Pages

Monday, 29 October 2018

அல்லாஹ் சிரித்த நிகழ்வு ஓர் பார்வை ….

அல்லாஹ் சிரித்த நிகழ்வு ஓர் பார்வை ….

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّاسَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « هَلْ تُضَارُّونَ فِى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ » . قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ . قَالَ « فَهَلْ تُضَارُّونَ فِى الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ » . قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ . قَالَ « فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ ………،
ثُمَّ يَفْرُغُ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ ، وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ هُوَ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولاً الْجَنَّةَ فَيَقُولُ أَىْ رَبِّ اصْرِفْ وَجْهِى عَنِ النَّارِ ، فَإِنَّهُ قَدْ قَشَبَنِى رِيحُهَا وَأَحْرَقَنِى ذَكَاؤُهَا . فَيَدْعُو اللَّهَ بِمَا شَاءَ أَنْ يَدْعُوَهُ ثُمَّ يَقُولُ اللَّهُ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَنِى غَيْرَهُ . فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ ، وَيُعْطِى رَبَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ مَا شَاءَ ، فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ ، فَإِذَا أَقْبَلَ عَلَى الْجَنَّةِ وَرَآهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ قَدِّمْنِى إِلَى بَابِ الْجَنَّةِ . فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَنِى غَيْرَ الَّذِى أُعْطِيتَ أَبَدًا ، وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ . فَيَقُولُ أَىْ رَبِّ . وَيَدْعُو اللَّهَ حَتَّى يَقُولَ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ . فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ ، وَيُعْطِى مَا شَاءَ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ ، فَيُقَدِّمُهُ إِلَى بَابِ الْجَنَّةِ ، فَإِذَا قَامَ إِلَى بَابِ الْجَنَّةِ انْفَهَقَتْ لَهُ الْجَنَّةُ فَرَأَى مَا فِيهَا مِنَ الْحَبْرَةِ وَالسُّرُورِ ، فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ أَدْخِلْنِى الْجَنَّةَ . فَيَقُولُ اللَّهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَ مَا أُعْطِيتَ - فَيَقُولُ - وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ . فَيَقُولُ أَىْ رَبِّ لاَ أَكُونَنَّ أَشْقَى خَلْقِكَ فَلاَ يَزَالُ يَدْعُو حَتَّى يَضْحَكَ اللَّهُ مِنْهُ فَإِذَا ضَحِكَ مِنْهُ قَالَ لَهُ ادْخُلِ الْجَنَّةَ . فَإِذَا دَخَلَهَا قَالَ اللَّهُ لَهُ تَمَنَّهْ . فَسَأَلَ رَبَّهُ وَتَمَنَّى حَتَّى إِنَّ اللَّهَ لَيُذَكِّرُهُ يَقُولُ كَذَا وَكَذَا ، حَتَّى انْقَطَعَتْ بِهِ الأَمَانِىُّ قَالَ اللَّهُ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ » .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிற நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி…

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிக்கும் போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் எஞ்சியிருப்பார். அவர் தான் சுவனத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார்.

அவர், “என் இறைவா! என் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவாயாக! அதன் வெப்பக் காற்றால் என் மூச்சு அடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்து விட்டது.” என்று கூறுவார்.
பின்னர் அல்லாஹ்விடம் எதைச் சொல்லி பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடியிருக்கின்றானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார்.

பிறகு அல்லாஹ் அவரிடம் ”நீ கேட்பதை நான் நிறைவேற்றினால் இதுவல்லாத இன்னொன்றையும் நீ கேட்கக் கூடும் அல்லவா?” என்று வினவுவான். அதற்கவர், இல்லை என் இறைவா! உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் கேட்கப்போவதில்லை” என்று கூறி இறைவன் நாடிய வாக்குறுதிகளையும், உறுதி மொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார்.

அதன் பின்னர் அல்லாஹ் அவரின் முகத்தை நரகத்தை விட்டு வேறு பக்கம் திருப்பி விடுவான். அவர் சுவனத்தை முன்னோக்கி பார்வையை செலுத்தும் போது அல்லாஹ் நாடிய நேரம் வரை அவர் அமைதியாக இருப்பார்.

பிறகு, “என் இறைவனே! சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு செல்வாயாக!” என்று கூறுவார். அதற்கு, அல்லாஹ் அவரிடம் “உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒரு போதும் என்னிடம் கேட்கமாட்டேன் என முன்னர் உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் நீ என்னிடம் வழங்கவில்லையா?” என்று கேட்டு விட்டு, மனிதா உனக்கு கேடுதான்! உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கேட்பான்.

அதற்கவர், “இல்லை உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன்” எனக் கூறிவிட்டு,  இறைவன் நாடிய வாக்குறுதிகளையும், உறுதி மொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார்.

ஆகவே, அல்லாஹ் அவரை சுவனத்தின் வாசல் வரை கொண்டு செல்வான். சுவனத்து வாசலின் முன்புறம் அவர் நிற்கும் போது சுவனத்தின் வாசல் அவருக்காக திறக்கும். அப்போது, அவர் சுவனத்து சுக போகங்களை சுவனவாசிகள் அனுபவிப்பதைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய நேரம் வரை அமைதியாக நிற்பார்.

பிறகு, “என் இறைவா! என்னை சுவனத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கூறுவார். அப்போது, அல்லாஹ் அவரிடம் “உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒரு போதும் என்னிடம் கேட்கமாட்டேன் என முன்னர் உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் நீ என்னிடம் வழங்கவில்லையா?” என்று கேட்டு விட்டு, மனிதா உனக்கு கேடுதான்! உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கேட்பான்.

அதற்கவர், “என் இறைவா! உன் படைப்புகளிலேயே துர்பாக்கியசாலியாக நான் ஆகிவிடக்கூடாது” என்று பிரார்த்திக் கொண்டே இருப்பார். இறுதியில் அல்லாஹ் அவரின் செயல் கண்டு சிரித்து விடுவான். அவரைக் கண்டு சிரித்த அந்தக் கணத்திலேயே “சுவனத்தில் நுழைந்து கொள்” என்று கூறுவான்.

சுவனத்தில் அவர் நுழைந்த பின்னர் “நீ விரும்பியதை ஆசைப்படு” என்று அல்லாஹ் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார்.

இறுதியில், அல்லாஹ்வே அவருக்கு ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாக நினைவு படுத்தி “இன்னதை நீ ஆசைப்படு, இன்னின்னதை நீ ஆசைப்படு” என்று கூறுவான்.

கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும். அதன் பின்னர் அல்லாஹ், “நீ விரும்பிக் கேட்ட இதுவும் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று கூறுவான்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிற இன்னொரு அறிவிப்பில்…

فيسمع أصوات أهل الجنة فيقول : أي رب أدخلنيها ، فيقول : يا ابن آدم ، ما يصريني منك ؟ أيرضيك أن أعطيك الدنيا ومثلها معها ؟ قال : يا رب أتستهزئ مني وأنت رب العالمين ؟ فضحك ابن مسعود ، فقال : ألا تسألوني مم أضحك ؟ فقالوا : مم
تضحك ؟ قال : هكذا ضحك رسول الله ( صلى الله عليه وآله ) ، فقالوا : مم تضحك يا رسول الله ؟ قال ( صلى الله عليه وآله ) : من ضحك رب العالمين حين قال : أتستهزئ مني وأنت رب العالمين ؟ فيقول : إني لا أستهزئ منك ،

தங்களிடம் பயின்ற மாணவர்களிடையே ஒரு நாள் இந்தச் செய்தியை அறிவிக்கும் போது…

அவர் சுவனத்தில் நுழைந்ததும், அல்லாஹ் அவரைப் பார்த்து

        ( நூல்: புகாரி, பாபு கவ்லில்லாஹி “உஜூஹுய் யவ்மயிதின் நாளிரா” )

حدثنا محمد بن أبي عمر المكي حدثنا سفيان عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة فقالوا كيف يا رسول الله قال يقاتل هذا في سبيل الله عز وجل فيستشهد ثم يتوب الله على القاتل فيسلم فيقاتل في سبيل الله عز وجل فيستشهد وحدثنا أبو بكر بن أبي شيبة وزهير بن حرب وأبو كريب قالوا حدثنا وكيع عن سفيان عن أبي الزناد بهذا الإسناد مثله

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ இரு மனிதர்களின் விஷயத்தில் ”அல்லாஹ் சிரிக்கின்றான்”  ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்கிறார் இவரும், கொலை செய்யப்பட்டவரும் சுவர்க்கத்தில் நுழைவதைக் கண்டு அல்லாஹ் சிரிக்கின்றான்” என்று நபி {ஸல்} அவர்கள் தம் தோழர்கள் நிரம்பியிருந்த ஓர் சபையில் கூறிய போது...

“அல்லாஹ்வின் தூதரே! அது எப்படி சாத்தியமாகும்?” என்று நபித்தோழர்கள் வினவ, அதற்கு நபி {ஸல்} அவர்கள் “போர்க்களத்தில் எதிரும் புதிருமாக இரு அணிகளில் உள்ள இருவர், ஒருவர் அல்லாஹ்வின் சத்திய சன்மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலந்து கொண்டவர். மற்றொருவர், சத்திய இஸ்லாம் மேலோங்கக் கூடாது எனும் முனைப்போடு எதிர்க் களத்தில் பங்கு பெற்றவர்.

எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாம் மேலோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கலந்து கொண்டவரை களத்தில் கொலை செய்கிறார். அவருக்கு ஷஹீத் உடைய அந்தஸ்து வழங்கப்படுகிறது. அவர் சுவனத்தில் நுழைவிக்கப் படுகிறார்.

பின்நாளில், எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாத்தைத் தழுவுகின்றார். பின்னர் தாம் எதிரும் புதிருமாய் இருந்த காலத்தில் யுத்த களத்தில் செய்த கொலைக்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பாச் செய்கிறார்.

அல்லாஹ் அவருக்கும் ஓர் நற்பேற்றை வழங்குகின்றான். அவர் சத்திய சன் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்கிற அடிப்படையில் நடக்கிற யுத்தத்தில் கலந்து கொண்டு தீனுக்காக தம் உயிரை அர்ப்பணிக்கிறார், ஷஹீதாகின்றார். எனவே, இவரும் சுவனத்தில் நுழைவிக்கப்படுகின்றார்” என்று கூறிய அண்ணலார் இதன் காரணத்தினாலேயே அல்லாஹ் சிரிக்கின்றான்” என்று கூறினார்கள்

( நூல்: அபூதாவூத் )

உதாரணத்திற்கு ஹம்ஸா (ரலி) அவர்களை இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் வஹ்ஷீ (ரலி) அவர்கள் கொலை செய்திருப்பார்கள். இஸ்லாத்திற்கு வந்த பின்னர் யமாமா யுத்தத்தில் பொய்யன் முஸைலமாவை கொன்று விட்டு அந்தப் போரில் தாமும் ஷஹீத் ஆகிவிடுவார்கள்.

(حديث مرفوع) حَدَّثَنَا مُحَمَّدٌ مِنْ لَفْظِهِ ، حَدَّثَنِي أَبُو الْمَيْمُونِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدٍ الْمُعَدَّلُ , مِنْ لَفْظِهِ سَنَةَ ثَمَانٍ وَتِسْعِينَ وَثَلاثِ مِائَةٍ ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عِيسَى أَبُو الْعَبَّاسِ الْعَمَّارِيُّ بِالأَثَارِبِ ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْعَمِّيُّ ، حَدَّثَنَا هُشَيْمٌ ، حَدَّثَنَا مُجَالِدُ بْنُ سَعِيدٍ ، عَنْ أَبِي الْوَدَّاكِ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلاثَةٌ يَضْحَكُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ : الرَّجُلُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يُصَلِّي ، وَالْقَوْمُ إِذَا صَفُّوا لِلصَّلاةِ ، وَالْقَوْمُ إِذَا صَفُّوا لِقِتَالِ الْعَدُوِّ " . غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ سَعْدِ بْنِ مَالِكِ بْنِ سِنَانٍ الْخُدْرِيِّ ، لا أَعْلَمُ حَدَّثَ بِهِ عَنْهُ غَيْرَ أَبِي الْوَدَّاكِ جَبْرِ بْنِ نَوْفٍ ، وَمَا كَتَبْنَاهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ ، وَحَدَّثَ بِهِ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ، عَنْ رَجُلٍ عَن هُشَيْمٍ ، فَكَأَنِّي سَمِعْتُهُ مِنْ عَبْدِ اللَّهِ ابْنِهِ .

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மூன்று வகை மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ் சிரிப்பான். முதல் வகையினர், இரவில் நின்று வணங்கிய வணக்கசாலிகள். இரண்டாம் வகையினர், தொழுகைக்காக ஸஃப்ஃபில் அணிவகுத்து நின்றவர்கள். மூன்றாம் வகையினர், போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திப்பதற்காக அணிவகுத்து நின்றவர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                ( நூல்: இப்னு மாஜா )

وأما ما ذكرته من كون الله تعالى إذا ضحك لعبد فلا حساب عليه، فقد روى أحمد في مسنده هذا الحديث وصححه الألباني رحمه الله ولفظه: وإذا ضحك ربك إلى عبد في الدنيا فلا حساب عليه.

அல்லாஹ் சிரிக்கிறான் என்பதற்கு என்ன பொருள் என்பதை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் விளக்கம் தருகிற போது “எவரைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றானோ அவரை அல்லாஹ் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் நுழைவித்து விடுவான்” என கூறினார்கள்.    

  ( நூல்: அஹ்மத் )

விதியை நம்புவது (ஈமான்)

விதியை நம்புவது (ஈமான்)

ஒரு உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். உறுதியாக நம்பவும் வேண்டும். அது அல்லாஹ் இந்த உலகை ஓர் நிர்ணயத்தின் அடிப்படையில் இயக்கிக் கொண்டிருக்கின்றான்.

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

அல்லாஹ் கூறுகின்றான்: ”நிச்சயமாக! நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட நிர்ணயத்தின் படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.”

உலகின் அத்துனை படைப்புகளும் அதனதன் நிர்ணயத்தின் மீது செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அது ஏற்கனவே முடிவும் செய்யப்பட்டு விட்டது. மனித வாழ்வும் அப்படித்தான்.

كان من معجزات نبي الله سليمان أنه يكلم الطير والريح والحيوانات جميعها، فجاء رجل إلى نبي الله سليمان فقال له يا نبي الله أريد أن تعلمني لغة، فقال له النبي سليمان لن تستطيع التحمل، ولكنه أصر على النبي سليمان، فقال له: تريد أن تتعلم أي لغة.. فقال لغة القطة فإنها كثيرة في حينا، فنفخ في أذنه، وفعلا تعلم لغة ، وذات يوم سمع قطتين تتحدثان، وقالت واحدة للأخرى ألديكم طعام فإنني سأموت جوعا؟ فقالت القطة لا، لا يوجد، ولكن في هذا البيت ديك وسيموت غدا وسنأكله، فقال والله لن أترككما تأكلان ديكي وسوف أبيعه، وفي الصباح الباكر باعه، فجاءت القطة وسألت الأخرى هل مات الديك، فقالت القطة: لا فقد باعه صاحب البيت.. ولكن سوف يموت خروفهم وسوف نأكله، فسمعهم صاحب البيت وذهب وباع الخروف..فجاءت القطة الجائعة وسألت هل مات الخروف؟ فقالت القطة لها قد باعه صاحب البيت، ولكن صاحب البيت سوف يموت وسيضعون طعاما للمعزين وسنأكل، فسمعهم صاحب البيت فصعق، فذهب يجري إلى نبي الله سليمان، وقال إن القطط تقول سوف أموت اليوم، فأرجوك يا نبي الله أن تفعل شيئا، فقال له: لقد فداك الله بالديك وبعته، وفداك بالخروف وبعته، أما الآن فأعد الوصية والكفن ـ

ஸுலைமான் (அலை) அவர்களிடம் ஒருவர் வந்தார். வந்தவர், ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு ஏராளமான பறவைகளின், உயிரினங்களின் மொழிகளைக் கற்றுத் தந்திருக்கின்றான்.

எனக்கு நீங்கள் ஏதாவது ஒரு உயிரினத்தின் மொழியைக் கற்றுத் தாருங்கள், அவைகள் பேசுவதை நான் கேட்க விரும்புகின்றேன்” என்று வேண்டி நின்றார். அதற்கு ஸுலைமான் (அலை) அவர்கள் “எனக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட வில்லை” என்றார்கள்.

ஆனால், அவரோ விடாப்பிடியாக கற்றுத்தருமாறு வற்புறுத்தினார். அதற்கு, ஸுலைமான் (அலை) அவர்கள் “நீர் எந்த உயிரினத்தின் பாஷையை கற்க விரும்புகின்றீரோ அதைத் தெரிவியுங்கள். நான் கற்றுத் தருகின்றேன்” என்றார்கள்.

அப்போது, அவர் “என் வீட்டில் இரண்டு பூனைகள் வாழ்ந்து வருகின்றன. அவைகளின் பேச்சைக் கேட்கவே அதிகம் விரும்புகின்றேன். ஆகவே, அதன் மொழிகளைக் கற்றுத்தாருங்கள்” என்றார்.

அப்போது, ஸுலைமான் (அலை) அவர்கள் “அவரை அருகே அழைத்து அவரின் காதில் ஏதோ ஒன்றை சொல்லி ஊதினார்கள். அவர் அந்த பூனைகள் பேசும் பாஷையைக் கேட்கும் ஆற்றலைப் பெற்றார். ஸுலைமான் (அலை) அவர்களிடம் நன்றி கூறி விடை பெற்றுச் சென்றார்.

இரவில் உறங்கச் செல்லும் முன்பாக, இரண்டு பூனைகளும் என்ன பேசிக் கொண்டிருக்கின்றது என தன் காதை பூனைகளுக்கு நேராக வைத்து, திரைமறைவில் நின்று கேட்டார்.

ஒரு பூனை இன்னொரு பூனையிடம் “உன்னிடத்தில் ஏதாவது உணவு இருந்தால் எனக்குக் கொடு, நான் பசியால் செத்து விடுவேன் போலிருக்கின்றது” என்றது.

அதற்கு, இன்னொரு பூனை ”கொஞ்சம் பொறுத்துக் கொள். நாளை நம் எஜமானன் வளர்க்கும் சேவல் செத்துவிடும். செத்த பிறகு அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்” என்றது.

இதைக் கேட்ட அந்த மனிதர் மறுநாள் அதிகாலையில் அந்த சேவலை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் சென்று விற்று விட்டார்.

சேவலைத் தேடியலைந்த அந்த பூனைக்கு எங்கும் சேவல் கிடைக்கவில்லை.  நேராக இன்னொரு பூனையிடம் வந்து “ நீ சொன்ன மாதிரி அந்தச் சேவல் செத்து, நம் கண்ணில் படாத ஏதோ இடத்தில் நம் எஜமான் புதைத்திருப்பான் போலும்” என்றது.

அதற்கு, அந்தப்பூனை “அதிகாலையிலேயே அதைத் தூக்கிக் கொண்டு நம் எஜமான் விற்று காசாக்கி விட்டான்” என்றது. இதைக் கேட்ட அந்த பூனை ஏமாற்றத்தோடு சென்றது.

இரவு நேரம் வந்தது. முன்பு போல் அந்த பூனையிடம் முறையிட்டது, பசியால் வாடும் இந்தப்பூனை. “கவலைப் படாதே! நாளை நம் எஜமான் வளர்க்கும் ஆட்டுக் குட்டி செத்துவிடும், அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்” என்றது.

முன்பு போல் திரைமறைவில் நின்று கேட்ட அவன் திடுக்கிட்டான். முன்பு போன்று அதிகாலையிலேயே அந்த ஆட்டைத் தூக்கிச் சென்று சந்தையில் விற்று விட்டான்.
ஆட்டுக்குட்டியைத் தேடியலைந்த அந்த பூனைக்கு எங்கும் ஆட்டுக்குட்டி கிடைக்கவில்லை.  நேராக இன்னொரு பூனையிடம் வந்து “ நீ சொன்ன மாதிரி அந்த ஆட்டுக்குட்டி செத்து, நம் கண்ணில் படாத ஏதோ இடத்தில் நம் எஜமான் புதைத்திருப்பான் போலும்” என்றது.

அதற்கு, அந்தப்பூனை “அதிகாலையிலேயே அதைத் தூக்கிக் கொண்டு நம் எஜமான் விற்று காசாக்கி விட்டான்” என்றது. இதைக் கேட்ட அந்த பூனை மிகுந்த ஏமாற்றத்தோடு சென்றது.

இரவு நேரம் வந்தது. முன்பு போல் அந்த பூனையிடம் முறையிட்டது, பசியால் வாடும் இந்தப்பூனை. “கவலைப் படாதே! நாளை நம் எஜமான் செத்து விடுவார். அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்” என்றது.

முன்பு போல் திரைமறைவில் நின்று கேட்ட அவன் திடுக்கிட்டான். அவன் தலையில் இடி விழுந்ததைப் போன்று உணர்ந்தான். உடனடியாக, ஸுலைமான் (அலை) அவர்களிடம் ஓடி வந்தான். ”நடந்த சம்பவங்களைக் கூறிவிட்டு என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்றான்.

அதற்கு, ஸுலைமான் (அலை) அவர்கள் “எப்படி நீ சேவல் விஷயத்திலும், ஆட்டுக்குட்டி விஷயத்திலும் புத்தி சாதுர்யத்தோடு நடந்து கொண்டாயோ, அது போன்றே இப்போதும் நடந்து கொள்” என்று கூறிவிட்டு..

வீட்டுக்குச் சென்று மரணசாசனத்தையும், கஃபன் துணியையும் தயாராக வை” என்று கூறி அனுப்பினார்கள்.

( நூல்: அத்துரருஸ் ஸனிய்யா )

ஆக அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் என்ன கொடுக்க வேண்டும் என நிர்ணயித்து இருக்கின்றானோ அதை அம்மனிதனுக்குக் கொடுப்பான். இன்னொரு மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்ற வாழ்வியல் அருட்கொடைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டுமென ஆசைப்படுவது இறுதியில் தமக்கே பாதகமாக அமைந்து விடும் என்பதை மேற்கூறிய சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

அந்த வகையில் ஒரு மனிதனின் ஆயுட்காலம், வாழ்வாதாரம், வாழ்க்கைச் சூழ்நிலை எப்படி அமைய வேண்டும் என அல்லாஹ்வால் தீர்மானிப்பட்டு விட்டது, நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதன் படியே மனித வாழ்வும் அமைந்திருக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம் (சிறு குறிப்பு) !!!

தலைவர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம்  (சிறு குறிப்பு)  !!!

                                 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏ 

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(68:4)

மனிதர்களில் சிறந்தவர்கள் பணம் படைத்தவர்கள் அல்லர். மாறாக நற்குணம் படைத்தவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள் ஆவர். நற்குணம் படைத்தவர்கள் புகழ் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைத் தேடி புகழ் ஓடி வருகிறது. 

1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் அழகிய போதனைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.

நாகரீகமில்லாத, படிப்பறிவில் மிகவும் குறைந்த, சரியான கொள்கை கோட்பாடுகளற்ற, மௌட்டீக மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கித் திளைத்த ஒரு சமுதாயம். வரலாற்று அறிவோ, விஞ்ஞான அறிவோ சொல்லிக் கொள்ளும்படியான அளவுக்கு வளராத அந்த காலத்தில், தாங்கள் கொண்டிருந்த கொள்கைக்கே அல்லது நம்பிக்கைக்கே எதிராக இருந்த இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்றால், நிச்சயமாக! அந்த மக்கள் பிற மதங்களை ஆராய்ந்தோ அல்லது இறைவன், நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் நாட்டங்கொள்ளச் செய்தது என்றால் மிகையாகாது.
நன்னடத்தையும், நற்குணமும் இல்லாமல் எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைச் சொன்னாலும் அது மக்களிடையே எடுபடாது அல்லது ஒரு நிரந்தர நல்விளைவினை ஏற்படுத்தாது.

இன்னும், அல்லாஹ் தனது திருமறையிலே தனது தூதரை நோக்கி

                فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்(3:159)

என்று கூறுகிறான்'. ஆக நபி(ஸல்) அவர்களை கடுமையானவராகவோ அல்லது முன்னுக்குப்பின் முரணாகவோ அந்த மக்கள் கண்டிருந்தால், அவர்களை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள். கொள்கையைப் பற்றியெல்லாம் அந்த தருணத்தில் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் நற்குணம் அந்த மக்களை இஸ்லாத்தில் நுழையச் செய்தது மட்டுமில்லாமல் அவர்கள் ஒவ்வொருவரையும் நற்குணவாதியாகவும், சத்திய சீலர்களாகவும் மாற்றியது.
அதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வது எது? என வினவப்பட்டபோது தக்வாவும், நற்குணங்களும்தான் என்றார்கள் நபியவர்கள்.
ஆதாரம்: திர்மிதீ

நற்குணம்தான் மறுமையில் நன்மையின் தராசை கனமாக்கக்கூடியது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) 
நூல் : அபூதாவூத் 4799, திர்மிதீ 2002

எனக்கு அதிகம் நேசத்திற்குரியவரையும், மறுமைநாளில் என்னுடைய சபையில் அதிக நெருக்கத்திற்குரியவரையும் நான் அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் மௌனமாக இருந்தார்கள். இரண்டு தடவை மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டார்கள். இறுதியாக நபித்தோழர்கள் அல்லாஹ்வின்  தூதரே கூறுங்கள் என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உங்களிள்   அழகிய குணம் கொண்டவரே என பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐய் (ரலி) 
நூல் : அஹ்மத் 6735, புகாரியின் அதபுல் முஃப்ரத் 275

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்த அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.
நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தைவிட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒருபொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.  அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
மனிதர்களில் மிகச் சிறந்தவர்கள் நபி(ஸல்) அவர்கள்: நபி(ஸல்) அவர்கள், மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள். 
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அவர்கள், ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

பிறரின் மனதில்  கவலையை ஏற்படுத்தும்  ஒன்றை கூட  நபி(ஸல்) அவர்கள் செய்ய விரும்பவில்லை. நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக அளித்தேன், அதை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள் அப்பொழுது என் முகத்திலுள்ள (வருத்தத்தை பார்த்து ஹஜ்ஜிற்காக) நாம் இஹ்ராம் கட்டி இருப்பதால், இதை (வேட்டையாடப்பட்ட காட்டு கழுதையை) ஏற்றுக் கொள்ளாமல் நாம் உம்மிடம் திருப்பிக் கொடுக்கிறோம் என அவர்கள் கூறினார்கள். 

(புகாரி, முஸ்லிம்)

சிலர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று வினவினர்.
நபி(ஸல்) அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.
நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும்.
நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' 

(ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தங்களது சொல், செயலால் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.
அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார்.
நபி(ஸல்) அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மௌனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். 

(முஸ்னத் அபூ யஃலா)

சரி! நற்குணம், நற்குணம் என்று எழுதுகிறோம். பேசுகிறோம். நற்குணம் என்றால் என்ன? அதன் அளவு கோல் என்ன? நற்குணங்களைப் பெறுவது எப்படி? பிறரிடம் நற்குணத்துடன் பழகுவது எப்படி? 

ஆம். நற்குணத்தின் ரத்தினச் சுருக்கமும், அதன் சாராம்சமும் பின் வரும் முத்தான மூன்று அம்சங்கள்; அம்மூன்றிலும் எண்ணிலடங்காத பல அம்சங்கள் புதைந்து கிடைக்கின்றன.

''நற்குணம் என்பது 
1. மலர்ந்த முகத்துடன் புன்முறுவல் பூப்பது 
2. நலவுகளைச் செலவு செய்வது 
3. நோவினையைத் தடுப்பது''

 (அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்)
 நூல்: திர்மிதி) 

மேற்கூறிய மூன்று அம்சங்களையும் பேணக்கூடிய ஒவ்வொருவருமே நற்குணங்கள் உடையவர்களே!

முத்தான மூன்று அம்சங்களையும் கடைப்பிடித்த காரணத்தால்தான் நமது நாயகத்தை  ''நற்குணங்களின் தாயகம் நபிகள் நாயகம்''  என்று உலகம் போற்றுகிறது.

''சங்கையான நற்குணங்களை பரிபூரணப்படுத்தவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று நபிகளார் கூறினார்கள்.
 (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்பொழுதுமே யாரைக் கண்டாலும் முகமலர்ச்சியுடன் புன்னகை புரிவார்கள்; இறுக்கமான முகத்துடன் அவர்களைக் காணமுடியாது. இன்முகத்துடன் எந்நேரமும் இருப்பார்கள்.

''நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பத்தாண்டு காலம் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னைப் பார்த்து 'ச்சீ' என்று ஒருபோதும் கூறியது கிடையாது. நான் செய்ததை 'ஏன் செய்தாய்?' என்றோ, நான் செய்யாததை 'நீர் இவ்வாறு செய்ய வேண்டாமா?' என்றும் கேட்டது கிடையாது'' 
(அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

''அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருவருப்பாக பேசுபவராகவும், அருவருக்கத்தக்கவைகளைக் கேட்பவராகவும் இருந்ததில்லை'' (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஆஸ் (ரலி) நூல்: புகாரி)

மேலும் அதிகமான நன்மைகளை நபிகளார் மக்களுக்குச் செய்திருக்கிறார்கள்.

''நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எதைக் கேட்டாலும் அவர்களிடம் இருந்து 'இல்லை' என்று பதில் வந்தது கிடையாது'' 

(அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி)

நற்குணம் என்பது பொருளை செலவு செய்வது மட்டு மல்ல; நன்மையான ஒவ்வொன்றுமே நற்குணம்தான்.
மேலும் நபிகளார் யாருக்கும் எந்த விதத்திலும் நோவினை கொடுத்தது கிடையாது. பகைவனுக்குக் கூட நன்மை செய்தவர், பெருமானார் (ஸல்) அவர்கள்.

''நபிகளார் தீங்குக்குப் பதிலாகத் தீங்கு செய்பவராக இருந்ததில்லை; எனினும் மன்னிக்கும் மனப்பான்மை உடையவராக இருந்திருக்கிறார்கள்.'' (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) அவர்கள்)

நற்குணங்களின் அடிப்படையான  முத்தான மூன்று குணங்களிலும் நபி (ஸல்) அவர்கள் முத்திரை பதித்துள்ளார்கள். நற்குணங்களைப் பேணுகின்றவர்கள் இந்த மூன்று அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

''ஒரு இறைவிசுவாசி, நற்குணத்தின் மூலம் பகல் முழுவதும் நோன்பிருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கியவரின் மேன்மையை அடைந்து விடுகிறார்.”

 (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூ தாவூத்)

நபி(ஸல்) அவர்களின் அனைத்து நற்பண்புகளையும் நமதுவாழ்க்கையில் கொண்டுமுன்மாதிரி மனிதனாக நாம் வாழ வேண்டும் .அதிலும் குறிப்பாக மாற்று சமய மக்களிடம் பழகும்போது நம்மிடம் தீயகுணங்கள்,தீயசெயல்கள் வெளிப்பட்டு விடாமல் பார்த்து கொள்ளவேண்டும். ஏனெனில் அவர்கள் குர்ஆனையோ ஹதீஸையோ வரலாறுகளையோ பார்த்து இஸ்லாத்தை விளங்குவதில்லை மாறாக நமது வாழ்க்கையை பார்த்து தான் இஸ்லாத்தை எடை போட்டு பார்க்கின்றார்கள்.

அடுத்தவர் சிந்திய சளியை அகற்றிய அதிபரை கண்டதுண்டா?  
புகாரி – 405  

நாசத்தைக் கூறிய நயவஞ்சகனிடமும் நளினத்தை காட்டிய அதிபரைக் கண்டதுண்டா?   
புகாரி – 6024

அதிபரோ தரையில் நடக்க தான் நியமித்த அதிகாரியோ குதிரையில் இருக்க வாழச்சொல்லி வழியனுப்பிய அதிபரைக் கண்டதுண்டா? 
அஹ்மத் - 21040.

சிறுவர்களிடம் முந்திக்கொண்டு முகமன் கூறும் அதிபரைக் கண்டதுண்டா?  
புகாரி – 6247

போரிலும் கூட கெட்ட போர் முறைகளை மாற்றி திருத்தம் செய்து போர்களை கண்ட அதிபரைக் கண்டதுண்டா?
 புகாரி – 3014

நம் நபி நாயகத்தை போன்று எல்லோரிடத்திலும் நற்குனத்தோடு வாழும் நல்ல மக்களாக வல்லோன் அல்லாஹ் நம்மை ஆக்குவானாகஆமீன்.

Sunday, 28 October 2018

அழுகையும், சிரிப்பும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்!!

அழுகையும், சிரிப்பும் அல்லாஹ்வின்  அருட்கொடைகள்!!

அழுகையும் சிரிப்பும் மனிதனுக்கு இயற்கையாக ஏற்படுகிற சுபாவங்களில் ஒன்றாகும்.

கவலையும், துக்கமும், கஷ்டமும், நோவினையும் ஏற்படுகிற போது மனிதன் அழுகின்றான்.

மகிழ்ச்சியும், சந்தோஷமும், இன்பமும், வெற்றியும் ஏற்படுகிற போது மனிதன் சிரிக்கின்றான்.

யதார்த்தத்தில் இது மனிதனுக்கு ஏற்படுகிற உணர்வாக இருந்தாலும் கூட உண்மையில் அழவைப்பவனும், சிரிக்கவைப்பவனும் இறைவன் தான் என்று இஸ்லாம் போதிக்கின்றது.

وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى ()

”மேலும், அவனே சிரிக்க வைக்கின்றான்; அவனே அழவும் வைக்கின்றான்”
                                                        (அல்குர்ஆன்: 53:43 )

ஏனெனில், எந்த ஒரு மனிதனாலும் நான் சாகும் வரை சிரிக்கவே மாட்டேன் என்றோ, நான் சாகும் வரை அழவே மாட்டேன் என்றோ உறுதியிட்டுக் கூற முடியாது.

மனித வாழ்க்கையை அல்லாஹ் இத்தகைய உணர்வுகள் சுழன்று வரும் வகையிலேயே அமைத்திருக்கின்றான்.

ஆகவே, மனிதன் அழுவதாகட்டும், சிரிப்பதாகட்டும் அதனதன் எல்லைகளில், வரம்புகளில் நின்று கொள்ள வேண்டும் என்றும், அதற்காக நாளை மறுமையில் கூலி வழங்கப்படும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ ()

“அவர்கள் குறைவாக சிரிக்கட்டும்; அதிகமாக அழட்டும்! ஏனெனில், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றின் அளவு கூலி கொடுக்கப்படுவார்கள்”.
                                                         (அல்குர்ஆன்: 9:82 )

ஸஹாபாக்களின் வாழ்க்கையும் இஸ்லாத்தின் வளர்ச்சியும்

ஸஹாபாக்களின்  வாழ்க்கையும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் 

நபித்தோழர்களின் ஒவ்வொரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு வளர்ச்சியை தந்தது. இன்னும் சில சஹாபாக்களின் மரணமும் கூட அவர்களின் இழப்பை ஈடு செய்யும் அளவிற்கு முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.

روى ثمامة بن عبد الله بن أنس أن حرام بن ملحان، وهو خال أنس: لما طعن يوم بئر معونة أخذ من دمه، فنضحه على وجهه ورأسه، وقال: فزت ورب الكعبة.
وأخبار عامر بن الطفيل انه رفع إلى السماء وذكر أن الذي قتله جبار بن
سلمى الكلابي قال: ولما طعنه بالرمح قال فزت ورب الكعبة ثم سأل جبار بعد ذلك: ما معنى قوله فزت قالوا: يعني بالجنة، فقال: صدق والله ثم أسلم جبار بعد ذلك لذلك

            ஹிஜ்ரி 4ம் ஆண்டு சபர் மதம் நடைபெற்ற பிஹ்ரு மஊனா என்ற போரில் ஹராம்பின் மில்ஹான் (ரலி) அவர்கள் குத்தி கொல்லப்பட்ட நேரத்தில் தன் மீது வடிந்த இரத்தத்தை தனது கையால் எடுத்து அதை மகிழ்ச்சியுடன் தனது முகத்திலும் தலையிலும் தெளித்தார்.                    
   ஜப்பார் பின் அல்மா என்பவர் தான் ஹராம் (ரலி) அவர்களை கொலை செய்தார். அவ்வாறு ஈட்டியால் அவரை கொன்ற நேரத்தில் ஹராம் (ரலி) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது  சத்தியமாக நான் வென்று விட்டேன் என்று சொன்னார். இதனுடைய பொருள் முஸ்லிம்களிடத்தில் ஜப்பார் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் அவருக்கு அதன்மூலம் சுவர்க்கம் கிடைத்தது. எனவே தான் அவர் சொன்னார் என்றார்கள் . இதற்கு பிறகு ஹராம் (ரலி) அவர்கள் சொன்ன வார்த்தையை ஜப்பார் நன்றாக சிந்தித்தார். கொலை செய்த நாம் தான் வென்றதாக எண்ணினோம் ஆனால் கொல்லப்பட்ட அவர் வென்றதாக சொன்னார் என்றால் ஒருவர் தன் உயிரை விடவும் மேலாக மதிக்கும் ஒரு மார்க்கம் சத்திமானதாகத்தான்  இருக்க வேண்டும்  என்று யோசித்து ஹராம் (ரலி) அவர்கள் சொன்ன அந்த வார்த்தையின் காரணமாக ஜப்பார் முஸ்லிமாக ஆனார்.

நூல். பிதாயா வன்னிஹாயா

எனவே கொல்லப்பட்ட அந்த சஹாபி தன் இடத்தில் இருந்து தனக்கு பிறகு இஸ்லாத்திற்கு சேவையாற்ற ஒருவரை உருவாக்கிவிட்டு தான் மரணமானார்.

Tuesday, 16 October 2018

நரகத்தை பெற்றுத்தரும் மீலாத் விழாக்கள்

நரகத்தை பெற்றுத்தரும்
மீலாத் விழாக்கள்

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன்திருமறையில்...
يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ
شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏ 
وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا‏ 

'நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும்,நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்'
(அல்குர்ஆன் 33:45,46)

அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைந்திட
முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடானகோடி மக்கள் காத்திருக்கின்றனர்.

ஆன்மீகத்தை வாழ்வின் சரியான அம்சமாக வாழ்ந்து காட்டியும்,அதை மனிதகுலத்துக்கு உணர்த்தியும் காட்டிய அழகான மாமனிதர் அண்ணலார் நபி(ஸல்) அவர்கள்!

மனித இனம் செல்லவேண்டிய சரியான திசையை இனங்காட்டியதில் அண்ணல் நபி(ஸல்) அவர்களைப்போன்று உலக வரலாற்றில் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இதுபோல் இன்னும் எத்தனையோ சீர்மிகு சிறப்புகளையும் மேன்மைகளையும் பெற்றிருக்கும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் வந்துவிட்டால் அதில் குறிப்பிட்ட சில தினங்களில் பெருமானார்(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அவர்களை கண்ணியப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டித்தராத, கட்டளையிடாத காரியங்களையெல்லாம் வணக்கமாக நினைத்துச் செயல்படும் அவலநிலை முஸ்லிம் சமுதாயத்தில் நிலவிவருவதை நாம் பார்க்கின்றோம்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலைப் பாடுவதும், அதிலிருக்கும் வரம்புமீறிய கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் சினிமா பாடல்களை ராகமாகப் பாடி மகிழ்வதும், அண்ணலாரின் பிறந்தநாள்விழா என்று குறிப்பிட்ட பன்னிரெண்டு நாட்களிலும் மக்களிடம் காசு வசூலித்து பல பெரிய தேக்சா சட்டிகளில் சோறாக்கி கந்தூரி என்ற பெயரில் உணவு விழா கொண்டாடுவதையும் பார்க்கின்றோம்.

அட்ரஸ் இல்லாத மவ்லிதுகளுக்கும், கந்தூரிகளுக்கும் விழா எடுத்து அதற்கு இஸ்லாம் என்ற பெயரும் கொடுத்து தங்களின் பொன்னான உழைப்பையும், பொருளையும் வீணடிக்கின்றனர். இதுபோன்ற காரியங்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு பெருமை சேர்க்குமா?! எண்ணிப்பார்க்க வேண்டும் முஸ்லிம் சமுதாயமே!

வல்ல அல்லாஹ் தன் திருமறையில்

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌
وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏ 
வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன் பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

நல்லறங்கள் செய்து இறைவனின் அன்பைப் பெற்றவனாக ஆகலாமே தவிர மனிதன் ஒருபோதும் இறைவனாக முடியாது. இதை வலியுறுத்தும் விதமாகவே மாநபி(ஸல்) அவர்கள், மனிதர்கள் தங்களுக்குள் வரம்புமீறி புகழ்ந்துகொள்ளும் வாசலை அடைக்கின்றார்கள்.
عن ابنِ عَبَّاسٍ رضي الله عنهما
سَمِعَ عُمَرَ رضي الله عنه
يَقُولُ عَلَى المِنْبَرِ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ:
«لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا: عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ».
 ''கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை
(அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 3445

நபி (ஸல்) அவர்கள் என்ன காரணத்திற்காக அஞ்சி, தம்மைப் புகழக் கூடாது என்றார்களோ அந்தக் காரணத்தை,புகழ்ச்சியில் வரம்பு மீறுதலை இந்தச் சமுதாயம் அப்படியே நிறைவேற்றுவதை நாம் பார்க்கின்றோம்.

தற்போது தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப்பெற்ற மவ்லித் புத்தகங்கள் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும், நபி(ஸல்) அவர்களின் சொல்-செயல்களுக்கும் நேர்மாறானவை மற்றும் நேரடியாக மோதக்கூடியவையாகும்.

அல்லாஹ்விடம் மட்டுமே எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். வேறு யாரிமும் கேட்கக் கூடாது. அந்த ஏக வல்ல நாயன் அல்லாஹ்விடம்
ஒரு நாள் ஒன்றுக்கு 100 தடவை நான் இஸ்திக்ஃபார் தேடுகிறேன்'' என்று கூறிய அந்த இறைத்தூதரிடத்திலேயே,

 ''கஃப்பிரூ அன்னீ துனூபீ
வஃபு லீ அன் சய்யிஆ(த்)தீ''
(நீர் என் பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்திடுவீர்.
நீங்கள் நாசத்தை ஏற்படுத்தும் நரகத்தை பெற்றுத்தரும் மீலாத் விழாக்கள்

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன்திருமறையில்...
يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ
شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏ 
وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا‏ 

'நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும்,நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்'
(அல்குர்ஆன் 33:45,46)

அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைந்திட
முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடானகோடி மக்கள் காத்திருக்கின்றனர்.

ஆன்மீகத்தை வாழ்வின் சரியான அம்சமாக வாழ்ந்து காட்டியும்,அதை மனிதகுலத்துக்கு உணர்த்தியும் காட்டிய அழகான மாமனிதர் அண்ணலார் நபி(ஸல்) அவர்கள்!

மனித இனம் செல்லவேண்டிய சரியான திசையை இனங்காட்டியதில் அண்ணல் நபி(ஸல்) அவர்களைப்போன்று உலக வரலாற்றில் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இதுபோல் இன்னும் எத்தனையோ சீர்மிகு சிறப்புகளையும் மேன்மைகளையும் பெற்றிருக்கும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் வந்துவிட்டால் அதில் குறிப்பிட்ட சில தினங்களில் பெருமானார்(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அவர்களை கண்ணியப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டித்தராத, கட்டளையிடாத காரியங்களையெல்லாம் வணக்கமாக நினைத்துச் செயல்படும் அவலநிலை முஸ்லிம் சமுதாயத்தில் நிலவிவருவதை நாம் பார்க்கின்றோம்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலைப் பாடுவதும், அதிலிருக்கும் வரம்புமீறிய கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் சினிமா பாடல்களை ராகமாகப் பாடி மகிழ்வதும், அண்ணலாரின் பிறந்தநாள்விழா என்று குறிப்பிட்ட பன்னிரெண்டு நாட்களிலும் மக்களிடம் காசு வசூலித்து பல பெரிய தேக்சா சட்டிகளில் சோறாக்கி கந்தூரி என்ற பெயரில் உணவு விழா கொண்டாடுவதையும் பார்க்கின்றோம்.

அட்ரஸ் இல்லாத மவ்லிதுகளுக்கும், கந்தூரிகளுக்கும் விழா எடுத்து அதற்கு இஸ்லாம் என்ற பெயரும் கொடுத்து தங்களின் பொன்னான உழைப்பையும், பொருளையும் வீணடிக்கின்றனர். இதுபோன்ற காரியங்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு பெருமை சேர்க்குமா?! எண்ணிப்பார்க்க வேண்டும் முஸ்லிம் சமுதாயமே!

வல்ல அல்லாஹ் தன் திருமறையில்

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌
وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏ 
வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன் பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

நல்லறங்கள் செய்து இறைவனின் அன்பைப் பெற்றவனாக ஆகலாமே தவிர மனிதன் ஒருபோதும் இறைவனாக முடியாது. இதை வலியுறுத்தும் விதமாகவே மாநபி(ஸல்) அவர்கள், மனிதர்கள் தங்களுக்குள் வரம்புமீறி புகழ்ந்துகொள்ளும் வாசலை அடைக்கின்றார்கள்.
عن ابنِ عَبَّاسٍ رضي الله عنهما
سَمِعَ عُمَرَ رضي الله عنه
يَقُولُ عَلَى المِنْبَرِ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ:
«لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا: عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ».
 ''கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை
(அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 3445

நபி (ஸல்) அவர்கள் என்ன காரணத்திற்காக அஞ்சி, தம்மைப் புகழக் கூடாது என்றார்களோ அந்தக் காரணத்தை,புகழ்ச்சியில் வரம்பு மீறுதலை இந்தச் சமுதாயம் அப்படியே நிறைவேற்றுவதை நாம் பார்க்கின்றோம்.

தற்போது தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப்பெற்ற மவ்லித் புத்தகங்கள் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும், நபி(ஸல்) அவர்களின் சொல்-செயல்களுக்கும் நேர்மாறானவை மற்றும் நேரடியாக மோதக்கூடியவையாகும்.

அல்லாஹ்விடம் மட்டுமே எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். வேறு யாரிமும் கேட்கக் கூடாது. அந்த ஏக வல்ல நாயன் அல்லாஹ்விடம்
ஒரு நாள் ஒன்றுக்கு 100 தடவை நான் இஸ்திக்ஃபார் தேடுகிறேன்'' என்று கூறிய அந்த இறைத்தூதரிடத்திலேயே,

 ''கஃப்பிரூ அன்னீ துனூபீ
வஃபு லீ அன் சய்யிஆ(த்)தீ''
(நீர் என் பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்திடுவீர்.
நீங்கள் நாசத்தை ஏற்படுத்தும் ், (நபுஸ்) மோகம் பிடித்தவர்களுமே அதனை புதிதாக உருவாக்கினர். உணவில் அதிக நாட்டம் உடையோர் அதற்கு முன்னுரிமை வழங்கி அதனை கட்டிக் காத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்க: அல்மவ்ரித்
ஃபீ அமலில் மவ்லித்
பக்: (20- 21)
அல்லது அல்ஹாவி
பாகம் :1-பக் : (189)

மீலாத் விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது
(நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 - பக்கம் 172)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறி இயற்றப்பட்ட மவ்லிதுகள்
புகழ்வதல்ல மாறாக
இழிவு படுத்துவது
என்பதையும் இவற்றை ஓதினால் சுவனம் கிடைக்காது நரகம் தான் கிடைக்கும்

அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா?என்றால் நிச்சயமாக இருக்கின்றது. திருமறைக் குர்ஆனில்...

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 

 'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்:  3:31)

இந்த வசனத்தில், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக்கூடிய ஸலவாத்தை ஓதவேண்டும்.

அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனில்...
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ
وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏ 

அல்லாஹ் இந்த நபிக்கு
அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்!
ஸலாமும் கூறுங்கள்!
(அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது.இதற்க்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ்வது   நிச்சயமாக அது யூத,கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித்தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி(ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.
فروى البخاري عن عَبْد الرَّحْمَنِ بْن أَبِي لَيْلَى، قَالَ: " لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ ، فَقَالَ: أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ ، فَقُلْتُ: بَلَى ، فَأَهْدِهَا لِي، فَقَالَ: سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ ، كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ البَيْتِ ، فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ؟ قَالَ:
( قُولُوا:
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ،
كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ) .
 நபி (ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்''என்று சொல்லுங்கள், என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : புகாரி 4797

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
"من صلى علي صلاة واحدة
صلى الله عليه عشرا". رواه مسلم
யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 628

فعن عبد الله بن مسعود رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( إن لله ملائكة سياحين
في الأرض يبلغوني من أمتي السلام )
நிச்சயமாக பூமியில் சுற்றித்திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)
 நூல்: நஸயீ 1265

ஆகவே அல்லாஹ்வின் வெறுப்பை பெற்றுத்தரும் மவ்லிதுகளை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் நபி(ஸல்) அவர்கள் மீது
ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.