Sunday, 26 October 2014

நபிமொழி

பிறருக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற நன்மைகளைக் கண்டு பொறாமை கொள்ளாத குணம் மிகவும் சிறந்த குணமாகும். அத்தகைய நபர் மனிதர்களில் சிறந்தவரும் கூட.
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مُغِيثُ بْنُ سُمَيٍّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَفْضَلُ قَالَ كُلُّ مَخْمُومِ الْقَلْبِ صَدُوقِ اللِّسَانِ قَالُوا صَدُوقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ الْقَلْبِ قَالَ هُوَ التَّقِيُّ النَّقِيُّ لَا إِثْمَ فِيهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ
நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் ‪#‎தூய_உள்ளம்_கொண்டவரும்‬ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது என்றார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இப்னுமாஜா 4206
‪#‎பிறர்_மீது_பொறாமைப்படாமல்_இருப்பதை_நம்_குணமாக்கி‬கொண்டால் இறைவன் நாடினால் அது நம்மை‪#‎சொர்க்கத்திற்கு‬ அழைத்து செல்லும் காரணியாக ஆகலாம்.
இது தொடர்பாக வரும் பின்வரும் ஹதீஸைப் படிக்கும்போது மறுப்பேதுமின்றி யாரும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்வோம்.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது தற்போது‪#‎சுவர்க்கவாசிகளில்_ஒருவர்_உங்களிடத்தில்_வருவார்‬ என்று அவர்கள் கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் ஒழூ செய்ததால் தாடியில் தண்ணீர் வடிகின்ற நிலையில் இடது கையில் தனது செருப்புகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்.
மறு நாளும் அதுபோன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள். அந்த மனிதர் மூன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அந்த மனிதரை (கண்காணிப்பதற்காக) பின்தொடர்ந்து சென்றார். (பிறகு கூறினார்)
நான் எனது தந்தையுடன் சண்டையிட்டு மூன்று நாட்கள் அவரிடம் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டேன். ஆகவே அந்நாட்கள் கழியும் வரை உங்களிடம் தங்க எனக்கு இடமளிப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் சரி என்றார்.
أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وُضُوئِهِ قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ فَلَمَّا كَانَ الْغَدُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الْأُولَى فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الْأُولَى فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ إِنِّي لَاحَيْتُ أَبِي فَأَقْسَمْتُ أَنْ لَا أَدْخُلَ عَلَيْهِ ثَلَاثًا فَإِنْ رَأَيْتَ أَنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ قَالَ نَعَمْ قَالَ أَنَسٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِي الثَّلَاثَ فَلَمْ يَرَهُ يَقُومُ مِنْ اللَّيْلِ شَيْئًا غَيْرَ أَنَّهُ إِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلَاةِ الْفَجْرِ قَالَ عَبْدُ اللَّهِ غَيْرَ أَنِّي لَمْ أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا فَلَمَّا مَضَتْ الثَّلَاثُ لَيَالٍ وَكِدْتُ أَنْ أَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلَا هَجْرٌ ثَمَّ وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلَاثَ مِرَارٍ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعْتَ أَنْتَ الثَّلَاثَ مِرَارٍ فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لِأَنْظُرَ مَا عَمَلُكَ فَأَقْتَدِيَ بِهِ فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ قَالَ فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنْ الْمُسْلِمِينَ غِشًّا وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ وَهِيَ الَّتِي لَا نُطِيقُ
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்:
நான் மூன்று நாட்களும் அவரிடத்தில் தங்கி கழித்ததில்‪#‎அவர்_இரவில்_நின்று_வணங்கவில்லை‬; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்;
பிறகு பஜ்ரு வரையும் தூங்குவார்கள். அந்த நாட்களில் பிறரைப் பற்றி தவறாக பேசி நான் அவரிடம் கேட்டதில்லை. மூன்று நாட்கள் கழிந்த பிறகு அவரின் நற்செயல்களைக் குறைவாக மதிப்பிட முற்பட்டேன். எனவே அந்த மனிதரிடம் இறையடியாரே (உண்மையில்) எனக்கும் என் தந்தைக்கும் இடையில் எந்த சண்டை, சச்சரவும் இல்லை, எனினும் ‘நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார் என்று மூன்று முறை கூறினார்கள்;
மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். எனவே தான் நான் உங்களிடம் தங்கி (சொர்க்கத்தில் நுழைவிக்கும் படி) தாங்கள் செய்யும் நற்செயல் எது? என்பதைப் பார்த்து நானும் அதை செய்ய விரும்பினேன். (அதற்காகவே தங்கினேன்) ஆனால் அதிகமான நற்செயல் எதுவும் செய்தததாக தங்களைக் காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்று’ அவரிடம் கேட்டேன். நீங்கள் பார்த்ததைத் தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை என்று கூறினார்.
நான் திரும்பிச் சென்ற போது என்னை திரும்ப அழைத்து நீங்கள் பார்த்ததை தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை எனினும் “‪#‎நான்_எந்த_முஸ்லிமுக்கும்_தீங்கிழைக்கும்_எண்ணம்_என்_உள்ளத்தில்_இருந்ததில்லை‬. மேலும் அல்லாஹ் யாருக்கு நன்மையை வழங்கியிருந்தாலும் (அதற்காக) அவர் மீது நான்‪#‎பொறாமை_கொள்ள_மாட்டேன்‬.” என்று கூறினார்.
அதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் இதுவே உங்களிடம் உள்ள(சிறந்த)து. ஆனால் இது நம்மால் இயலாது என்று கூறினார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
அஹ்மத் 12236
இறையருளிலிருந்து நம்மைத் தூரமாக்கும் பொறாமையிலிருந்து எப்போதும் நாம் தூரமாகவே இருக்க வேண்டும். இறைவன் பிறருக்கு வழங்கியவற்றில் ஒரு போதும் நாம் ‪#‎தீய_எண்ணம்_கொள்ளாமலிருக்க_வேண்டும்‬. ஏனெனில் ஒரு முஸ்லிம் தனக்கு விரும்புவதை தம் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் பணிக்கின்றது.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ قَالَ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி)
புகாரி 13
பிறர் மீது நாம் எதில் பொறாமை கொள்கிறோமோ அது நமக்குக் கிடைத்திருந்தால் நாம் சந்தோஷம் அடையவே செய்வோம். அல்லாஹ் அதை நம் சகோதரர்களுக்கு (பிறருக்கு) வழங்கியிருக்கின்றான் என்று பெருந்தன்மை உணர்வைப் பெற்றால் பொறாமை நம் உள்ளத்தில் துளிர்விடுவதை முற்றிலும் தடுத்து விடலாம். இந்தப் பக்குவத்தை அடையும் போது தான் நம் இறைநம்பிக்கை முழுமை பெறுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

No comments:

Post a Comment