பயான் |
1. இறந்தவருக்கு கடன் இருந்தால்...அடைத்தல்
______________________________________________
கடன் பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்டால்...கடனை அடைப்பதற்கு எதையேனும் இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா ..? என நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள் "ஆம்" என கூறப்பட்டால்..தொழுகை நடத்துவார்கள்...இல்லையென்றால்... யாராவது கடனை அடைக்க முன் வருகிறீர்களா...? என கேட்பார்கள் யாரும் கடனை அடைப்பதற்கு முன் வந்தாலும் நபி (ஸல்) தொழுகை வைப்பார்கள்...இல்லையென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்தி விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு விலகி விடுவார்கள்
பார்க்க......புகாரி:- 2297,5371 ,2291,2295.
2, இறந்தவருக்காக இறைவனிடம் துஆ கேட்கலாம்...
_____________________________________________
ஒரு மனிதன் இறந்து விட்டால்..மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும்
அவை...நிலையான தர்மம் ,பிறர் பயன் பெரும் கல்வி,தனக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி,என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதார நூல்: முஸ்லிம் :3084
3,இறந்தவரின் நன்மைக்காக தர்மம் செய்தல் .....
________________________________________________
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ என் தாய் திடீரென இறந்து விட்டார் ,அவர் பேசியிருந்தால் தர்மம் செய்ய சொல்லியிருப்பார் என்று நான் நினைக்குறேன் ,எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் ...அந்த நன்மை அவருக்குக் கிடைக்குமா என கேட்டார் “நபி (ஸல்) ஆம் என்று பதில் சொன்னார்கள்.
ஆதார நூல்: புகாரி: 1388,2760.
4,இறந்தவர் சார்பில் ஹஜ் செய்யலாம்.....
__________________________________________
ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “ என் தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார், ஆனால் ஹஜ் செய்யாமலே மரணித்து விட்டார்.அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா,...? என கேட்டார் ... நபி (ஸல்) அவர்கள் “ஆம்” செய்யலாம் என பதிலளித்தார்கள் .
ஆதார நூல்:புகாரி :- 1852,7315.
5, இறந்தவருக்கு கடமையான நோன்பு இருந்தால்..அதை வாரிசுகள் நிறைவேற்றலாம்...
___________________________________________
“தன் மீது நோன்புகள் கடமையாகி இருந்த நிலையில் ஒருவர் இறந்து விட்டால்..அவர் சார்பில், அவரது பொறுப்பிலுள்ள வாரிசு நோன்பு நோற்க வேண்டும் “என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..
ஆதார நூல் :- புகாரி:- 1952,
இவை ஐந்து காரியாங்களைத் தவிர்த்து, இறந்தவர் பேரில் நாம் சேர்த்து வைக்கும் எந்தக் காரியமும் அங்கிகரிக்கப்படாது மட்டுமல்ல, பாவமாக அமைந்து விடும்...
*** இறந்தவர் சார்பில் தொழுகையை நிறைவேற்ற முடியாது..
*** இறந்தவர் சார்பில் குர்பானி கொடுக்க முடியாது...
*** இறந்தவர் பேரில் குர்ஆன் ஓதி, பஹ்ஸ் என்ற பெயரில் நன்மையை சேர்த்து வைக்க முடியாது...
***இறந்தவர் பேரில் யாசீன் ஓதி நன்மையை சேர்த்து வைக்க முடியாது...
*** இறந்தவர் பேரில் சலாத்துன் நாரியா ஓதி நன்மையை சேர்த்து வைக்க முடியாது...
*** இறந்தவர் பேரில்..மூன்றாம் நாள் , ஏழாம் நாள் , நாற்பதாம் நாள்,வருஷம் என்று பாத்திஹாக்கள் ஓதி நன்மையை சேர்த்து வைக்க முடியாது...
சுருக்கமாக சொன்னால் ..மேற்கண்ட ஐந்து காரியங்களைத் தவிர்த்து வேறு எந்த முறையிலும் இறந்தவர் பேரில் நன்மையை சேர்த்து வைக்க முடியாது என மார்க்கம் நமக்கு அறிவுறுத்துகிறது...
அன்புச்சகோதர, சகோதரிகளே ! நமது சமுதாயத்தில் இறந்தவர் பேரில் நடக்கும் அனாச்சாரங்கள் அதிகம், அதிகம் இதை அனைவரும் உங்களின் சக நட்புகளுக்கு “ஷேர்” செய்து பாவம் செய்யும் மக்களை நல்வழிப் படுத்துவோமாக!
இன்ஷா அல்லாஹ் !
2, இறந்தவருக்காக இறைவனிடம் துஆ கேட்கலாம்...
ReplyDelete_____________________________________________
ஒரு மனிதன் இறந்து விட்டால்..மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும்
அவை...நிலையான தர்மம் ,பிறர் பயன் பெரும் கல்வி,தனக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி,என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதார நூல்: முஸ்லிம் :3084
அப்ப துஆ கேட்பது நபி வழி குரான் ஓதி துவா கேட்பது சிரந்தது
2770. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ReplyDeleteஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் தம் தாயார் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, 'அவர் சார்பாக நான் தருமம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (பலனளிக்கும்)" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், 'என்னிடம் மிக்ராஃப் எனும் தோட்டம் ஒன்று உள்ளது. அதை நான் அவர் சார்பாக தருமம் செய்து விட்டேன் என்பதற்கு, தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்" என்று கூறினார். புகாரி..
தருமம் செய்தால் நன்மை குரான் ஒதினால் நன்மை இரண்டயும் எத்தி வைக்கலாம்
We are urgently in need of kidney donors for the sum of$500,000,00,( 3 crore)
ReplyDeletereply via Email: kokilabendhirubhaihospital@gmail.com
WhatsApp +91 8681996093