Pages

Saturday, 13 June 2015

ஸூரத்துல் புரூஜ்(கிரகங்கள்)

ஸூரத்துல் புரூஜ்(கிரகங்கள்)
மக்கீ, வசனங்கள்: 22

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
85:1    وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
85:1கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:2   وَالْيَوْمِ الْمَوْعُودِ
85:2இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3   وَشَاهِدٍ وَمَشْهُودٍ
85:3மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4   قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
85:4(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:5   النَّارِ ذَاتِ الْوَقُودِ
85:5விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:6   إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
85:6அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:7   وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
85:7முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:8   وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
85:8(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
85:9   الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
85:9வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:10   إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
85:10நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:11   إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
85:11ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
85:12   إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
85:12நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
85:13   إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
85:13நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
85:14   وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
85:14அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:15   ذُو الْعَرْشِ الْمَجِيدُ
85:15(அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
85:16   فَعَّالٌ لِّمَا يُرِيدُ
85:16தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
85:17   هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
85:17(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:18   فِرْعَوْنَ وَثَمُودَ
85:18ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:19   بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
85:19எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:20   وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ
85:20ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:21   بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
85:21(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:22   فِي لَوْحٍ مَّحْفُوظٍ
85:22(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

No comments:

Post a Comment