Pages

Sunday, 2 February 2020

ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் இருப்பில் ஓதக் கூடிய துஆ ...

ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் இருப்பில் ஓதக் கூடிய துஆ ...

اَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْلِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ.

யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன்.

 (புகாரி, முஸ்லிம்)

اَللَّهُمَّ اغْفِرْلِيْ مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ.

 யா அல்லாஹ்! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய் செய்தவற்றையும் பகிரங்கமாக செய்தவற்றையும் எல்லை கடந்து அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளை நீ என்னை விட அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப்பிழைகளையும் நீ மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை.

 (முஸ்லிம்)

No comments:

Post a Comment