முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (مسلم).
ரமழானுக்குப் பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்'' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
ரமழானுக்குப் பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்'' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
யூதர்களுக்கு மாற்றம்:
سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُا حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (أحمد).
ஆஷூரா தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்துகின்ற ஒரு நாளாயிற்றே என்று கூறப்பட்ட போது நாம் வரக்கூடிய வருடம் பிறை ஒன்பதிலும் நோன்பிருப்போம் எனக்கூறினார்கள். ஆனால் நபியவர்கள் அதற்கு முன்னரே மரணித்து விட்டார்கள்'' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்).
ஆஷூரா தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்துகின்ற ஒரு நாளாயிற்றே என்று கூறப்பட்ட போது நாம் வரக்கூடிய வருடம் பிறை ஒன்பதிலும் நோன்பிருப்போம் எனக்கூறினார்கள். ஆனால் நபியவர்கள் அதற்கு முன்னரே மரணித்து விட்டார்கள்'' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்).
யூத சமுதாயம் மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களில் அதிமானோரையும் கொடூரமாக கொலை செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.
இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தன்னுடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர். அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும் படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9 ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்குமாறு கூறினார்கள்.
இவ்வாறு தனது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (2:120)
யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டுமென்பதற்காகவே நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்பது, பத்து ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க கட்டளை இட்டுள்ளார்கள்.
மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளூம், பத்தாம் நாளூம், நோன்பு நோற்பது ஸுன்னத் என்பதை நாம் உணரலாம்.
இம்மாதத்தைப் புனிதப்படுத்துவதற்காக தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த ஒரேயொரு தனித்துவமான வணக்கம் முஹர்ரம் 9 ம்,10ம் நோன்பு நோற்பதாகும்.
இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்கவேண்டும். பத்திலும் பதினொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.
மேலும் பிறை 10ல் மாத்திரம் நோன்பு நோற்பது கூடாது. மாறாக, பிறை ஒன்பதிலும், பத்திலும் நோன்பு நோற்க வேண்டும். ஒருநாள் நோற்று விட்டு மற்றொரு நாளை புறக்கணிக்க கூடாது. இரண்டு நாள்களும் நோன்பு நோற்க வேண்டும்.
ஏனெனில் ஒன்பதாம் நாள் நோற்பதற்குண்டான காரணம் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றமாக இருக்கவேண்டும் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் இந்த நோன்பு சனிக்கிழமையில் வந்து விட்டால் நோற்பது
தடையாகும். ஏனெனில் , சனிக்கிழமையில் வேறு நோன்புகள் இல்லை பர்ளான நோன்பை தவிர . இது நபி மொழியாகும்.
தடையாகும். ஏனெனில் , சனிக்கிழமையில் வேறு நோன்புகள் இல்லை பர்ளான நோன்பை தவிர . இது நபி மொழியாகும்.
அத்தோடு இது வெள்ளிக்கிழமையில் வந்து விட்டால் அப்போதும் நோற்க முடியாது; ஏனெனில் வெள்ளிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்பதை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் ஆஷுரா நாளில் இரு நேர் எதிரான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களுடைய சமூகத்தவர்களும் பிர்அவ்ன் எனும் கொடுங்கோலனிடமிருந்து காப்பாற்றப்பட்டமை.
மற்றையது, தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டமை ஆகிய நிகழ்வாகும்.
இவ்விரு நிகழ்வுகளில் நாம் ஆஷுரா நோன்பு நோற்பது ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதற்காகத்தான் என இன்றுவரை எம்மில் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், ஆஷுரா நோன்பிற்கு தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்ற காரணம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களடைய சமூகத்தவர்களும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டதேயாகும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சிறப்புப் பொருந்திய நாளில் அறியாமையின் காரணமாக பல அனாச்சாரங்கள் நடைபெறுகின்றன. அவைகளை விட்டும் தவிர்ந்து நடப்பது அவசியமாகும்.
ஏனென்றால் நோன்பைத் தவிர வேறு எந்த விஷேச வணக்க வழிபாடும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கற்றுத்தரபட வில்லை. ஆனால் மார்க்கத்தின் பெயரால் பல புதிய வணக்கங்களை சிலர் உருவாக்கியுள்ளனர்.
ஆஷுரா தினத்தன்று விஷேசப் பிரார்த்தனைகளை புரிவது
வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல்
புத்தாடை அணிதல்
ஆடம்பரமாக செலவழித்தல்
விஷேச தொழுகை ஏற்படுத்துதல்
கர்பலாவின் பெயரில் துக்கம் அனுஷ்டித்தல் , ஆடைகளைக் கிழித்தல்
மண்ணறைகளையும் தரிசித்தல்
போன்றன இந்நாளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அநாச்சாரங்களாகும். இதுபோன்ற எவற்றிற்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பதால் முற்று முழுதாக இவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல்
புத்தாடை அணிதல்
ஆடம்பரமாக செலவழித்தல்
விஷேச தொழுகை ஏற்படுத்துதல்
கர்பலாவின் பெயரில் துக்கம் அனுஷ்டித்தல் , ஆடைகளைக் கிழித்தல்
மண்ணறைகளையும் தரிசித்தல்
போன்றன இந்நாளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அநாச்சாரங்களாகும். இதுபோன்ற எவற்றிற்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பதால் முற்று முழுதாக இவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
கீழ் வரும் அறிவிப்பு பலகீனமானது என்று இமாம் நாசீருத்தீன் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் ஜாமியுஸ் ஷகீர் என்ற கிதாபில் சுட்டிக் காட்டுகிறார்கள்.
عَنْ جَدِّهِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا يَوْمَ عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ صُومُوا قَبْلَهُ يَوْمًا أَوْ بَعْدَهُ يَوْمًا (أحمد).
''நீஙகள் ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அதற்கு முன்னாலோ பின்னாலோ ஒரு நாள் நோன்பிருங்கள்.'' என் நபிகள் நாயகம் ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்
No comments:
Post a Comment