Pages

Friday, 7 February 2020

ஒரு முஸ்லிமின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்?

இஸ்லாத்தை ஒரு போதும் மாற்ற இயலாது. இஸ்லாமிய மார்க்கத்திலும் ஒரு போதும் மாற்றத்தைக் கொண்டு வர எவராலும் இயலாது.

ஒரு முஸ்லிமின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்?

فَقَالَ أَبُو بَكْرٍ
إنه قد انقطع الوحي وتم الدين، أينقص وأنا حي وَالله لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَالله لَوْ مَنَعُونِي عِقَالاً كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللّهِ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ.

ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஆரம்ப தருணம் அது….

وصل علييهم

  குர் ஆனின் வாசகத்தை குறிப்பிட்டு இப்போது துஆ செய்கிற நபி இல்லை எனவே ஜகாத் தர முடியாது என வாதிட்ட சிலர் நாங்கள் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று கூறி குழப்பம் செய்தார்கள்.

அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைச்செய்தியைப் பெற்றுக் கொண்டிருந்த நபி {ஸல்} அவர்கள் இல்லை என்பது உண்மை தான், நான் உயிரோடி இருக்கும் வரை பரிபூர்த்தி செய்யப்பட்ட தீனில் குறைவு ஏற்பட நான் விட்டு விடுவேனா? நான் உயிரோடு இருக்கும் காலம் வரை ஒரு போதும் தீனில் குறைவு ஏற்பட விடமாட்டேன்”.

 அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! நபி {ஸல்} அவர்களின் காலத்தில் கொடுத்து வந்த ஜகாத்துடைய பொருளில் ஒட்டகம் கட்டுவதற்குப் பயன்படுகிற கயிற்றை அல்லது ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத குட்டியை எனக்கு தர மறுப்பவர்களோடும், தொழுகைக்கும், ஜகாத்திற்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்த நினைப்பவர்களோடும்  நான் போரிடுவேன்” என்று கூறினார்கள்.

  (நூல்: தப்ரானீ )

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்பட வேண்டும். 

No comments:

Post a Comment