعة : ان عليك وزر من ضحك بضحكك

والثامنة : انه يجزي بالضحك القليل بكاء كثيرا في الاخرة


அல்லாமா அபுல்லைஸ் அஸ்ஸமர்கந்தீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மை சப்தமாகச் (வெடிச் சிரிப்பு) சிரிப்பதன் விஷயத்தில் எச்சரிக்கின்றேன். ஏனெனில், அதன் காரணத்தால் எட்டு விதமான பேராபத்துகள் ஏற்படுகின்றன.


1. உம்மை அறிவுடையோரும், ஆலிம்களும் சபிப்பார்கள்.

2. உம் விஷயத்தில் அறிவிழந்தோரும், மடையர்களும் துணிவு பெற்றிடுவார்கள்.

3. நீர் அறிவிலியாக இருந்தால் உம் அறியாமை இன்னும் அதிகரிக்கும். நீர் கற்றறிந்தவனாக, ஆலிமாக இருந்தால் உம் கல்வி குறைந்து விடும்.

4. கடந்த காலத்தில் செய்த பாவங்கள் மறந்து விடும்.

5. எதிர் காலத்தில் பாவம் செய்வதின் மீது உமக்கு துணிவு ஏற்பட்டு விடும். ஏனெனில், உள்ளம் தான் இயங்காமல் இருக்கிறதே.

6. மரணத்தைப் பற்றிய ஞாபகமோ, மறுமையைப் பற்றிய சிந்தனையோ உமக்கு இருக்காது.

7. நீர் சிரித்த உம் சிரிப்பால் உம்மீது ஒரு பாவம் எழுதப்படுகின்றது.

8. மறுமையில் அல்லாஹ் உம்மை அழுகையைக் கொண்டு சோதிப்பான்.


                              ( தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம் 1, பக்கம்: 152 )


وروى عن ابن عباس رضي الله عنه أنه قال : من أذنب وهو يضحك دخل النار وهو يبكي .


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “எவனொருவன் சிரித்துக் கொண்டே பாவத்தில் ஈடுபடுகின்றானோ அவன் அழுது கொண்டே நரகில் நுழைவான்”.


قال يحيى بن معاذ الرازي رحمه الله : أربع خصال لم يبقين للمؤمن ضحكاً ولا فرحاً : همّ المعاد - يعني همّ الآخرة . وشغل المعاش ، وغم الذنوب ، وإلمام المصائب .


யஹ்யா இப்னு முஆத் அர்ராஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான்கு அம்சங்கள் ஓர் இறைநம்பிக்கையாளனை சிரிக்கவோ, மகிழ்ச்சியாக இருக்கவோ விடாது.


1. மறுமை பற்றிய கவலை. 

2. உலக வாழ்வு சம்பந்தமாக உழைப்பில் ஈடுபடுவது.

 3. பாவத்தை நினைத்து கவலை கொள்வது. 

4. சோதனைகளில் உழன்று கொண்டிருப்பது. 

இந்நான்கு அம்சங்களைக் கொண்டிருக்கிற் ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வென்பது சிரிப்பதற்கான அவகாசத்தையே தராது. ஆகவே, இந்த நான்கில் ஏதாவது ஒன்றில் உம்மை ஈடுபடுத்து, அது உம்மை சிரிப்பதில் இருந்தும் காப்பாற்றி விடும். ஏனெனில், சிரிப்பு என்பது இறைநம்பிக்கையாளனின் குணமோ, அடையாளமோ அல்ல.”


         ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 148 )


وَقِيلَ : مَرَّ الْحَسَنُ الْبَصْرِيُّ بِشَابٍّ وَهُوَ يَضْحَكُ ، فَقَالَ لَهُ : يَا بُنَيَّ هَلْ جُزْتَ عَلَى الصِّرَاطِ ؟ قَالَ : لَا فَقَالَ : هَلْ تَبَيَّنَ لَكَ ، إِلَى الْجَنَّةِ تَصِيرُ أَمْ إِلَى النَّارِ ؟ قَالَ : لَا.


قَالَ : فَفِيمَ هَذَا الضَّحِكُ ؟ قَالَ : فَمَا رُؤِيَ الْفَتَى ضَاحِكًا بَعْدَهُ قَطُّ.


يَعْنِي أَنَّ قَوْلَ الْحَسَنِ وَقَعَ فِي قَلْبِهِ فَتَابَ عَنِ الضَّحِكِ.


ஒரு நாள் இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் இளைஞன் ஏதோ ஒரு காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.


அவனிடம், ஓ மகனே! நீ ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து விட்டாயா? என்று கேட்டார். அவன், ”இல்லை” என்றான்.


நீ சுவனம் செல்வாயா? அல்லது நரகம் செல்வாயா? என்பது உமக்கு தீர்மானமாகத் தெரிந்து விட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கவன் “இல்லை” என்றான். அப்படியென்றால், எதற்காக நீ இப்படிச் சிரிக்க வேண்டும்? என்று மீண்டும் கேட்டார்கள்.


இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுகின்றார்கள்: “ இந்த நிகழ்வுக்குப் பின்னர் அந்த இளைஞனை சிரிப்பவனாக ஒரு போதும் நான் கண்டதில்லை. நான் கூறியநல்லுபதேசம் அவனுடைய உள்ளத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றது.”


 ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 149 )

பூகம்பம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து படிப்பினை பெற வேண்டும்...

 பூகம்பம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களில்  இருந்து படிப்பினை  பெற வேண்டும்...


 


இந்த மனித சமூகம் தீய வழிகளிலிருந்து விலகி நேர்வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும், பாவங்களில் இருந்து தம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், இறைவன் வகுத்த வரம்புகளில், எல்லைகளில் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பன போன்ற பல பாடங்களையும், படிப்பினைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான பேரிடர்களையும், பேரிழப்புக்களையும் அல்லாஹ் ஏற்படுத்துகின்றான்.


أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ () أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ ()


“வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும், அப்போது உடனே பூமி அதிரத்தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? இவைகள் வந்து விட்டால் பிறகு உங்களுக்கு தெரிந்து விடும் எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!”                                                    

( அல்குர்ஆன்: 67:16,17 )


ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ ()


“மனிதர்களின் கரங்கள் செய்த தீய வினைகளினால் அம்மனிதர்கள் படிப்பினைப் பெற்று திருந்தி திரும்ப வேண்டும் என்பதற்காக அத்தீய வினைகள் சிலதின் பிரதிபலனை தண்டனையை அவர்களுக்கு அல்லாஹ் உணரச்செய்வதற்காக கடலிலும், கரையிலும் பெரும் ஆபத்துக்களை விளைவிக்கின்றான்”.

                                                          (அல்குர்ஆன்:30:41)


حدثنا علي بن حجر حدثنا محمد بن يزيد الواسطي عن المستلم بن سعيد عن رميح الجذامي عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع قال أبو عيسى وفي الباب عن علي وهذا حديث غريب لا نعرفه إلا من هذا الوجه


“என் சமூகத்தினர் பதினைந்து வகையான பாவங்களை மிகச் சாதாரணமாகக் கருதி செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களின் மீது சோதனைகளும் வேதனைகளும் இறங்கிவிடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது…


அல்லாஹ்வின் தூதரே! அவைகள் என்ன? என்று நபித்தோழர்கள் வினவ, அப்போது நபி {ஸல்} அவர்கள் 


“ஃகனீமத் சொந்தப்பொருளாகவும், அமானிதம் ஃகனீமத் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால்,


 ஜகாத்தை கடன் சுமை போன்று கருத ஆரம்பித்து விட்டால்,

 கணவன் மனைவிக்கு அடிபணிபவனாக ஆகிவிட்டால், 

தன் தாய்க்கு நோவினை கொடுத்து, 

தன் நண்பனுக்கு முன்னுரிமை அளித்து, தந்தைக்கு அநீதம் இழைத்தால்,

 ஒரு மனிதனுக்கு அவனுடைய தீங்கை நினைத்து கண்ணியம் கொடுக்கப்பட்டால்,

 சமுதாயத் தலைவர்கள் கீழ்த்தரமானவர்களாக மாறி விட்டால்,

 மஸ்ஜித்களில் உலகப்பேச்சு பெருகி விட்டால், 

மது பகிரங்கமாக அருந்தப்பட்டால், பட்டாடைகள் அணியப்பட்டால், பாடகிகளையும், இசைக் கருவிகளையும் பிரதானமாகக் கருத ஆரம்பித்தால், 

இந்த உம்மத்தின் மேன்மக்களான முன்னோர்கள் பின்னோர்களால் தூற்றப்பட்டால்”  

நீங்கள் கொடுங்காற்றையும், பூமியில் புதையுண்டு போவதையும், உருமாற்றம் செய்யப்படுவதையும் எதிர் பாருங்கள்” என நவின்றார்கள்.                                      


(நூல்: திர்மிதீ )


ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் “மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.                                   

( நூல்: இப்னு அபீ ஷைபா )


எனவே, நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும், எப்போதாவது, என்றைக்காவது நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும் தீர்க்கமான பாடத்தையும், தெளிவான படிப்பினையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.


அதிலும் குறிப்பாக இரத்தத்தை உறைய வைக்கிற, உள்ளத்தை பதற வைக்கிற கோரமான பேரிடர்களில் இருந்து நிறைவான பாடத்தைப் பெற வேண்டும்.


அப்போது தான் இந்த உலக வாழ்க்கை மன நிறைவாகவும், மறு உலக வாழ்க்கை சோபனம் நிறைந்ததாகவும் ஆகும்.


அல்லாஹ் நம் அனைவர்களையும் அவன் ஆற்றலை விளங்கி, முழுக்க முழுக்க அவனை அஞ்சி, வணங்கி வழிபட்டு வாழும் பாக்கியத்தைத் தந்தருள் புரிவானாக! ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!

பிறரைக் கேலி செய்து சிரிப்பது கூடாது…..

 பிறரைக் கேலி செய்து சிரிப்பது கூடாது….


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌  وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏ 


”இறைநம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம், கேலி செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம், கேலி செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம்.                                  ( அல்குர்ஆன்: 49:11 )


புஹ்லூல் மஃப்தூன் என்கிற மாமேதை இவர்கள் ஹாரூன் ரஷீத் அவர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்கள். புஹ்லூல் (ரஹ்) அவர்களை சக காலத்தில் வாழ்ந்த எல்லா மேதைகளும், அறிஞர்களும் மரியாதையும், கண்ணியமும் செலுத்தி வந்திருக்கின்றனர்.


ஆனால், மக்களும் நாடும் அவரை பைத்தியக்காரன் என்றே அழைத்தது. இதற்கு ஆட்சியாளர் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களும் விதிவிலக்கல்ல. அவரும் புஹ்லூல் (ரஹ்) அவர்களை பைத்தியக்காரன் என்றே அழைத்தார்.


يحكى أن بهلول كان رجلا مجنونا فى عهد الخليفة العباسي هارون الرشيد ..

ومن طرائف بهلول أنه مرعليه الرشيد يوما وهو جالس على إحدى المقابر ..

فقال له هارون معنفا "

يا بهلول يا مجنون متى تعقل ؟ "

فركض بهلول وصعد إلى أعلى شجرة ثم نادى على هارون بأعلى صوته "

ياهارون يا مجنون متى تعقل ؟"

فأتى هارون تحت الشجرة وهو على صهوة حصانه وقال له " أنا المجنون أم أنت

الذى يجلس على المقابر "

فقال له بهلول " بل أنا عاقل "

قال هارون وكيف ذلك ؟

قال بهلول "

لأنى عرفت أن هذا زائل

وأشار إلى قصر هارون

وأن هذا باق وأشار إلى القبر ،

فعمرت هذا قبل هذا ،

وأما أنت فإنك قد عمرت هذا ( يقصد قصره ) وخربت هذا ( يعنى القبر ) ..

فتكره أن تنتقل من العمران إلى الخراب

مع أنك تعلم أنه مصيرك لامحال ،

وأردف قائلا " فقل لي أينا المجنون ؟" ،

فرجف قلب هارون الرشيد من كلمات بهلول وبكى حتى بلل لحيته وهو يقول " والله إنك لصادق .."

ثم قال هارون زدنى يا بهلول

فقال بهلول " يكفيك كتاب الله فالزمه . "

قال هارون " ألك حاجة فأقضيها "

قال بهلول: نعم ثلاث حاجات إن قضيتها شكرتك

قال فاطلب ،

قال : " أن تزيد فى عمري "

قال : "لا اقدر "

قال : أن تحميني من ملك الموت

قال : لا أقدر

قال :" أن تدخلنى الجنة وتبعدنى عن النار "

قال : " لا أقدر "

قال : فاعلم انت مملوك ولست ملك " ولاحاجة لي عندك "


ஒரு முறை அரசு முறை பயணமாக வெளியூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த கலீஃபா ஹாரூன் அவர்களின் பார்வையில் அந்தக் காட்சி தென்படுகிறது.


பார்வையில் பட்ட அந்த இடத்தை நோக்கி வந்தார்கள். அது ஒரு மண்ணறை அங்கே புஹ்லூல் (ரஹ்) அமர்ந்து அழுது கொண்டிருக்கின்றார்.


அருகே வந்த ஹாரூன் அவர்கள் “பைத்தியக்காரரே! எப்போது உமது பைத்தியம் தெளிந்தது. எப்போது நீர் அறிவு பெற்றீர் என்று கேலியாகக் கேட்டார்.


அப்போது, அருகில் இருந்த மரத்தில் ஏறி, மரத்தின் மத்தியப் பகுதியில் அமர்ந்து கொண்டு மன்னர் ஹாரூனை சப்தமாக அழைத்தார்.


மன்னர் குதிரையில் அமர்ந்தபடி, மரத்தின் அருகே வந்தார். அப்போது மன்னரை நோக்கி “ஓ பைத்தியக்கார மன்னனே! எனக்கு இப்போது பைத்தியம் தெளிந்து விட்டது. உமக்கு எப்போது பைத்தியம் தெளியப்போகிறது?” என்று கேட்டார்.


அதிர்ந்து போன மன்னர் ஹாரூன், ஆவேசமாக புஹ்லூல் (ரஹ்) அவர்களை நோக்கி “உம்மைத் தான் ஊர் மக்கள் பைத்தியம் என்று சொல்கின்றார்கள். நீ பைத்தியமா? அல்லது நான் பைத்தியமா?” என்று கேட்டார்.


அதற்கு, புஹ்லூல் (ரஹ்) அவர்கள் ”நான் தெளிவோடு தான் இருக்கின்றேன். நீர் தான் பைத்தியக்காரனாய் அலைகின்றீர்” என்றார்.


எப்போது நீர் பைத்தியத்திலிருந்து தெளிவு பெற்றீர் என மன்னர் புஹ்லூலை நோக்கி கேட்ட போது மன்னனின் மாளிகை இருந்த இடத்தைக் காட்டி “இது அழிந்து போகும்” மண்ணறையைக் காட்டி “இது தான் நிரந்தரமானது” என்பதை நான் எப்போது உணர்ந்தேனோ அப்போதே நான் தெளிவு அடைந்து விட்டேன். மேலும், அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக வாழாமல் நிரந்தரமான இந்த மண்ணறை வாழ்க்கைக்காக வாழ ஆரம்பித்து விட்டேன்.


ஆனால், நீரோ இன்னமும் அழிந்து போகும் இவ்வுலக வாழ்விற்காக, சொகுசு வாழ்க்கையை வாழ்கின்றீர்! நிரந்தரமான ஓர் வாழ்க்கையை உணர்த்தும் மண்ணறை வாழ்க்கைக்காக என்றாவது வாழ்ந்திருக்கின்றீரா?” இப்போது சொல்லும்! நீர் பைத்தியக்காரரா? நான் பைத்தியக்காரனா?” என்று.


இந்த வார்த்தையைக் கேட்டதும் தான் தாமதம், மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தன் அகக்கண்ணை திறந்து விட்ட புஹ்லூல் (ரஹ்) அவர்களை நன்றிப் பெருக்கோடு பார்த்து விட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்கின்றேன்! நீர் உண்மையாளர்! பைத்தியக்காரர் அல்ல” என்று கூறினார்கள்.


பின்னர், ”புஹ்லூல் அவர்களே! எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள்!” என்றார் ஹாரூன் ரஷீத் அவர்கள். “உம் வாழ்க்கையை அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்!” என்று புஹ்லூல் (ரஹ்) உபதேசித்தார்கள்.


மன்னர் விடைபெறுகிற போது, புஹ்லூல் (ரஹ்) அவர்களே! உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் நம்மிடம் சொல்லுங்கள்! நாம் நிறைவேற்றித் தருகின்றோம்!” என்றார்கள்.


ஆம்! மன்னரே! எனக்கு மூன்று தேவைகள் இருக்கின்றன, நீங்கள் நிறைவேற்றுவீர்களா?” என்று கேட்டார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள்.


”ஓ! தாராளமாக சொல்லுங்கள் நிறைவேற்றி விடலாம்” என்று மன்னர் பதில் கூறினார்.


அப்போது, புஹ்லூல் (ரஹ்) அவர்கள் “என் ஆயுளை நீட்டித்தர வேண்டும்” என்றார். அதற்கு மன்னர், “என்னால் இது இயலாது” என்றார்.


பரவாயில்லை, ”ரூஹைக் கைப்பற்றும் வானவரிடம் இருந்தாவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்றார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள். அதற்கும் மன்னர் “என்னால் இது இயலாது” என்றார்.


சரி, சரி “நரகத்தை விட்டு என்னை தூரமாக்கி, சுவனத்தில் என்னை நுழைவிக்கச் செய்தால் போதும்” என்றார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள். அதற்கும் மன்னர் “என்னால் இது இயலாது” என்றார்.


இதைக் கேட்ட புஹ்லூல் (ரஹ்) அவர்கள், மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களைப் பார்த்து “அறிந்து கொள்ளும்! நீர் ஒரு அடிமை தான், நீர் ஒன்றும் அரசனல்ல. ஆகவே, உம்மிடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை.” என்று பதில் கூறினார்கள்.


                                                  

( நூல்: வஃபாவுல் வஃபா )


ஆக, சிரிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவசியத்திற்கு சிரித்துக் கொள்ள வேண்டும். சிரிப்பதால் ஏராளமான நன்மைகள் விளைவதாக அறிவியல் உலகும், மருத்துவ உலகும் கூறுகின்றன.


அளவுக்கதிகமாக சிரிக்கிற போது அது உலக வாழ்வையும், மறுமை வாழ்வையும் சீரழித்து விடுவதாக இஸ்லாமிய அறிஞர்கள் எச்சரிக்கின்றன.


ஆகவே, அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று குறைவாகச் சிரிப்போம்!    ஈருலகிலும் வளமாக வாழ்வோம்!


           அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!!

                         வஸ்ஸலாம்!!!

வெற்றியிலிருந்து பெற வேண்டிய பாடமும்… படிப்பினையும்…

 வெற்றியிலிருந்து பெற வேண்டிய பாடமும்… படிப்பினையும்…


ஸைப்ரஸ் இது சிரியாவின் மேற்கே அமைந்திருந்த ஓர் அழகிய தீவு. ஆனால், இப்போது இஸ்லாமியர்களுக்கெதிரான அபாயகரமான தீவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.


ஆம்! ரோமர்கள் முஸ்லிம்களுடன் தோற்றுப் போய் ஓடி ஒளிந்து அங்கு தான் தஞ்சம் புகுந்திருந்தனர். இப்போதோ அவர்கள் பெருமளவில் ஆயுதங்களைத் திரட்டி வலுவான கப்பற்படையை உருவாக்கி முன்னர் அடைந்த தோல்விக்கு பலி வாங்கும் முகமாக தயாராகி முஸ்லிம்களை அழிக்க நாள் குறித்துக் கொண்டிருந்தனர்.


இந்த தீவின் மீது படையெடுத்து அங்கேயும் ரோமர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முஆவியா (ரலி) அவர்களுக்கு இருந்தது. ஆயினும், உமர் (ரலி) அவர்கள் அதற்குள் ஷஹாதா வீரமரணம் அடைந்து விட்டார்கள்.


இதே கருத்தை உஸ்மான் (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் தெரிவித்த போது உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.


இதற்கு முன்னர் நடந்த போர்கள் அனைத்தும் நிலங்களிலும், பாலைவனங்களிலும் நடைபெற்றது. ஆனால், இது முற்றிலும் வேறுபட்டு கடல் மார்க்கமாக நடைபெறும் போராகும். ஆகவே, எந்த ஒரு முஸ்லிமையும் நிர்பந்திக்காமல், வற்புறுத்தாமல் படை வீரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு சைப்ரஸ் மீது போர் தொடுக்க அனுமதி வழங்கினார்கள்.


அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய அல்லவா போர் நடத்தப் படுகின்றது. ஆர்வமாக பலர் வந்து இணைந்து கொள்கின்றார்கள். அந்தப் படையில் அபூதர் அல் ஃகிஃபாரீ (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவரின் மனைவி உம்மு ஹராம் பிந்த் மில்ஹான் (ரலி), அபூதர்தா (ரலி) ஆகிய மூத்த நபித்தோழர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.


அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் படை கடல் மார்க்கமாக புறப்பட்டுச் சென்றது.


அல்லாஹ் அந்தப் போரை வெற்றிகரமாக முடித்து வைத்தான். இந்தப் போர் ஹிஜ்ரி 28 மற்றும் 29 –இல் நடைபெற்றது.


ஏராளமான பொருட்செல்வங்கள் ஃகனீமத்தாக வந்து சேர்ந்தன. அந்தச் செல்வங்களை எல்லாம் முஸ்லிம் வீரர்கள் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.


كانت الدنيا كلها في عين أبي الدرداء مجرّد عارية..

عندما فتحت قبرص وحملت غنائم الحرب الى المدينة رأى الناس أبا الدرداء يبكي... واقتربوا دهشين يسألونه، وتولى توجيه السؤال اليه:" جبير بن نفير":

قال له:

" يا أبا الدرداء، ما يبكيك في يوم أعز الله فيه الاسلام وأهله"..؟؟

فأجاب أبو الدرداء في حكمة بالغة وفهم عميق:

ويحك يا جبير..

ما أهون الخلق على الله اذا هم تركوا أمره..

بينما هي أمة، ظاهرة، قاهرة، لها الملك، تركت أمر الله، فصارت الى ما ترى"..!

أجل..


அதையெல்லாம் கண்ட அபூதர்தா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அருகில் இருந்த ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் “அபூதர்தா அவர்களே! அல்லாஹ் சத்திய சன்மார்க்கத்திற்கு வலுவையும், வெற்றியையும் தந்திருக்கும் இந்த தருணத்தை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் வரவேற்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கின்றீர்களே?” ஏன் என்ன காரணத்திற்காக அழுகின்றீர்கள்?”.


அபூதர்தா (ரலி) அவர்கள் வினா தொடுத்த ஜுபைரை நோக்கி “ஜுபைரே! அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றியாக வழங்கிக்கொண்டிருக்கின்றான். வெற்றியும் ஆட்சியும், நிலப்பரப்பும் விரிவடைந்து, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகள் விஷயத்தில் முஸ்லிம்கள் பொடுபோக்காக இருந்து விட்டால் எத்தகைய கேவலமானவர்களாக அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் காட்சி தருவார்கள்?”


ஜுபைரே! இதோ, நம் கண் முன்னே வீழ்ந்து கிடப்பவர்களும், கைதியாய் நிற்பவர்களும் யார் தெரியுமா? நேற்று வரை இந்தப் பூமியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்து, அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் இருந்ததால், இன்று நம்மிடம் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.


இதைப் போன்ற ஓர் மனோநிலை இந்த பொருட்செல்வங்களையும், வெகுமதிகளையும் கண்டு பிரமித்து நிற்கிற முஸ்லிம்களுக்கு ஏற்படுமானால், இன்றைய இந்த வெற்றி நாளை என்னவாகும்?” இவர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே?” என்று நினைத்து தான் நான் அழுகின்றேன்” என்றார்கள் அபூதர்தா (ரலி) அவர்கள்.


மனிதன் உலக வாழ்வில் பெறுகின்ற வெற்றியில் இருந்தும், முன்னேற்றத்தில் இருந்தும் எத்தகைய உயரிய படிப்பினையையும், பாடத்தையும் பெற வேண்டும் என்பதை அபூதர்தா (ரலி) அவர்கள் நமக்கு உணர்த்துகின்றார்கள்.

وروى جبير بن نفير، عن عوف بن مالك أَنه رأَى في المنام قبة من أَدَم في مرج أَخضر، وحول القبة غَنَم رَبوض تجتر وتَبعر العجوة، قال: قلت: لمن هذه القبة ؟ قيل: هذه لعبد الرحمن بن عوف. فانتظرناه حتى خرج فقال: يا ابن عوف، هذا الذي أَعطى الله عز وجل بالقرآن، ولو أَشرفت على هذه الثنيه لرأَيت بها ما لم تر عينك، ولم تسمع أذنك، ولم يخطر على قلبك مثله، أَعد. الله لأَبي الدرداء إِنه كان يدفع الدنيا بالراحتين والصدر.


அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரலி) எனும் சீரிய நபித்தோழர். ஃபத்ஹ் மக்காவின் போது அஷ்ஜயீ கோத்திரத்தாரின் அணியை தலைமையேற்று வழி நடாத்தி தமது கோத்திரத்தாரின் கொடியை நபிகளாரின் ஆணைக்கிணங்க பிடித்தபடி மக்காவில் நுழையும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.


ஒரு நாள் கனவொன்று கண்டார்கள். அந்தக் கனவில் பரந்து விரிந்த ஓர் சோலைவனம். நிழல் படர்ந்த அடர்த்தியான மரங்கள். அதன் நடுவே உயர்ந்த மாடங்கள் கொண்ட ஓர் அழகிய கூடாரம். முழுக்க தோலினால் ஆன அழகிய கூடாரம் அது. தம் வாழ்நாளில் அதுவரை கண்டிராத கூட்டம் கூட்டமாக செம்மறி ஆட்டின் மந்தை!


இவ்வளவு உயர்ந்த இந்த பூஞ்சோலை யாருக்குரியது?” என வினவினாராம் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள். தூரத்தில் இருந்து “இது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரியது” என்று அசரீரி வந்தது.


அசரீரியைக் கேட்டுக் கொண்டே முன்னெறிய போது கூடாரத்தின் உள்ளிருந்து வெளியேறிய அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், அவ்ஃப் இப்னு மாலிக்கிடம் சொன்னார்களாம்: “அவ்ஃபே! இது அல்லாஹ் நமக்கு தருவதாக குர்ஆனில் வாக்களித்திருந்தவைகளாகும்.


அதோ தெரிகிறதே அந்த மேடான பகுதிக்குச் சென்றால் அங்கே நீர் கற்பனைக்கு எட்டாதவைகளை எல்லாம் காண்பீர்” என்றார்கள்.


அப்போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் “அது யாருக்கு உரியது அபூ முஹம்மத் அவர்களே?” என்று வினவ, வல்ல ரஹ்மான் தோழர் அபூதர்தா (ரலி) அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.


ஏனெனில், அவர் உலகில் வாழும் போது தமது முழு ஆற்றலையும் பயன் படுத்தி உலக வளங்களை விட்டும், சுக போக வாழ்வை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆதாலால் இன்று மிகப்பெரிய செல்வந்தனாக மாறிப்போனார்” என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்களாம்.


இதை ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


  ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}…., உஸ்துல் காபா )


உலக வாழ்வின் பல பகுதிகளில் இருந்தும் தேவையான பாடங்களையும், படிப்பினைகளையும் பெறுகின்றவர்களால் மட்டுமே இது போன்ற உன்னதமான அந்தஸ்தைப் பெற இயலும் என்பதை மேற்கூரிய நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

மறுமையில் இறைவனை பார்க்க முடியாதவர்கள்...

 மறுமையில் இறைவனை பார்க்க முடியாதவர்கள் பற்றின நபிமொழிதொகுப்பு 


1. அனுமதிக்கப்படாத உறவு முறை


لا ينظرُ اللهُ إلى رجلٍ أتَى رجلًا أو امرأةً في الدبرِ


الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1165 | خلاصة حكم المحدث : حسن


யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 1165 தரம் : ஹஸன்


2. தற்பெருமையுடன் ஆடையை அணிந்தவர்


لَا يَنْظُرُ اللَّهُ إلى مَن جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ.


الراوي : عبدالله بن عمر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5783 | خلاصة حكم المحدث : [صحيح]


தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹுல் புஹாரி 5783 தரம் : ஸஹீஹ்


3. மூன்றுவகையினர்


ثلاثةٌ لا ينظرُ اللهُ عزَّ وجلَّ إليهم يومَ القيامةِ : العاقُّ لوالديْهِ ، و المرأةُ المُترجِّلةُ ، و الدَّيُّوثُ .... 


الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 674 | خلاصة حكم المحدث : إسناده جيد


 மூன்று நபர்கள் அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்

1.பொற்றோரைத் துன்புறுத்துபவன்

2.ஆண்களை போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண்

3.தனது குடும்பத்துப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அறிந்தும் கண்டிக்காமலிருப்பவன் என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல்: ஸில்ஸிலா ஸஹீஹா 674 தரம் : ஸஹீஹ்


4.செய்த உதவியை சொல்லிகாட்டுபவர்கள்


ثلاثةٌ لا ينظر اللهُ إليهم يومَ القيامةِ، ولا يزكيهم، ولهم عذابٌ أليمٌ، الذي لا يعطي شيئًا إلا منه، والمسبلُ إزارَه، والمَنفِّقُ سلعتَه بالكذبِ


الراوي : أبو ذر الغفاري | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4471 | خلاصة حكم المحدث : صحيح


மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூதர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் நஸாயீ 4471 தரம் : ஸஹீஹ்


5. தீய குணம் கொண்டவர்கள்


ثَلاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ يَومَ القِيامَةِ ولا يُزَكِّيهِمْ، قالَ أبو مُعاوِيَةَ: ولا يَنْظُرُ إليهِم، ولَهُمْ عَذابٌ ألِيمٌ: شيخٌ زانٍ، ومَلِكٌ كَذّابٌ، وعائِلٌ مُسْتَكْبِرٌ.

الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 107 | خلاصة حكم المحدث : [صحيح]


மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்- அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களைப் பார்க்கவுமாட்டான்" என்றும் இடம்பெற்றுள்ளது.- அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர்(தாம் அம்மூவரும்).என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


 நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 107 தரம் : ஸஹீஹ்


நபிகளாரின் நேர்மையான தீர்ப்பு...

 நபிகளாரின் நேர்மை


 : عن عائشة رضي الله عنها { أن قريشا أهمهم شأن المخزومية التي سرقت ، فقالوا : من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم ؟ فقالوا : ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم فكلمه أسامة ، فقال : أتشفع في حد من حدود الله ؟ ثم قام فاختطب ، فقال : إنما أهلك الذين من قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه ، وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد ، وايم الله : لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها } . 


3475. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். ”அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?” என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், ”அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?” என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்” என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), ”உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள். 


(ஸஹீஹ் புகாரி:3475)

Thursday, 5 November 2020

பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் கேட்கவேண்டிய பிரார்த்தனைகள்...

 குழந்தையை எதிர்பார்த்து கணவன் மனைவி கூடும் போது ஓத வேண்டிய துஆ.

‘உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளச் செல்லும்போது

بِسْمِ اللهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ
وَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا

‘அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு உறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டும் ஷைத்தானைத் தூரமாக்கி விடுவாயாக ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்தி விடுவாயாக.’ என்ற பிரார்த்தனையுடன் உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 141.

ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அறிவித்தார்.

‘(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவரின் புதல்வரையும் தவிர!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள். பிறகு அபூ ஹுரைரா (ரலி), ‘நீங்கள் விரும்பினால், ‘இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)’ எனும் (திருக்குர்ஆன் 03:36 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4548.

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰى وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏

(பின், தான் எதிர்பார்த்ததற்கு ) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
(அல்குர்ஆன் : 3:36)

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது ஷைத்தானின் தீண்டுதலினால் தான் அழுகின்றது. ஷைத்தானின் தீண்டுதலை விட்டும் எம் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் கட்டாயம் கணவன், மனைவி உடலுறவின் போது இப்பிரார்த்தனையை ஓத வேண்டும். மர்யம் (அலை) அவர்களின் தாயார் ஷைத்தானின் தீங்கை விட்டும் மர்யம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததியினரையும் பாதுகாக்குமாறு பாதுகாப்புத் தேடியமையால் ஷைத்தானால் அவர்களைத் தீண்ட முடியவில்லை.

2) குழந்தையை எதிர்பார்த்திருக்கும் காலத்தில் நபி இப்ராஹீம் (அலை) மற்றும் நபி ஸகரிய்யா (அலை) ஆகியோர் கேட்ட துஆ.

رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”
(அல்குர்ஆன் : 37:100)

رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏

“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் : 3:38)

அல்லாஹ் தான் நாடியோருக்கு இலகுவாக சிறுவயதினிலேயே குழந்தைப் பாக்கியத்தை வழங்குகிறான். அல்லாஹ் தான் நாடியோரை மலடாக ஆக்கி விடுகிறான். இன்னும் சிலருக்கு அல்லாஹ் வயோதிப வயதினில் குழந்தைப் பாக்கியத்தை வழங்குகிறான். அப்படி வயோதிப வயதில் குழந்தைப் பாக்கியாத்தைப் பெற்ற இறைத்தூதர்கள் தான் இவர்கள் இருவரும். அவர்கள் வெறுமனே குழந்தைப்பாக்கியத்தை மட்டும் கேட்காமல் ஸாலிஹான குழந்தையை அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுக்கு இஸ்மாஈல் (அலை) அவர்களையும் இஸ்ஹாக் (அலை) அவர்களையும் குழந்தையாக வழங்கினான். அவர்களின் சந்ததியினரில் பல நபிமார்களையும் சிறந்த மக்களையும் அல்லாஹ் வெளிப்படுத்தினான். நபி ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களை அல்லாஹ் குழந்தையாக வழங்கினான்.

3) குடும்பத்தின் கண்குளிர்ச்சிக்காக ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய துஆ .

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا.

25:74. ” “”எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக – (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!

திருமணம் என்ற நிகழ்வு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவரினதும் வாழ்கையில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. அந்த பந்தத்தில் கிடைக்கும் ஆனந்தம் நிலைக்க வேண்டுமெனில் எமது மனைவியிலும் எமது சந்ததியினரிலும் எமக்குக் கண்குளிர்ச்சி இருப்பது அவசியமாகும். அர்ரஹ்மானின் அடியார்கள் தனது வாழ்கைத் துணையிலும், குழந்தைகளிளும் கண்குளிர்ச்சியை வேண்டியும். தமது சந்ததியினரை முன்மாதிரி மிக்கவர்களாக ஆக்குமாறும் இந்த முறையில் பிரார்த்தனை செய்வார்கள் என அல்லாஹ் சொல்கிறான்.

4) இப்ராஹீம் (அலை) அவர்கள் பிள்ளைகளுக்காக கேட்ட துஆக்கள்.

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

“என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” 14 40

رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةًۭ مُّسْلِمَةًۭ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

2:128.“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக ஆக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَ‏

நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
(அல்குர்ஆன் : 14:35)

رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! – தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”
(அல்குர்ஆன் : 14:37)

இப்ராஹீம் (அலை ) அவர்கள் தனது சந்ததியினருக்காகக் கேட்ட பிரார்த்தனைகளில் மிகச்சிறந்த முன்மாதிரி எமக்குள்ளது. பொதுவாக நாம் அனைவரும் பிள்ளைகளுக்காகப் பிரார்த்தனை செய்தால் அவர்களின் ஆரோக்கியத்தை வேண்டியும், அவர்கள் உலகில் தலைநிமிர்ந்து வாழவும் தான் பிரார்த்தனை செய்வோம். ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்களோ பாலைவனத்தில் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அவர்களின் வாழ்கைக்கான உலக வளங்களுக்காக மட்டும் பிரார்த்திக்காமல், தான் ஒரு நபியாக இருந்தும், தனது பிள்ளைகள் நபியாக இருந்தும், தனது சந்ததியினரை இணைவைப்பிலிருந்து பாதுகாக்கும் படியும். தொழுகையை நிலைநாட்டுவோராகவும் , முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கூட்டத்தாரை தனது சந்ததியிலிருந்து வெளிப்படுத்துமாறும் பிரார்த்தனை செய்தார்கள். நாமும் இப்பிரார்த்தனைகளை எமது சந்ததியினருக்காக் கட்டாயம் கேட்க வேண்டும்.

5)இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மகன்களான நபி இஸ்மாஈல் (அலை), மற்றும் இஸ்ஹாக் (அலை) அவர்களுக்காகவும், நபி ﷺ அவர்கள் ஹஸன் (ரழி) மற்றும் ஹுஸைன் (ரழி) ஆகியோருக்காவும் ஓதிய பிரார்த்தனைகள்.

عن ابن عباس رضي اللّه عنهما قال
“كان رسولُ اللَّه صلى اللّه عليه وسلم يعوّذ الحسن والحسين

  1. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்
    நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் தேடி வந்தார்கள்.

أُعِيذُكُما بِكَلِماتِ اللَّهِ التَّامَّةِ

அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டும்

مِنْ كُلِّ شَيْطانٍ وَهامَّةِ،

ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும்

وَمِنْ كُلّ عَيْنٍ لامَّة

தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் தேடுகிறேன்’

ويقول: إنَّ أباكُما كان يُعَوِّذُ بِها إسْماعِيلَ وَإسْحاقَ” صلى اللّه عليهم أجمعين وسلم

எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் – என்று கூறுவார்கள்.
(ஸஹீஹ் புகாரி)

6) பெற்றோர் பிள்ளைகள் விடயத்தில் திருப்தி கொள்ள வேண்டும்.

இன்று ஒரு சில பிள்ளைகள் மார்கப் பற்றின்மையால் மிக மோசமான நடத்தையுடையோராக மாறி தொழுகையைப் பேணாதவர்களாகவும். பெற்றோரை மதிக்காதவர்களாகவும் , போதைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பதால் அவர்களைப் பெற்றவர்களே அப்பிள்ளைகளை ஏன் பெற்றெடுத்தோம்.? இவன் பிறக்காமல் இருந்தாலே நான் மானம், மரியாதையுடன் வாழ்ந்திருப்பேன் என்று பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே எமது பிள்ளைகளின் நேர்வழிக்காக அதிகம் நாம் பிரார்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் அல்ஹம்துலில்லாஹ் எனத் திருப்தி கொள்ளும் விதமாக எமது பிள்ளைகள் வளர வேண்டும். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது பிள்ளைகள் விடயத்தில் கூறிய வார்த்தையை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ‌ اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ‏

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன். (என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்)
(அல்குர்ஆன் : 14:39)

யா அல்லாஹ் எங்களையும் எங்களின் சந்ததியினரையும் ஜன்னதுல் பிர்தௌஸின் வாரிசுகளாக ஆக்கியருள்வாயாக..!

சிறந்த ஆசிரியர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்...

 சிறந்த ஆசிரியர் 

நபிகள் நாயகம் ﷺ அவர்கள்.

____________________________________


படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை  இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும்  பாதுகாப்பதற்காகத் தான்   இப்பூமிக்கு  இறுதித் தூதர் முஹம்மத்  (ﷺ) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் அல் குர்ஆனாகும். இறைவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி அகிலத்தாரை அல் குர்ஆனின் பக்கம் அதனைக் கற்றுக் கொடுத்து அழைக்கும் பணியாகும். 


அல்லாஹ் கூறுகின்றான்.


يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ


தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக.! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்.! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.


அல் குர்ஆன்  5:67


 وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ


நபியே நீர் மக்களுக்கு அருளப்பட்டதை  அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு நாம் அருளினோம்.


அல் குர்ஆன்  16:44


அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவர்களுக்கு அருளப்பட்ட வஹியை (அல் குர்ஆனை)  அழகிய முறையில் மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். அது மாத்திரமின்றி தனது வாழ்கையையும் அல் குர்ஆனிய வாழ்கையாக வாழ்ந்து காட்டினார்கள்.  செருப்பணிவது முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்துக்குமான வழிகாட்டல்களை நபிகளார் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். 


அல்லாஹ் சொல்லுகிறான்.


لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا


அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.


அல் குர்ஆன்  33:21


ஒரு ஆசிரியரிடம் எப்படியான பண்புகள்  இருக்க வேண்டும். மாணவர்களை எப்படி வழிநடாத்த வேண்டும். என்று  நபிகளாரின் முன்மாதிரிகளிலிருந்து ஆசிரியர்களுக்கான சில வழிகாட்டல்கள்.


1) கல்வி கற்பதை ஆர்வமூட்டல்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்று கூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.

 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

.

ஸஹீஹ் முஸ்லிம் : 5231.


'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்.. 

ஸஹீஹ் புகாரி : 71.


அல் குர்ஆனைத் தானும் கற்றுப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி)  புகாரி


'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 73


ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியின் சிறப்பு பற்றி அறிவுரை கூறி ஆர்வத்தோடு கற்க முயற்சி செய்யத் தூண்டுவது  ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும்.


2) மாணவர்களை அமைதியாக 

செவிதாழ்திக் கேட்கவைத்தல். 


'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!' என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்' என ஜரீர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 121. 


நபிகளார் தனது இருபத்தி மூன்று  வருட காலப் பிரச்சாரத்தையும் இரத்தினச் சுருக்கமாக நினைவு கூறிய அரபாப் பேருரையை துவங்க முன் முதலில் மக்களை அமைதிப்படுத்தினார்கள். ஒரு பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க முன் மாணவர்களை அமைதிப்படுத்துவது ஆசிரியரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும்.


3) உரத்த குரலில் கற்றுக் கொடுத்தல்.


'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் வுளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதி கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் .


ஸஹீஹ் புகாரி : 60.


(பெருநாள் தினத்தில்)

'பெண்களுக்குக் (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கருதி, பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்று அறிவுரை கூறினார்கள்.. 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 98. 


சில ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் கேட்கக் கூடியதாக இருக்கும். ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் போது குரலை உயர்த்தி மாணவர்கள் அனைவரும் கேட்கும் விதமாக ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். 


4) மாணவர்கள் மறந்து விடாது சரி வரக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே விடயத்தை மூன்று முறை மீட்டிக் கூறுதல். 


அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்கள். 


(ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், '

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்

 பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்' என்று கூறினார்கள். 'நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். 


ஸஹீஹ் புகாரி : 2654. 


'நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்' அனஸ்(ரலி)அவர்கள்  அறிவித்தார்கள். 

ஸஹீஹ் புகாரி : 95. 


5) மாணவர்களின் அறிவுத்திறனை

 வளர்ப்பதற்காக சிந்திக்கத் தூண்டும் கேள்விகளைக் கேட்டு பதிலைக் கற்றுக் கொடுத்தல்.


'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டபோது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' எனத் தோழர்கள் கேட்டதற்கு, 'பேரீச்சை மரம்' என்றார்கள்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 62. 


புத்தகத்தில் இருப்பதை அப்படியே வாசித்து விளக்கிவிட்டுச் செல்லாது மாணவர்களை சிந்திக்கத்தூண்டும் கேள்விகளினூடகக் கற்பிப்பது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வழிமுறையாகும். 


6) மாணவர்கள் சலிப்படையாது ஆர்வத்தோடு கல்வி கற்கும் விதத்தில்  கற்றுக் கொடுக்க வேண்டும்.


'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 69. 


'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாட்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்' என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

ஸஹீஹ் புகாரி : 68. 


'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்' எனஅபூ வாயில் அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 70. 


இன்று சிறு வயது முதல் கல்வியின் பெயரால் காலை,  மதியம் , மாலை,  இரவு  என எல்லா நேரங்களிலும் மாணவர்கள் ஓய்வின்றி கல்விக்காக அழைவதை நாம் காண்கிறோம் . இருபத்தி நான்கு  மணிநேரமும் படி படி என்று மாணவர்களை வற்புறுத்துவது கல்வியில் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தும் காரியமாகும் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


7) மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக உவமைளைக் கூறிக் கற்றுக் கொடுத்தல். 


'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன் படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 79. 


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய். 

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.


ஸஹீஹ் புகாரி : 5534. 


நேரடியாக ஒரு விடயத்தை விளக்குவதை விட உதாரணங்களைக் கூறி விளக்கும் போது அது மனதில் ஆலமாகப் பதியும்.  அதனால் தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் பல விடயங்களை சம்பவங்கள், மற்றும் உதாரணங்களைக் கூறி எமக்குத் தெளிவு படுத்தியுள்ளார்கள். இப்படியான முறைகள் ஆசிரியர்களாகிய எம்மிடம் இருக்க வேண்டும்.


8) சபையில் தவறு செய்யும் மாணவர்களின் தவறை அழகிய முறையில் திருத்திக் கொடுத்தல்.


முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:


நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். 


உடனே  மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள்.


 அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை.


அல்லாஹ்வின் மீதாணையாக!

அவர்கள் என்னைக் 

கண்டிக்கவுமில்லை..

அடிக்கவுமில்லை..

திட்டவுமில்லை...


(மாறாக,) அவர்கள், 

"இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று"


"தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் 

குர்ஆன் ஓதுவதுமாகும்" 


என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.


நான், "அல்லாஹ்வின் தூதரே! 

நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?" என்றேன்.


 அதற்கு அவர்கள் "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள். 


நான் "எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?" என்றேன். அதற்கு நபியவர்கள் "இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது "அவர்களை" அல்லது"உங்களை" (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்" என்று கூறினார்கள்.


 நான், "எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்" என்றேன். அதற்கு அவர்கள், "நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்" என்றார்கள்.


அடுத்து என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள். 


ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன்.  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.


நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!" என்று சொன்னார்கள். 


நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், "அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?" என்று நபியவர்கள் கேட்டார்கள்.


 அவள், "வானத்தில்” என்று பதிலளித்தாள்.


நபி அவர்கள், "நான் யார்?"  என்று கேட்டார்கள். 


அவள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்றாள். 


அவர்கள் (என்னிடம்), "அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்" என்றார்கள்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 935. 


.

நான் நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பையனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்குப் பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடு, என எனக்குக் கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். 

புகாரி, முஸ்லிம்


ஆசிரியர்களிடம் இருக்கும் மிக மோசமான பண்புகளில் ஒன்று தான் மாணவர்கள் தவறு செய்யும் போது அவர்களின் சுய கவ்ரவம் பாதிக்கும் விதத்தில் ஒருமையான வார்தைகளினூடாக சக மாணவர்களின் முன்னிலையில் ஏசுவது ,அடிப்பது , கடுகடுப்பது, அவமானப்படுத்துவது. இது போன்ற பண்புகள் மாணவர்களை மணம் புண்பட வைத்து பாடசாலையையும், படிப்பையும், ஆசிரியர்களையும் வெறுக்கும் அளவுக்கு மாற்றுகின்றது. இப்படியான முறைகளை பேராசிரியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களை உயிராக நேசித்த தோழர்களிடமோ, அவர்களை வெறுத்தவர்களிடமோ காட்டவில்லை. நபிகளார் தவறுகளை அழகிய முறையில் திருத்திக் கொடுத்துள்ளார்கள். 


9) கட்டுப்படாத மாணவர்களைக் கண்டித்தல்.


குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்து விட்டால் அடித்தாவது தொழ வையுங்கள்! என நபி (ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : அபுதாவூத்)


وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا [النساء/34]


பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால்


 1:அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! 2:படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! 3:(காயங்கள் ஏற்படாதவாரு)அவர்களை அடியுங்கள்! 


அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.


திருக்குர்ஆன் 4:34

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் (எவரையாவது தக்க காரணத்துடன்) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


நூல் : புகாரி 2559


இன்றைய உளவியலாளர்கள் மாணவர்களை அடிக்கவே கூடாது, கண்டிக்கவே கூடாது. அவர்கள் போக்கில் அவர்களை விட்டுவிட வேண்டும்  என்று சொல்கின்றார்கள்  . உண்மையில் இக்கூற்று நடைமுறை சாத்தியமற்ற கூற்றாகும். மாணவர்கள் வரம்பு மீறி ஒழுக்கக் கேடான காரியங்களில் ஈடுபடும் போது பெற்றோரின் ஆலோசனையுடன் காயங்கள் ஏற்படாத முறையில் அவர்களை திருத்த வேண்டும் எனும் நோக்கில் அடிப்பது தவறில்லை என்பதை மேலுள்ள குர்ஆன் வசனமும் ஹதீஸும் சொல்கின்றது. இதற்காக எடுத்ததற்கெல்லாம் அடிப்பது முறையில்லை அது அரக்கக் குணமாகும். சில ஆசிரியர்கள் மாணவர்கள் தப்புப்பன்னினால் கண்ணத்தில் அரைவதை வழக்கமாக் கொண்டுள்ளனர் இது தடுக்கப்பட்ட காரியமாகும்.


10) அறியாமையின் விபரீத விளைவுகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தல்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


அல்லாஹ், மக்களி(ன் மனங்களி)லிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துக்கொள்ள மாட்டான். மாறாக,கல்விமான்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் ஒரு கல்வியாளரைக்கூட அவன் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவில்லாமலேயே அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5191. 


'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன். என அனஸ்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 81. 


மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் கொள்ளும் விதமாக அவர்களுக்கு அறியாமையின் பின் விளைவுகளைப் பற்றி ஞாபகமூட்டுவது அவசியமாகும்.


11) கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு செவிதாழ்த்தி பதில் கூறுதல்.


அபூசயீத் அல்குத்ரீ  (ரலி) அவர்கள் கூறியதாவது:


(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் "எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும், அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை, தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள். 


அப்போது அந்த மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது.


 (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட)நாங்கள் அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள். 


பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்று விடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.


இந்த (உலகின்) செல்வம் இனிமையும், பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக்கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்" என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 1901. 


சில ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள் ஆனால்  மாணவர்கள் எதிர் கேள்வி கேட்பதை விரும்பமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவரைத் தேடியறிந்து பதில் கூறும் வழக்கமுடையவராக இருந்துள்ளார்கள். 


12) வினவப்பட்டதை விட விரிவாக பதில் கூறுதல்.


'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 134. 


மாணவர்களின் கேள்விக்காண பதிலைக் கூறும் போது அக் கேள்விக்குரிய நிறைவான பதிலை வழங்குவது கற்றறிந்த ஆசிறியரின் பண்பாகும்.


13) மாணவர்களின் உரிமைகளைப் பேணுதல்.


சஹ்ல் பின் சஅத்(ரலி)  அவர்கள் கூறியதாவது:    

                   

 நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் குடித்தார்கள். *அப்போது அவர்களுடைய வலது பக்கத்தில் ஒரு சிறுவரும் இடது பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர்.* நபி (ஸல்) அவர்கள் அந்த சிறுவரிடம், நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (என் பக்கத்திலுள்ள முதியவர்களுக்கு) கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்கள். 


அந்தச் சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை வேரொவருக்காகவும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி)ப் பானத்தை வைத்தார்கள்.


ஸஹீஹ் புகாரி 2602 


எல்லா நிலைகளிலும் மாணவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாது நடப்பது ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும்.


14) மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளைக்  கற்றுக் கொடுத்தல்.


மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


முஆவியா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) கூஃபாவுக்கு வந்தபோது நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "நற்குணங்கள் வாய்ந்தவரே உங்களில் மிகவும் சிறந்தவர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4640. 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும். 

என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 2547. 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;  பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5001. 


அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:


(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

பிறகு (உடலிலிருந்து பிரியும்) நாற்ற வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, "(அப்படிச் சிரிக்க வேண்டாமென தடை செய்தார்கள்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலுக்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?" என்று கேட்டு உபதேசித்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5484. 


ஆசிரியர்கள் மூலம் தான் இன்னும் பல ஆசிரியர்களையும் ,எல்லாத் துறைகளிலும் பட்டதாரிகளையும் உருவாக்க முடியும். எனவே ஒழுக்கமில்லாத கல்வியைப் புகட்டினால் எந்தப் பட்டதாரியையும் முழுமையான அறிவாளியாகக் காணமுடியாமல் போய்விடும். ஒழுக்கத்தோடு சேர்ந்த கல்வியைக் கொடுக்காமல் ஆசிரியர்களாகிய நாம் எப்படிப்பட்ட கல்விமான்களை உருவாக்கினாலும் அவர்கள் சமூகத்துக்கு பயனற்றவர்களாகவே இருப்பார்கள்.  அத்தகையோர் தங்களின் பட்டம் பதவிகளை கேடயாமாகப் பயன்படுத்தி சமூக சீர்கேடுகளையே மேற்கொள்வார்கள். மனிதநேயம் அவர்களிடம் இருக்காது. பேராசிரியர்  நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் தனது அழகிய குணத்தைக் கொண்டு சிறந்த மனிதர்களை உருவாக்கினார்கள். 


15) மாணவர்களிடமுள்ள திறமையைப் பாராட்டுதல்.


அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்" என்றார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5144. 


அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), "நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்). (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 1454. 


சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:


(நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்" என்று (பாராட்டிக்) கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள்....


ஸஹீஹ் முஸ்லிம் : 3695. 


மாணவர்களிடமுள்ள திறமைகளைப் பாராட்டுவது. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பரிசுகளை வழங்குவது போன்ற பண்புகள் ஆசிரியர்களிடம் இருந்தால் திறமையான மாணவர்கள் உருவாகுவது மட்டுமல்லாமல் ஆசிரியர், மாணவர் என்ற உறவில் நல்லிணக்கம் ஏற்படவும் அது காரணமாக  இருக்கும். திறமைகள் பாராட்டப்படாமல் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் சோர்வடைந்து பின் தள்ளப்பட்டு விடுவார்கள்.


16)ஆசிரியர்கள் மாணவர்களோடு அன்பாக நடக்க வேண்டும். 


فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏


(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.

(அல்குர்ஆன் : 3:159)


இன்று அதிகமான இடங்களில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது கீரியும், பாம்பையும் போன்றுள்ளது.  ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சிலரைப்  பிடிப்பதில்லை. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிலரைப் பிடிப்பதில்லை. இந்த நிலமை சமூகத்திலிருந்து அழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  சிலவேலை மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பண்புகள், நடத்தைகள், பேச்சுக்கள் போன்றவையே அவர்களை பிடிக்காமல் வெறுப்பதற்கான காரணங்களாகவும் இருக்கலாம் என்பதை உணர்ந்து தம் குறைகளை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் இறக்க குணமுடையவர்களாக நற்பண்புடன் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் தவறு செய்தால் மன்னித்து அறிவுரை கூற வேண்டும். சில வேலை நாம் நடத்தும் பாடம் மாணவர்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம் எனவே  பாட விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்து கற்பித்தல் முறையில் அவர்களுக்கு இலகுவாக  புரிந்து கொள்ள முடியுமான முறையை அறிந்து அவ்வழி முறையினூடாக பாடங்களைக் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். 


17) ஆசிரியர் மாணவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல்.


'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அணைத்து 'இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 75.


ஒவ்வொரு வகுப்பிலும் திறமையான மாணவர்களும் இருப்பார்கள் திறமையற்ற மாணவர்களும் இருப்பார்கள்.  எனவே ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களையும் தனது பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை புரிய வேண்டும். இது சிறந்த ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய பண்பாகும். பேராசிரியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மாணவர்களான நபித்தோழர்களுக்கு பல கட்டங்களிலும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.


18) ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம்  கேட்க வேண்டிய பிரார்த்தனை.


அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَالجُبنِ وَالبُخلِ، وَالهَرَمِ وَعَذَابِ القَبرِ، اللَّهُمَّ آتِ نَفسِي تَقوَاهَا، وَزَكِّهَا أَنتَ خَيرُ مَن زَكَّاهَا، أَنتَ وَلِيُّهَا وَمَولاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِن عِلمٍ لا يَنفَعُ، وَمِن قَلبٍ لا يَخشَعُ، وَمِن نَفسٍ لا تَشبَعُ، وَمِن دَعوَةٍ لا يُستَجَابُ لَهَا


பொருள்: 

இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5266.