Saturday, 1 March 2014

quran hadees

நன்மையிலும்
இறையச்சத்திலும்
ஒருவருக்கொருவர் உதவிக்
கொள்ளுங்கள்!

பாவத்திலும்,
வரம்பு மீறலிலும்
ஒருவருக்கொருவர் உதவிக்
கொள்ளாதீர்கள்!

அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அல்லாஹ் கடுமையாகத்
தண்டிப்பவன்.
அல்குர்ஆன் 5:2

"நல்ல நண்பனுக்கும் தீய
நண்பனுக்கும் உதாரணம்
கஸ்தூரி வைத்திருப்பவரும்,
கொல்லனின் உலையுமாகும்.
கஸ்தூரி வைத்திருப்
பவரிடமிருந்து உமக்கு எதுவும்
கிடைக்காமல் போகாது. நீர்
அதை விலைக்கு வாங்கலாம்.
அல்லது அதன்
நறுமணத்தையாவது பெற்றுக்
கொள்ளலாம்.

கொல்லனின்
உலை உமது வீட்டையோ,
உமது ஆடையையோ எரித்து விடும்.
அல்லது அவனிடமிருந்து கெட்ட
வாடையைப் பெற்றுக்
கொள்வீர்''

என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் :

அபூமூஸா (ரலி)
நூல் : புஹாரி 2101, 5534

No comments:

Post a Comment