குர்ஆன் வசனங்களின் மூலம் ஈமான் அதிகரித்தல் ...
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)
حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا حَمَّادُ بن نَجِيحٍ وكان ثِقَةً عن أبي عِمْرَانَ الْجَوْنِيِّ عن جُنْدُبِ بن عبد اللَّهِ قال كنا مع النبي وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الْإِيمَانَ قبل أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا
‘நாங்கள் இளைஞர்களாக இருந்த போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறோம். குர்ஆனைக் கற்றுக் கொள்வதற்கு முன் ஈமானைக் கற்றுக் கொண்டோம். பின்னர் குர்ஆனைக் கற்று அதன் மூலம் ஈமானை அதிகப்படுத்திக் கொண்டோம்’
என்று ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: இப்னுமாஜா
No comments:
Post a Comment