Pages

Tuesday, 10 December 2019

ஹஜ்ஜத்துல் விதா (எனும்) இருதிப்பேருரை!!!

ஹஜ்ஜத்துல் விதா (எனும்)
இருதிப்பேருரை!!!


அங்கே, திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் இஸ்லாத்தின் முதல் நபரான அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தேதியில் கடைசி நபராய் இஸ்லாத்தில் நுழைந்தவரும் இருந்தார்கள்.

அந்த அரஃபாப் பெருவெளியில் வீற்றிருந்த மக்கள் திரளை நோக்கி மாபெரும் பேருரை ஒன்றை நபி {ஸல்} அவர்கள் நிகழ்த்தினார்கள்.

أيها الناس، اسمعوا قولي، فإني لا أدري لعلى لا ألقاكم بعد عامي هذا بهذا الموقف أبداً

உரையின் ஆரம்பமாக, மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள்! ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா? என்று எனக்குத் தெரியாது” என்று கூறி…

தொடர்ந்து  நெகிழ்ச்சியூட்டும், உள்ளத்தை உருகச்செய்யும் ஆழமான பல செய்திகளைக் கூறினார்கள்.

وأنتم تسألون عني، فما أنتم قائلون ؟  قالوا : نشهد أنك قد بلغت وأديت ونصحت .
فقال بأصبعه السبابة يرفعها إلى السماء، وينكتها إلى الناس : ( اللهم اشهد ) ثلاث مرات .

இறுதியாக, ”நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேனா?” என்று கேட்டு விட்டு, மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, கூடியிருந்த மக்கள் திரள் “நிச்சயமாக, நீங்கள் எடுத்துரைத்தீர்கள்! முழுமையாக உங்கள் கடமைகளை நிறைவேற்றினீர்கள்! நன்மையையே நாடினீர்கள்! என்று நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி ”அல்லாஹ் இதற்கு நீயே சாட்சி” என்று மூன்று முறை கூறினார்கள்.

இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எத்தி வைத்திடுங்கள்! ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்!” என்று கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் தங்களது உரையை முழுமையாக முடித்த போது..

{ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا }

“இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் முழுமையாக்கி வைத்து விட்டோம்”
( அல்குர்ஆன்: 5:3 ) எனும் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான்

( நூல்: ரஹீக் அல் மக்தூம் )

No comments:

Post a Comment