Saturday, 13 June 2015

ஸூரத்துல் லைல்(இரவு)

ஸூரத்துல் லைல்(இரவு)
மக்கீ, வசனங்கள்: 21

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
92:1    وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
92:1(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
92:2   وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
92:2பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
92:3   وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ
92:3ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
92:4   إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
92:4நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
92:5   فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ
92:5எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
92:6   وَصَدَّقَ بِالْحُسْنَىٰ
92:6நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
92:7   فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
92:7அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:8   وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ
92:8ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
92:9   وَكَذَّبَ بِالْحُسْنَىٰ
92:9இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
92:10   فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
92:10அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
92:11   وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ
92:11ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
92:12   إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
92:12நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
92:13   وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ
92:13அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
92:14   فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
92:14ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
92:15   لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
92:15மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
92:16   الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
92:16எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
92:17   وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
92:17ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
92:18   الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ
92:18(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
92:19   وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ
92:19மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
92:20   إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ
92:20மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
92:21   وَلَسَوْفَ يَرْضَىٰ
92:21வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.

No comments:

Post a Comment