Pages

Wednesday, 4 December 2019

இஸ்லாத்தில் கல்வி அறிவு அவசியம்

இஸ்லாத்தில் கல்வி அறிவு அவசியம்



இஸ்லாம் மனித சமூகத்திற்கு வழங்கிய முதல் கட்டளையே கல்வி அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

(நபியே) நீர் உம்மைப் படைத்த இறைவனின் பெயர் கொண்டு (ஓதுவீராக!) படிப்பீராக!


அந்தஸ்தையும் உயர்வையும் பெற்றுத்தரும் வல்லமை மிக்கது கல்வியறிவு என்று இஸ்லாம் சான்று பகர்கின்றது.

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ
அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், எவர்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட்டிருக்கின்றதோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான்.

அதிகரித்துக் கேட்க அனுமதியுள்ள ஒரே ஒரு விஷயம் கல்வியறிவு மட்டும்தான்

وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا

(நபியே) நீர் இறைஞ்சுவீராக! “ என் இறைவனே! எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி வழங்குவாயாக!

இன்னும் ஏராளமான இறைவசனங்கள் கல்வியறிவைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி  போதிக்கின்றன

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயின் அறைக்குள் இருந்தார்கள்.

அப்போது பனூதமீம் கோத்திரத்தார்கள் உதாரித் இப்னு ஹாஜிப் மற்றும் அக்ரஃ இப்னு ஹாபிஸ், ஸபர்கான் இப்னு பத்ர், அம்ர் இப்னு அஹ்தம், ஹப்ஹாப் இப்னு யஸீத் ஆகியோரின் தலைமையில் அங்கே வருகை புரிந்தார்கள்.

فلما قدم وفد بني تميم كانا معهم فلما دخل وفد بني تميم المسجد نادوا رسول الله صلى الله عليه وسلم من وراء حجراته: أن اخرج إلينا يا محمد فآذى ذلك رسول الله صلى الله عليه وسلم من صياحهم فخرج إليهم فقالوا: يا محمد جئناك نفاخرك فأذن لشاعرنا وخطيبنا قال: قد أذنت لخطيبكم فليقل فقام عطارد بن حاجب فقال: الحمد لله الذي له علينا الفضل والمن وهو أهله الذي جعلنا ملوكاً ووهب لنا أموالاً عظاماً نفعل فيها المعروف وجعلنا أعز أهل المشرق وأكثره عدداً وأيسره عدة فمن مثلنا في الناس؟ ألسنا برءوس الناس وأولي فضلهم؟ فمن فاخر فليعدد مثل ما عددنا وإنا لو نشاء لأكثرنا الكلام ولكنا نحيا من الإكثار فيما أعطانا وإنا نعرف بذلك.
أقول هذا لأن تأتوا بمثل قولنا وأمر أفضل من أمرنا ثم جلس.


பள்ளிக்கு வெளியிலிருந்து முஹம்மதே! வெளியே வாரும் என்று அக்ரஃ இப்னு ஹாபிஸும், உயைனா இப்னு ஹிஸ்ன் அவர்களும் அழைத்தனர்.

அவர்கள் அழைத்தது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நோவினை தருவதாய் அமைந்தது.

எனினும் உள்ளிருந்து நபிகளார் மிகவும் வேதனையுடன் வந்தார்கள். அண்ணலாரைப் பார்த்த அவர்கள் இருவரும் ”முஹம்மதே! நாங்கள் எங்களின் குலப்பெருமையை உங்களிடம் எடுத்துக் கூறவே நாங்கள் வந்திருக்கின்றோம்.

அனுமதி கொடுத்தால் நாங்கள் பிரசங்கத்தின் மூலமும் கவியின் மூலமும் அதை வெளிப்படுத்துவோம்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சரி உங்கள் பேச்சாளரை அழையுங்கள்! உரை நிகழ்த்தட்டும்! என்று அனுமதி வழங்கினார்கள்.

உடனே அக்ரஃ இப்னு ஹாபிஸ், உதாரித் இப்னு ஹாஜிப் அவர்களை உரை நிகழ்த்துமாறு அழைத்தார்கள்.
அங்கே, ஒரு புறம் நபித்தோழர்களின் கூட்டமும் இன்னொரு புறம் பனூதமீம் கோத்திரத்தார்களும் குழுமியிருந்தனர்.

நபிகளாரின் முன் வந்து நின்ற உதாரித் உரை நிகழ்த்த ஆரம்பித்தார். உரையில் “ எங்களை சிறப்பு மிக்க சமுதாயமாகவும் வளமிக்க சமுதாயமாகவும் ஆக்கிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!

எங்களை அவன் அரசர்களாக ஆக்கியிருக்கின்றான். எங்களுக்கு பெரும் பொருளாதாரத்தையும் தந்திருக்கின்றான். நாங்கள் அவற்றை நல்ல வழிகளிலேயே பயன் படுத்தி வருகின்றோம்.

எங்களை சூரியன் உதிக்கும் திசையில் வாழச்செய்து கண்ணியப்படுத்தி இருக்கின்றான். நாங்கள் பெரும்பான்மை சமூகம் ஆவோம். எங்களைப் போல் மனித சமூகத்தில் உயர்ந்தவர் யார் இருக்கின்றார்கள்?

தலைமைத்துவத்தாலும் சிறப்பாலும் எங்களை விட உயர்ந்தோர் யார் இருக்கின்றார்கள்?

எங்களைப் போல் இப்படி அதிக எண்ணிக்கையில் வரிசைப் படுத்தி சொல்லும் அளவிற்கு யாருக்கு தைரியம் இருக்கின்றது?

இப்போதும் கூட நாங்கள் வெட்கத்தால் அதிகம் சொல்வதை தவிர்த்திருக்கின்றோம்.

முடிந்தால் எங்களைப்போல் சொல்லுங்கள் பார்க்கலாம்! எங்களை விட எதில் நீங்கள் சிறந்து இருக்கின்றீர்கள் என்பதை நாங்களும் தான் பார்க்கின்றோமே?” என்று கூறி அமர்ந்தார்.

இவை அனைத்தையும் மிகக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த அண்ணலார் ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களை பனூ தமீம் கோத்திரத்தார்களின் உரைக்கு பதில் கூறுமாறு பணித்தார்கள்.

فقال رسول الله صلى الله عليه وسلم لثابت بن قيس بن الشماس أخي بني الحارث بن الخزرج قم فأجب الرجل في خطبته فقام ثابت فقال: الحمد لله الذي السموات والأرض خلقه قضى فيهن أمره ووسع كرسيه علمه ولم يك شيء قط إلا من فضله ثم كان من قدرته أن جعلنا ملوكاً واصطفى من خير خلقه رسولاً أكرمه نسباً وأصدقه حديثاً وأفضله حسباً فأنزل عليه كتابه وائتمنه على خلقه فكان خيرة الله من العالمين ثم دعا الناس إلى الإيمان به فآمن برسول الله المهاجرون من قومه وذوي رحمه أكرم الناس حسباً وأحسن الناس وجوهاً وخير الناس فعالاً ثم كان أول الخلق إجابة واستجاب لله حين دعاه رسول الله صلى الله عليه وسلم نحن فنحن أنصار الله ووزراء رسوله نقاتل الناس حتى يؤمنوا بالله فمن آمن بالله ورسوله منع منا ماله ودمه ومن كفر جاهدناه في الله أبداً وكان قتله علينا يسيراً أقول قولي هذا واستغفر الله لي وللمؤمنين والمؤمنات والسلام عليكم.

ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் எழுந்து சபையின் முன் வந்து நின்று “வானம் மற்றும் பூமியை படைத்து அவைகளின் மீது தம் கட்டளைகளை செயல் படுத்தி, விசாலமான அறிவுடன் காரியங்கள் அனைத்தையும் நடாத்துகின்ற ஏகனாம் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!

எங்களை அவன் தன் வல்லமையால் உலகாளும் நல்லார்களாய் ஆக்கியிருக்கின்றான்.

மேலும், படைப்புகளிலேயே சிறந்த, பாரம்பரியத்தால் உயர்ந்த எப்போதும் உண்மை பேசுகிற குணத்தால் மிகச் சிறந்த ஒரு தூதரை எங்களுக்கு வழங்கி அவர்களுடன் இணைந்து வாழ்ந்திட எங்களுக்கு நற்பேறு வழங்கியுள்ளான்.

அவரின் மீது தன் வேதத்தை இறக்கியருளி, தன் படைப்பினங்களின் வாழ்க்கைக்கு விடியலாக அகில உலகத்தார்களுக்கு சிறந்த தேர்வாக அல்லாஹ் அவர்களை ஆக்கியிருக்கின்றான்.

அந்த இறைத்தூதர் ஈமான் எனும் ஒளிக்கற்றையின் பால் அழைத்தார். அந்த அல்லாஹ்வின் தூதரின் அழகிய அழைப்பை ஏற்று எங்களின் சகோதரர்களான முஹாஜிரீன்கள் அவர்களைக் கொண்டு ஈமான் கொண்டனர்.

பின்பு எங்களையும் அந்த ஒளிக்கற்றையில் வந்து பிரகாசத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அந்த இறைத்தூதர் அழைத்தார்.

உடனடியாக நாங்கள் பதில் கொடுத்தோம். நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் மாறிப்போனோம். அவரின் தூதருக்கு உற்ற நேசர்களாய் ஆகிப்போனோம்.

அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் வரை நாங்கள் பிறரிடம் சண்டை போடுவோம். ஏற்றுக் கொண்டு விட்டாலோ அவர்களின் உதிரத்திற்கும் உடமைகளுக்கும் உத்திரவாதமாய் நாங்கள் மாறிவிடுவோம்.

எங்களோடு இறை நிராகரிப்பு கொண்ட நிலையில் யார் எதிர்த்தாலும் அவர்களோடு அல்லாஹ்விற்காக இறுதி வரை உறுதியோடு போராடுவோம்!

அவர்களை வீழ்த்தி நாங்கள் சாதனை புரிவது எங்களுக்கு மிக எளிதான காரியம் ஆகும்.

இது தான் என்னுடைய உரையாகும். இந்த உரையின் மூலமாக நான் இறை நம்பிக்கை கொண்டிருக்கிற ஆண் பெண் அனைவரின் பிழைகளையும் அல்லாஹ் மன்னித்து அருள் பாளிக்க வேண்டுமாய் மன்றாடிக் கேட்டு விடை பெறுகின்றேன்.

அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது நிலவட்டும்!” என்று கூறி அமர்ந்தார்.

ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களிடம் மார்க்க அறிவும் வரலாற்று ரீதியான அறிவும் ஒருங்கே இருந்ததனால் அவர்களை முன்னிலைப் படுத்தினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்  கல்வியை பயன் தருகிற கல்வி, பயன் தராத கல்வி என்று  அடையாளப் படுத்திருக்கிறார்கள்

பயனுள்ள கல்வியை பெற நாம் முயற்ச்சி செய்ய வேண்டும்

No comments:

Post a Comment