“வித்ரு‘ தொழுகையைத் தொழுது வாருங்கள்...
عَنْ عَلِيٍّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يَا أَهْلَ الْقُرْآنِ! أَوْتِرُوا فَإِنَّ اللهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ.
رواه ابوداؤد باب استحباب الوتر
. “குர்ஆன் உடையவர்களே! (முஸ்லிம்களே!) நீங்கள் “வித்ரு‘ தொழுகையைத் தொழுது வாருங்கள். ஏனென்றால், அல்லாஹ் “வித்ரு‘ ஆக இருக்கிறான். அவன் வித்ரு தொழுபவர்களை நேசிக்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:-
ஒற்றைப்படை எண்ணுக்கு “வித்ரு‘ என்று சொல்லப்படும். அல்லாஹ் “வித்ரு‘ ஆக உள்ளான் என்பதன் பொருள் அவனுக்கு இணையாக யாருமில்லை என்பதாகும். வித்ரு தொழுகையின் ரக்அத்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருப்பதும், வித்ரு தொழுவதை அல்லாஹ் நேசிப்பதற்குக் காரணமாகும்.
(மஜ்மஃ பிஹாருல் அன்வார்)
عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ ؓ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ ﷺ فَقَالَ: إِنَّ اللهَ تَعَالَي قَدْ أَمَدَّكُمْ بِصَلاَةٍ وَهِيَ خَيْرٌ لَّكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ، وَهِيَ الْوِتْرُ فَجَعَلَهَا لَكُمْ فِيمَا بَيْنَ الْعِشَاءِ إِلَي طُلُوعِ الْفَجْرِ.
رواه ابوداؤد باب استحباب الوتر
. ஹஜ்ரத் ஹாரிஜதுப்னு ஹுதாபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அல்லாஹ் “இன்னுமொரு தொழுகையை உங்களுக்குக் கொடுத்துள்ளான். அது சிவப்பு நிற ஒட்டகைகளைவிட உங்களுக்குச் சிறந்தது, அது “வித்ரு‘ தொழுகையாகும், அதற்குரிய நேரம் இஷாத் தொழுகையிலிருந்து பஜ்ரு உதயமாகும்வரை என்று அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்” என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:
அரபியர்களிடம், சிவப்பு நிற ஒட்டகம் மிக்க விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டு வந்தது.
– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: أَوْصَانِي خَلِيلِي ! بِثَلاَثٍ: بِصَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَالْوِتْرِ قَبْلَ النَّوْمِ، وَرَكْعَتَيِ الْفَجْرِ.
رواه الطبراني في الكبير ورجاله رجال الصحيح مجمع الزوائد:
ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, “எனது நேசர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக்கு
மூன்று காரியங்கள் செய்யும்படி உபதேசித்தார்கள்.
“ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைக்கும்படியும்,
தூங்கும் முன் வித்ரு தொழும் படியும்,
பஜ்ரின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழும்படியும் உபதேசித்தார்கள்”.
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:-
இரவில் எழும் பழக்கமுள்ளோருக்கு தூங்கி எழுந்த பிறகு வித்ரு தொழுவது சிறந்தது. இரவில் எழும் பழக்கமில்லையென்றால், தூங்குவதற்கு முன்பே தொழுதுவிட வேண்டும்.
No comments:
Post a Comment