Pages

Friday, 7 February 2020

உயிரை விட மார்க்கமே (ஷரீஅத்தே) மேலானது....

உயிரை விட மார்க்கமே (ஷரீஅத்தே) மேலானது....

எப்படி ஈமான் உயர்ந்ததோ அது போன்றே இந்த தீனும், ஷரீஅத்தும் உயர்ந்தது. ஏனெனில், அல்லாஹ் இந்த தீனை மாத்திரமே மார்க்கமாக பொருந்திக் கொண்டுள்ளான். மேலும், இந்த தீனின் எல்லா அம்சங்களையும் அவனே பூர்த்தியாக்கி தந்து நம்மையும் அதில் ஒருவராக அவனே இணைத்திருக்கின்றான்.

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

“திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி ( மார்க்கம் – தீன் ) ஆகும்”. 

( அல்குர்ஆன்: 3: 19 )

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

“மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         

( அல்குர்ஆன்: 22: 78 )

ثُمَّ جَعَلْنَاكَ عَلَى شَرِيعَةٍ مِنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ (18)

”நபியே! இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான மார்க்கத்தில் ஷரீஅத்தில் உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கின்றோம். எனவே, நீர் அதையே பின்பற்றுவீராக! அறியாத மக்களின் மனோ இச்சைகளைப் பின் பற்ற வேண்டாம்”.                                                 
( அல்குர்ஆன்: 45: 18 )

இந்த தீனில் இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்லவோ, இல்லாத ஒன்றை இருக்கின்றது என்று சொல்லவோ, ஷரீஅத்தின் ஒரு அம்சத்தைக் குறைக்கவோ அல்லது ஒரு அம்சத்தைக் கூட்டவோ எவருக்கும் எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

ஆக இஸ்லாம் என்பது அல்லாஹ் மொழிந்த வார்த்தை எனவே, இஸ்லாத்தை ஒரு போதும் மாற்ற இயலாது. இஸ்லாமிய மார்க்கத்திலும் ஒரு போதும் மாற்றத்தைக் கொண்டு வர எவராலும் இயலாது.

அப்படி எவராவது ஷரீஅத்திற்கு எதிரான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவர்களுக்கு எதிராக உயிர் போகிற வரை போராட வேண்டியது ஈமானை இதயத்தில் இடம் பெறச் செய்திருக்கிற ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாத கடமையும், ஈமானின் ஓர் அம்சமும் ஆகும்.

No comments:

Post a Comment