Pages

Tuesday, 31 December 2019

அநியாயக்கார அரசாக இருந்தால் அது இஸ்லாமிய அரசாக இருந்தாலும் அல்லாஹ் அழித்துவிடுவான்...

அநியாயக்கார அரசாக இருந்தால் அது இஸ்லாமிய அரசாக இருந்தாலும் அல்லாஹ் அழித்துவிடுவான்...

سَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ 

 அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். 

(அல் குர்ஆன் 26:227)

في حديث جابر -رضي الله عنه- قال: سأل النبي -عليه الصلاة والسلام- عددا من الصحابة الذين قدموا من الحبشة، قال: حدثوني بأعجب ما رأيتم في أرض الحبشة؟ فقال فتية منهم: يا رسول الله، رأينا عجوزا تحمل جرة ماء -أو قالوا قلة ماء- فوق رأسها، فبينما هي تمشي إذ أقبل شاب منهم -يعني من الحبشة- فوضع كفه بين كتفيها ثم دفع بينهم فوقعت القلة من فوق رأسها فانكسرت، ووقعت العجوز على ركبتيها، وهم كفار غير مسلمين، وهم يقولون الله ثالث ثلاثة! ومع ذلك انظر كيف علق النبي -عليه الصلاة والسلام- على الموقف!.: فقامت العجوز والتفت إليه وقالت: ستعلم يا غدر -يعني يا أيها الغادر- الذي جئت من خلفي ولم أنتبه إليك، قالت ستعلم يا غدر إذا وضع الله كرسيه للحكم بين العباد أي شيء يكون حالي وحالك! فقال -عليه الصلاة والسلام-: "صَدَقَتْ، صدقت، صدقت؛ لا قدست أمة لا يؤخذ لضعيفهم من قويهم".
ابن ماجه في سننه

அபிஸீனியாவிலிருந்து திரும்பிவந்த ஸஹாபாக்களிடம் நபி ஸல் அவர்கள் அங்கு அவர்கள் கண்ட ஆச்சரியமான காட்சிபற்றி விசாரித்தார்கள்.

அப்போது ஸஹாபாக்கள்,யாரஸூல்லாஹ்!
ஒரு மூதாட்டி தன் தலையில் தண்ணீர் பாத்திரம் சுமந்து செல்கிறாள்.

ஒரு அபிஸீனிய வாலிபன் வந்தான்.அவளின் தோழ்புஜத்தில் கைவத்து தள்ளிவிட்டான்.
 தண்ணீர் பாத்திரம் கீழேவிழுந்து உடைந்துவிட்டது.

அந்த மூதாட்டியும் கீழே விழுந்து விட்டாள்.

பின்னர் எழுந்து அந்த மூதாட்டி சொன்னாள்.

அநியாயக்காரனே!

அல்லாஹ் அடியார்களுக்கிடையில் நீதியை நிலைநிறுத்தும் அந்த நாளில் உன் நிலை என்ன ஆகும் என்று தெரியும்.

அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் 

அவள் உண்மை சொன்னாள்.

அவள் உண்மை சொன்னாள்.

அவள் உண்மை சொன்னாள்.

அநியாயக்காரனிடமிருந்து அநீதி இழக்கப்பட்டவனுக்கு உரிமை பெற்றுத்தராத எந்த சமுதாயமும்

 அழிவிலிருந்து தப்பமுடியாது என்று கூறினார்கள்.

أوحى الله -تعالى- إلى موسى -عليه السلام-: يا موسى، حذر بني إسرائيل من مغبة الظلم؛ فإن له سوء عاقبة

நபி மூஸாவே!
பனீஇஸ்ரவேலர்களை அநியாயம் செய்வதை விட்டும் எச்சரிக்கை செய்யுங்கள்.

ஏனெனில் அநியாயத்தின் முடிவு மிக மோசமானது.
என்று மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான்.


No comments:

Post a Comment