Pages

Tuesday, 28 October 2014

‪#‎தனக்காக_பிறர்_எழுந்து_நிற்பதை_கூட_விரும்பாத_உத்தம_தூதர்‬(ஸல்) அவர்கள் →→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→

‪#‎தனக்காக_பிறர்_எழுந்து_நிற்பதை_கூட_விரும்பாத_உத்தம_தூதர்‬(ஸல்) அவர்கள்
→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ‘அமருங்கள்’ என்றனர். ‘‪#‎தனக்காக_மக்கள்_எழுந்து_நிற்க_வேண்டும்‬ என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது ‪#‎தங்குமிடத்தை_நரகத்தில்‬ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.
நூல்கள்: திர்மிதீ 2769
அபூதாவூத் 4552
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள்‪#‎அவர்களுக்காக_எழ_மாட்டோம்‬. இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895
திர்மிதீ 2678

Sunday, 26 October 2014

நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை), “சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:5 ஹதீஸ் எண்: 6071.

நபிமொழி

பிறருக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற நன்மைகளைக் கண்டு பொறாமை கொள்ளாத குணம் மிகவும் சிறந்த குணமாகும். அத்தகைய நபர் மனிதர்களில் சிறந்தவரும் கூட.
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مُغِيثُ بْنُ سُمَيٍّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَفْضَلُ قَالَ كُلُّ مَخْمُومِ الْقَلْبِ صَدُوقِ اللِّسَانِ قَالُوا صَدُوقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ الْقَلْبِ قَالَ هُوَ التَّقِيُّ النَّقِيُّ لَا إِثْمَ فِيهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ
நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் ‪#‎தூய_உள்ளம்_கொண்டவரும்‬ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது என்றார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இப்னுமாஜா 4206
‪#‎பிறர்_மீது_பொறாமைப்படாமல்_இருப்பதை_நம்_குணமாக்கி‬கொண்டால் இறைவன் நாடினால் அது நம்மை‪#‎சொர்க்கத்திற்கு‬ அழைத்து செல்லும் காரணியாக ஆகலாம்.
இது தொடர்பாக வரும் பின்வரும் ஹதீஸைப் படிக்கும்போது மறுப்பேதுமின்றி யாரும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்வோம்.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது தற்போது‪#‎சுவர்க்கவாசிகளில்_ஒருவர்_உங்களிடத்தில்_வருவார்‬ என்று அவர்கள் கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் ஒழூ செய்ததால் தாடியில் தண்ணீர் வடிகின்ற நிலையில் இடது கையில் தனது செருப்புகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்.
மறு நாளும் அதுபோன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள். அந்த மனிதர் மூன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அந்த மனிதரை (கண்காணிப்பதற்காக) பின்தொடர்ந்து சென்றார். (பிறகு கூறினார்)
நான் எனது தந்தையுடன் சண்டையிட்டு மூன்று நாட்கள் அவரிடம் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டேன். ஆகவே அந்நாட்கள் கழியும் வரை உங்களிடம் தங்க எனக்கு இடமளிப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் சரி என்றார்.
أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وُضُوئِهِ قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ فَلَمَّا كَانَ الْغَدُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الْأُولَى فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الْأُولَى فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ إِنِّي لَاحَيْتُ أَبِي فَأَقْسَمْتُ أَنْ لَا أَدْخُلَ عَلَيْهِ ثَلَاثًا فَإِنْ رَأَيْتَ أَنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ قَالَ نَعَمْ قَالَ أَنَسٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِي الثَّلَاثَ فَلَمْ يَرَهُ يَقُومُ مِنْ اللَّيْلِ شَيْئًا غَيْرَ أَنَّهُ إِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلَاةِ الْفَجْرِ قَالَ عَبْدُ اللَّهِ غَيْرَ أَنِّي لَمْ أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا فَلَمَّا مَضَتْ الثَّلَاثُ لَيَالٍ وَكِدْتُ أَنْ أَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلَا هَجْرٌ ثَمَّ وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلَاثَ مِرَارٍ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعْتَ أَنْتَ الثَّلَاثَ مِرَارٍ فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لِأَنْظُرَ مَا عَمَلُكَ فَأَقْتَدِيَ بِهِ فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ قَالَ فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنْ الْمُسْلِمِينَ غِشًّا وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ وَهِيَ الَّتِي لَا نُطِيقُ
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்:
நான் மூன்று நாட்களும் அவரிடத்தில் தங்கி கழித்ததில்‪#‎அவர்_இரவில்_நின்று_வணங்கவில்லை‬; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்;
பிறகு பஜ்ரு வரையும் தூங்குவார்கள். அந்த நாட்களில் பிறரைப் பற்றி தவறாக பேசி நான் அவரிடம் கேட்டதில்லை. மூன்று நாட்கள் கழிந்த பிறகு அவரின் நற்செயல்களைக் குறைவாக மதிப்பிட முற்பட்டேன். எனவே அந்த மனிதரிடம் இறையடியாரே (உண்மையில்) எனக்கும் என் தந்தைக்கும் இடையில் எந்த சண்டை, சச்சரவும் இல்லை, எனினும் ‘நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார் என்று மூன்று முறை கூறினார்கள்;
மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். எனவே தான் நான் உங்களிடம் தங்கி (சொர்க்கத்தில் நுழைவிக்கும் படி) தாங்கள் செய்யும் நற்செயல் எது? என்பதைப் பார்த்து நானும் அதை செய்ய விரும்பினேன். (அதற்காகவே தங்கினேன்) ஆனால் அதிகமான நற்செயல் எதுவும் செய்தததாக தங்களைக் காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்று’ அவரிடம் கேட்டேன். நீங்கள் பார்த்ததைத் தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை என்று கூறினார்.
நான் திரும்பிச் சென்ற போது என்னை திரும்ப அழைத்து நீங்கள் பார்த்ததை தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை எனினும் “‪#‎நான்_எந்த_முஸ்லிமுக்கும்_தீங்கிழைக்கும்_எண்ணம்_என்_உள்ளத்தில்_இருந்ததில்லை‬. மேலும் அல்லாஹ் யாருக்கு நன்மையை வழங்கியிருந்தாலும் (அதற்காக) அவர் மீது நான்‪#‎பொறாமை_கொள்ள_மாட்டேன்‬.” என்று கூறினார்.
அதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் இதுவே உங்களிடம் உள்ள(சிறந்த)து. ஆனால் இது நம்மால் இயலாது என்று கூறினார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
அஹ்மத் 12236
இறையருளிலிருந்து நம்மைத் தூரமாக்கும் பொறாமையிலிருந்து எப்போதும் நாம் தூரமாகவே இருக்க வேண்டும். இறைவன் பிறருக்கு வழங்கியவற்றில் ஒரு போதும் நாம் ‪#‎தீய_எண்ணம்_கொள்ளாமலிருக்க_வேண்டும்‬. ஏனெனில் ஒரு முஸ்லிம் தனக்கு விரும்புவதை தம் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் பணிக்கின்றது.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ قَالَ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி)
புகாரி 13
பிறர் மீது நாம் எதில் பொறாமை கொள்கிறோமோ அது நமக்குக் கிடைத்திருந்தால் நாம் சந்தோஷம் அடையவே செய்வோம். அல்லாஹ் அதை நம் சகோதரர்களுக்கு (பிறருக்கு) வழங்கியிருக்கின்றான் என்று பெருந்தன்மை உணர்வைப் பெற்றால் பொறாமை நம் உள்ளத்தில் துளிர்விடுவதை முற்றிலும் தடுத்து விடலாம். இந்தப் பக்குவத்தை அடையும் போது தான் நம் இறைநம்பிக்கை முழுமை பெறுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

குடிப்பவர்கலை;செருப்பாலை அடிப்போம்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்திலும், 
அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும், 
உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம்#மது_அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள்#கையாலும_காலணியாலும்_மேலங்கியாலும்_அடிப்போம்

உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) #நாற்பது_சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள். 

(மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள். 

அறிவிப்பவர்: சாயிப் இப்னு யஸீத்(ரலி) 

நூல்: ஸஹீஹுல் புகாரி 6779.

Saturday, 25 October 2014

நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

*(பெற்றெடுத்த) #தாய்மார்களுக்குத்_துன்பம் தருவதையும், 

*பெண் குழந்தைகளை #உயிருடன்_புதைப்பதையும் 

*(நிறைவேற்றக் #கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) #நிறைவேற்றாமலிருப் பதையும் 

*பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் 

*தேவையற்ற #வீண்_பேச்சகள் பேசுவதையும்

*அதிகமாக #கேள்விகள்_கேட்பதையும்,

*#செல்வத்தை_வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு #ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஅபா(ரலி)

நூல்: ஸஹீஹுல் புகாரி 2408.

நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள)#ஒவ்வொரு_மூட்டிற்காகவும்_தர்மம்_செய்வது_கடமையாகும்;

இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (#சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். 

ஒவ்வொரு புகழ்மாலையும் (#அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும். 

ஒவ்வொரு "#ஓரிறை_உறுதிமொழி"யும் (#லா_இலாஹ_இல்லல்லாஹ்) தர்மமாகும்; 

அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (#அல்லாஹு_அக்பர்) தர்மமே!

#நல்லதை_ஏவுதலும்_தர்மமே!

#தீமைகளைத்_தடுத்தலும்_தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (#ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1302.

சஹாபாக்களின் வீர வரலாறும் தியாக வரலாறும்

அகழ்ப்போரின்போது #ஸஅத்_இப்னு_முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான #ஹிப்பான்_இப்னு_அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். 

அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள்.

அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது #ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது '#பனூ_குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள்.

உடனே, அல்லாஹ்வின் சைகை செய்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், தீர்ப்பை ஸஅத் இப்னு முஆத்(ரலி), 'பனூ குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்படவேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறினார்கள்.

(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தபோது) ஸஅத்(ரலி),

'இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய் இறைவா!

எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக #என்னை_உயிருடன்_இருக்கச்_செய்.

நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் என்னுடைய காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்து விடு" என்று பிரார்த்தித்தார்கள்.

அன்னாரின் நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களின் கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த 'பனூ ஃம்பார்' குலத்தாருக்கு ஸஅத் அவர்களின் கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது.

அப்போது மக்கள், 'கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழிய 'ஸஅத்'(ரலி) இருந்தார்கள்.#அந்தக்_காயத்தினாலேயே_ஸஅத்(ரலி) #இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக!

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: ஸஹீஹுல் புகாரி 4122.

நபிமொழி

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல்...
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் :
சகுனம் பார்ப்பது இனைக் கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர் :இப்னு மஸ்வூத் ரலி
நூல்:அபுதாவுத் 3411
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இனை கற்பித்து விட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அம்ரு ரலி
நூல் : அஹ்மத் 6748
இன்று முஸ்லிம்கள் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து பல காரியங்களில் ஈடுபடுவதை காண முடிகிறது.
ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதன் மூலம் எனக்கு துன்பம் தருகிறான்.நான் தான் காலமாக இருக்கிறேன்.என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது.நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.
அறிவிப்பாளர் : அபு ஹுரைரா ரலி
நூல் :புகாரி 4826
அல்லாஹ்வை திட்டுவதும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பதும் ஒன்று(மேற் கூறப்பட்ட ஹதீஸின்அடிப்படையில்) என்று முஸ்லிம்கள் விளங்கி இந்த வழிகெட்ட அறியாமைக்கால வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்

Friday, 24 October 2014

படைத்தவனின்_நேசத்தை_பெற‬

3:134. (‪#‎பயபக்தியுடையோர்_எத்தகையோர்_என்றால்‬,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (‪#‎இறைவனின்_பாதையில்‬)_செலவிடுவார்கள்;
(இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே‪#‎அல்லாஹ்_நேசிக்கின்றான்‬.

நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும்‪#‎பொறாமை_கொள்ளக்‬ கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர்‪#‎நல்ல_வழியில்_செலவு_செய்தல்‬;
இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் ‪#‎அறிவு_ஞானத்தை‬வழங்கி, அதற்கேற்ப அவர்‪#‎தீர்ப்பு_வழங்குபவராகவும்_கற்றுக்_கொடுப்பவராகவும்‬இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)."
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 1409.

முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு:

முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (مسلم).
ரமழானுக்குப் பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்'' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
யூதர்களுக்கு மாற்றம்:
سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُا حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (أحمد).
ஆஷூரா தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்துகின்ற ஒரு நாளாயிற்றே என்று கூறப்பட்ட போது நாம் வரக்கூடிய வருடம் பிறை ஒன்பதிலும் நோன்பிருப்போம் எனக்கூறினார்கள். ஆனால் நபியவர்கள் அதற்கு முன்னரே மரணித்து விட்டார்கள்'' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்).
யூத சமுதாயம் மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களில் அதிமானோரையும் கொடூரமாக கொலை செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.
இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தன்னுடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர். அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும் படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9 ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்குமாறு கூறினார்கள்.
இவ்வாறு தனது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (2:120)
யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டுமென்பதற்காகவே நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்பது, பத்து ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க கட்டளை இட்டுள்ளார்கள்.
மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளூம், பத்தாம் நாளூம், நோன்பு நோற்பது ஸுன்னத் என்பதை நாம் உணரலாம்.
இம்மாதத்தைப் புனிதப்படுத்துவதற்காக தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த ஒரேயொரு தனித்துவமான வணக்கம் முஹர்ரம் 9 ம்,10ம் நோன்பு நோற்பதாகும்.
இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்கவேண்டும். பத்திலும் பதினொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.
மேலும் பிறை 10ல் மாத்திரம் நோன்பு நோற்பது கூடாது. மாறாக, பிறை ஒன்பதிலும், பத்திலும் நோன்பு நோற்க வேண்டும். ஒருநாள் நோற்று விட்டு மற்றொரு நாளை புறக்கணிக்க கூடாது. இரண்டு நாள்களும் நோன்பு நோற்க வேண்டும்.
ஏனெனில் ஒன்பதாம் நாள் நோற்பதற்குண்டான காரணம் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றமாக இருக்கவேண்டும் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் இந்த நோன்பு சனிக்கிழமையில் வந்து விட்டால் நோற்பது
தடையாகும். ஏனெனில் , சனிக்கிழமையில் வேறு நோன்புகள் இல்லை பர்ளான நோன்பை தவிர . இது நபி மொழியாகும்.
அத்தோடு இது வெள்ளிக்கிழமையில் வந்து விட்டால் அப்போதும் நோற்க முடியாது; ஏனெனில் வெள்ளிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்பதை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் ஆஷுரா நாளில் இரு நேர் எதிரான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களுடைய சமூகத்தவர்களும் பிர்அவ்ன் எனும் கொடுங்கோலனிடமிருந்து காப்பாற்றப்பட்டமை.
மற்றையது, தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டமை ஆகிய நிகழ்வாகும்.
இவ்விரு நிகழ்வுகளில் நாம் ஆஷுரா நோன்பு நோற்பது ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதற்காகத்தான் என இன்றுவரை எம்மில் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், ஆஷுரா நோன்பிற்கு தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்ற காரணம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களடைய சமூகத்தவர்களும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டதேயாகும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சிறப்புப் பொருந்திய நாளில் அறியாமையின் காரணமாக பல அனாச்சாரங்கள் நடைபெறுகின்றன. அவைகளை விட்டும் தவிர்ந்து நடப்பது அவசியமாகும்.
ஏனென்றால் நோன்பைத் தவிர வேறு எந்த விஷேச வணக்க வழிபாடும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கற்றுத்தரபட வில்லை. ஆனால் மார்க்கத்தின் பெயரால் பல புதிய வணக்கங்களை சிலர் உருவாக்கியுள்ளனர்.
ஆஷுரா தினத்தன்று விஷேசப் பிரார்த்தனைகளை புரிவது
வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல்
புத்தாடை அணிதல்
ஆடம்பரமாக செலவழித்தல்
விஷேச தொழுகை ஏற்படுத்துதல்
கர்பலாவின் பெயரில் துக்கம் அனுஷ்டித்தல் , ஆடைகளைக் கிழித்தல்
மண்ணறைகளையும் தரிசித்தல்
போன்றன இந்நாளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அநாச்சாரங்களாகும். இதுபோன்ற எவற்றிற்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பதால் முற்று முழுதாக இவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
கீழ் வரும் அறிவிப்பு பலகீனமானது என்று இமாம் நாசீருத்தீன் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் ஜாமியுஸ் ஷகீர் என்ற கிதாபில் சுட்டிக் காட்டுகிறார்கள்.
عَنْ جَدِّهِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا يَوْمَ عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ صُومُوا قَبْلَهُ يَوْمًا أَوْ بَعْدَهُ يَوْمًا (أحمد).
''நீஙகள் ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அதற்கு முன்னாலோ பின்னாலோ ஒரு நாள் நோன்பிருங்கள்.'' என் நபிகள் நாயகம் ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்