Pages

Monday, 30 December 2019

திருக் குர்ஆனில் அதிகமாக கண்டிக்கப்பட்டவர்கள் அநியாயக்காரர்கள் தான்...

திருக் குர்ஆனில் அதிகமாக கண்டிக்கப்பட்டவர்கள் அநியாயக்காரர்கள் தான்... 

அல்லாஹ் அநீதிக்கு கால அவகாசம் தருவான்.ஆனால் நிலைக்க விடமாட்டான்.


وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ‌  
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் முழுமையாக வழங்குவான். 

وَ اللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏

அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 3:57)




قال -عليه الصلاة والسلام-: "إن اللهَ لَيُمْلِي للظالم، حتى إذا أخذه لم يُفْلِتْهُ"، ثم قرأ قول الله -جل وعلا-: (وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ) [هود:102](رواه البخاري ومسلم)

.நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரனுக்கு அவகாசம் தருவான் 

இறுதியில் அவன் பிடிக்க ஆரம்பித்தால் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவான்.

என்று கூறிய நபி ஸல் அவர்கள் பின் வரும் வசனத்தை
 ஓதினார்கள்

அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் -

 நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு கல்வியை,பொருளை,பதவியை ஆக்கத்திற்கு கொடுக்கிறான்.

ஆனால் மனிதன் அதைக்கொண்டு அநியாயம் செய்து அழிவுக்கு காரணமாக்கி கொள்கிறான்.

#கல்வியால் அழிந்தவன் இப்லீஸ்,#

#பொருளால் அழிந்தவன் காரூன்,#

#ஆட்சி அதிகாரத்தால் அழிந்தவன் பிர்அவ்ன்.#

அல்லாஹுத்தஆலா  அநியாயத்தை ஒருபோதும் பொருத்துக்கொள்ள மாட்டான்.

No comments:

Post a Comment