Pages

Sunday, 28 October 2018

ஸஹாபாக்களின் வாழ்க்கையும் இஸ்லாத்தின் வளர்ச்சியும்

ஸஹாபாக்களின்  வாழ்க்கையும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் 

நபித்தோழர்களின் ஒவ்வொரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு வளர்ச்சியை தந்தது. இன்னும் சில சஹாபாக்களின் மரணமும் கூட அவர்களின் இழப்பை ஈடு செய்யும் அளவிற்கு முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.

روى ثمامة بن عبد الله بن أنس أن حرام بن ملحان، وهو خال أنس: لما طعن يوم بئر معونة أخذ من دمه، فنضحه على وجهه ورأسه، وقال: فزت ورب الكعبة.
وأخبار عامر بن الطفيل انه رفع إلى السماء وذكر أن الذي قتله جبار بن
سلمى الكلابي قال: ولما طعنه بالرمح قال فزت ورب الكعبة ثم سأل جبار بعد ذلك: ما معنى قوله فزت قالوا: يعني بالجنة، فقال: صدق والله ثم أسلم جبار بعد ذلك لذلك

            ஹிஜ்ரி 4ம் ஆண்டு சபர் மதம் நடைபெற்ற பிஹ்ரு மஊனா என்ற போரில் ஹராம்பின் மில்ஹான் (ரலி) அவர்கள் குத்தி கொல்லப்பட்ட நேரத்தில் தன் மீது வடிந்த இரத்தத்தை தனது கையால் எடுத்து அதை மகிழ்ச்சியுடன் தனது முகத்திலும் தலையிலும் தெளித்தார்.                    
   ஜப்பார் பின் அல்மா என்பவர் தான் ஹராம் (ரலி) அவர்களை கொலை செய்தார். அவ்வாறு ஈட்டியால் அவரை கொன்ற நேரத்தில் ஹராம் (ரலி) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது  சத்தியமாக நான் வென்று விட்டேன் என்று சொன்னார். இதனுடைய பொருள் முஸ்லிம்களிடத்தில் ஜப்பார் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் அவருக்கு அதன்மூலம் சுவர்க்கம் கிடைத்தது. எனவே தான் அவர் சொன்னார் என்றார்கள் . இதற்கு பிறகு ஹராம் (ரலி) அவர்கள் சொன்ன வார்த்தையை ஜப்பார் நன்றாக சிந்தித்தார். கொலை செய்த நாம் தான் வென்றதாக எண்ணினோம் ஆனால் கொல்லப்பட்ட அவர் வென்றதாக சொன்னார் என்றால் ஒருவர் தன் உயிரை விடவும் மேலாக மதிக்கும் ஒரு மார்க்கம் சத்திமானதாகத்தான்  இருக்க வேண்டும்  என்று யோசித்து ஹராம் (ரலி) அவர்கள் சொன்ன அந்த வார்த்தையின் காரணமாக ஜப்பார் முஸ்லிமாக ஆனார்.

நூல். பிதாயா வன்னிஹாயா

எனவே கொல்லப்பட்ட அந்த சஹாபி தன் இடத்தில் இருந்து தனக்கு பிறகு இஸ்லாத்திற்கு சேவையாற்ற ஒருவரை உருவாக்கிவிட்டு தான் மரணமானார்.

No comments:

Post a Comment