நபியின் மீது ஸலவாத் கூறுவோம்
إنَّ للَّهِ ملائِكةً سيَّاحينَ في الأرضِ ، يُبلِّغوني من أُمَّتي السَّلامَ
الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 1281 | خلاصة حكم المحدث : صحيح
நிச்சயமாக அல்லாஹ்வுக்கென சில மலக்குகள் இருக்கின்றனர் அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து என் உம்மத்தின் ஸலாமை எத்திவைக்கின்றனர் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் நஸாயீ 1281 தரம் : ஸஹீஹ்
أكْثِرُوا الصلاةَ عليَّ ، فإنَّ اللهَ وكَّلَ بي ملَكًا عند قبري ، فإذا صلَّى عليَّ رجلٌ من أُمَّتِي قال لي ذلك المَلَكُ : يا محمدُ إنَّ فلانَ بنَ فلانٍ صلَّى عليك الساعةَ
الراوي : أبو بكر الصديق | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1530 | خلاصة حكم المحدث : حسن
என் மீது ஸலாத்தை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் அல்லாஹ் என் மண்ணறையில் ஒரு
வானவரை சாட்டியுள்ளான். என் உம்மத்தில் ஒருவர் என் மீது ஸலவாத்துக் கூறினால்,
முஹம்மதே ! இன்னாரின் மகன் இன்னார் உங்கள் மீது இப்போது ஸலவாத்துக் கூறினார் என்று எனக்கு அந்த வானவர் கூறுவார் என்று நபி ஸல் கூறியதாக அபூபக்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் :ஸில்ஸிலா ஸஹீஹா 1530 தரம் : ஹசன்
ما مِن أحدٍ يسلِّمُ عليَّ إلَّا ردَّ اللَّهُ عليَّ روحي حتَّى أردَّ علَيهِ السَّلامَ
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2041 | خلاصة حكم المحدث : حسن
எவராவது எனக்கு ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை மீட்டித் தராமலிருப்பதில்லை என நபி ஸல் கூறினார்கள் என்று அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2041 தரம் : ஹசன்
البخيلُ الَّذي مَن ذُكِرتُ عندَهُ فلم يصلِّ عليَّ
الراوي : علي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3546 | خلاصة حكم المحدث : صحيح
உண்மையில் கஞ்சன் யாரென்றால் எவருக்கு முன்னால் என்னைப் பற்றி கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவர்தான் என நபி ஸல் கூறியதாக ஹுஸைன் பின் அலி ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3546 தரம் : ஸஹீஹ்
سمِع رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم رجلًا يدعو في صلاتِه لم يحمَدِ اللهَ ولم يُصَلِّ على النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: ( عجِل هذا ) ثمَّ دعاه فقال له: ( إذا صلَّى أحدُكم فليبدَأْ بتحميدِ اللهِ والثَّناءِ عليه ثمَّ ليُصَلِّ على النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم ثمَّ ليَدْعُ بعدُ بما شاء)
الراوي : فضالة بن عبيد | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 1960 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப் படுத்தாமலும் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வை அவர் புகழ்ந்து கண்ணியப் படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டட்டும் என்று கூறினார்கள்.
என ஃபளாலா பின் உபைத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1960 தரம் : ஸஹீஹ்
No comments:
Post a Comment