Pages

Saturday, 25 October 2014

நபிமொழி

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல்...
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் :
சகுனம் பார்ப்பது இனைக் கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர் :இப்னு மஸ்வூத் ரலி
நூல்:அபுதாவுத் 3411
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இனை கற்பித்து விட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அம்ரு ரலி
நூல் : அஹ்மத் 6748
இன்று முஸ்லிம்கள் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து பல காரியங்களில் ஈடுபடுவதை காண முடிகிறது.
ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதன் மூலம் எனக்கு துன்பம் தருகிறான்.நான் தான் காலமாக இருக்கிறேன்.என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது.நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.
அறிவிப்பாளர் : அபு ஹுரைரா ரலி
நூல் :புகாரி 4826
அல்லாஹ்வை திட்டுவதும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பதும் ஒன்று(மேற் கூறப்பட்ட ஹதீஸின்அடிப்படையில்) என்று முஸ்லிம்கள் விளங்கி இந்த வழிகெட்ட அறியாமைக்கால வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்

No comments:

Post a Comment