Pages

Sunday, 12 January 2020

ஒரு அமலை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா?

ஒரு அமலை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா? 

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ فُقَرَاءَ الْمُهاجِرِينَ أَتَوْا رَسُولُ اللهِ ﷺ فَقَالُوا: قَدْ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ الْعُلَي وَالنَّعِيمِ الْمُقِيمِ فَقَالَ: وَمَا ذَاكَ؟ قَالُوا: يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ وَلاَ نَتَصَدَّقُ وَيُعْتِقُونَ وَلاَ نُعْتِقُ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: أَفَلاَ أُعَلِّمُكُمْ شَيْئاً تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعَدَكُمْ وَلاَ يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلاَّ مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ؟ قَالُوا: بَلَي يَارَسُولَ اللهِﷺ قَالَ: تُسَبِّحُونَ وَتُكَبِّرُونَ وَتَحْمَدُونَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ ثَلاَثاً وَّ ثَلاَثِينَ مَرَّةً، قَالَ أَبُو صَالِحٍ: فَرَجَعَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ إِلَي رَسُولُ اللهِ ﷺ فَقَالُوا: سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ اْلاَمْوَالِ بِمَا فَعَلْنَا فَفَعَلُوا مِثْلَهُ فَقالَ رَسُولُ اللهِ ﷺ: ذلِكَ فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَنْ يَّشَاءُ.
رواه مسلم باب استحباب الذكر بعدالصلاة… 

 ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை ஏழை முஹாஜிர்கள் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “சீமான்கள் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிரந்தரமான பாக்கியங்களையும் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள்.”அது எவ்வாறு?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “நாங்கள் தொழுவதைப் போல் அவர்களும் தொழுகிறார்கள், நாங்கள் நோன்பு நோற்பது போல் அவர்களும் நோன்பு நோற்கிறார்கள், (ஆனால்) அவர்கள் தர்மம் செய்கிறார்கள், எங்களால் தர்மம் செய்ய முடிவதில்லை, அவர்கள் அடிமைகளை உரிமை விடுகிறார்கள், அது எங்களால் இயலவில்லை” என்று ஸஹாபாக்கள் கூறினர். “உங்களைவிட அமலால் முந்தியவரை நீங்கள் அடைந்து கொள்ளும்படியும் உங்களைவிடப் பிந்தியவரை முந்திச் செல்லும்படியுமான, மேலும் உங்களைப் போன்று அமல் செய்யாத வரை உங்களைவிடச் சிறந்தவர்களாக யாரும் ஆகமுடியாத ஒரு அமலை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் வினவ, “யாரஸூலல்லாஹ்! அவசியம் அறிவித்துத் தாருங்கள்” என ஸஹாபாக்கள் வேண்டினர்.”ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் “சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், ஒவ்வொன்றையும் 33 முறை ஓதிவாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதன்படியே அவர்கள் அமல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தந்ததை வசதிபடைத்த ஸஹாபாக்கள் அறிந்ததும், அவர்களும் அமல் செய்ய ஆரம்பித்தார்கள்) மீண்டும் ஏழை முஹாஜிர்கள் வந்து, “எங்களில் வசதிபடைத்த சகோதரர்களும் இதைக் கேள்விப்பட்டு அவர்களும் இவ்வாறே அமல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்!’ என்று கூறினர்.”இது அல்லாஹ்வின் அருள், அவன் நாடியவருக்கு வழங்குகிறான்‘ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

(முஸ்லிம்)

No comments:

Post a Comment