Pages

Thursday, 6 February 2020

அல்லாஹ்வை தகுதிக்கேற்ப புகழ்வது ...

அல்லாஹ்வை தகுதிக்கேற்ப புகழ்வது ...

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ يَااَلله بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِيْ ذُنُوبِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ .

. யா அல்லாஹ்! நிச்;சயமாக நீ ஏகன், தனித்தவன், தேவையற்றவன், யாரையும் பெறாதவன்,எவராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவரும் எதுவும் இல்லை என்ற (உன் திருநாமம் மற்றும் உன் பண்புகளைக்) கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன், நீ என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீ, மிக பிழை பொறுப்பவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றாய்.

 (அபூதாவூத்)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لاَ إِلَهَ إِلاَّ أنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ الْمَنَّانُ يَا بَدِيْعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّوْمُ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.

யா அல்லாஹ்! நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானது, வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன், உனக்கு யாதொரு இணை துணை இல்லை, மிக கொடையாளன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரி இன்றி படைத்தவனே! மகத்தவமும் கண்ணியமும் உடயவனே! நித்திய ஜீவனே! (இத்தனை உனது பெயர் மற்றும் தன்மைகளை) கொண்டு நிச்சயம் நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், இன்னும் நரகத்திலிருந்து பாதுகாப்பும் தேடுகின்றேன். 

(அபூதாவூத், திர்மிதி, பராஉ இப்னு ஆஸிப் -ரலி-)

No comments:

Post a Comment