Pages

Monday, 9 December 2019

நபி(ஸல்)அவர்கள் நம் உயிரினும் மேலானவர்கள்!

நபி(ஸல்)அவர்கள்
நம் உயிரினும் மேலானவர்கள்!



النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ

அல்லாஹ்(தஆலா) கூறுகின்றான்

“திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட 
நபி தான் முன்னுரிமை பெற்றவராவார்”
(அல்குர்ஆன்: 33: 6 )


قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ()

”நபியே! 
இறை நம்பிக்கையாளர்களை அழைத்துச் சொல்லி விடுங்கள்!

உங்கள் பெற்றோர், மக்கள், சகோதரர்கள், மனைவியர், மற்றும் உறவுகள், நீங்கள் நஷ்டப்படுவதை அஞ்சும் உங்கள் வர்த்தகம், நீங்கள் ஆசிக்கும் உங்களது இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும் அவனது தூதரையும், நேசிப்பதை விட, அவனுடைய பாதையிலே போரிடுவதை விட உங்களுக்கு அதிக பிரியமுடையவைகளாக இருப்பின், அல்லாஹ், தன்னுடைய ஆனையைக் கொண்டு வரும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்! அல்லாஹ்,  பாவிகளுக்கு அவர்களது நோக்கத்தில் ஒரு போதும் வெற்றியை தரமாட்டான்”.
                                         
( அல்குர்ஆன்: 9: 24 )


حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا ابن علية عن عبد العزيز بن صهيب عن أنس عن النبي صلى الله عليه وسلم ح وحدثنا آدم قال حدثنا شعبة عن قتادة عن أنس قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் 
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:“ஒருவருக்கு தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை “எந்த அடியாரும் அல்லது எந்த மனிதரும், 
இறை நம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்”
( நூல்: முஸ்லிம்-69)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இவ்வுலகில்
 63 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அதில் இறைத்தூதராக 
23 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

நபி(ஸல்)அவர்கள்
அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் வாழ்ந்திருந்த போதும் மடமைத்தனமான எந்தவொரு செயலையும் அவர்கள் செய்திடவில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஜாஹிலிய்யாவில் வாழ்ந்த அம்மக்கள் கூட நபி {ஸல்} அவர்களை விரும்பினார்கள், போற்றினார்கள்.

عَنْ أَبِي مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ  رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ  رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ. حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


“உங்களில் ஒருவருக்கு நான் கொண்டு வந்த மார்க்கத்தை 
(என் வழியை) பின்பற்றுவது அவரின் மனவிருப்பமாக ஆகாதவரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் )

No comments:

Post a Comment