Pages

Saturday, 13 June 2015

சூரத்துல் இன்ஷிகாக்

ஸூரத்துல் இன்ஷிகாக்(பிளந்து போதல்)
மக்கீ, வசனங்கள்: 25

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
84:1    إِذَا السَّمَاءُ انشَقَّتْ
84:1வானம் பிளந்துவிடும் போது-
84:2   وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
84:2தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
84:3   وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
84:3இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
84:4   وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
84:4அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
84:5   وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
84:5தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
84:6   يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
84:6மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
84:7   فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
84:7ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
84:8   فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
84:8அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:9   وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
84:9இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
84:10   وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
84:10ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:11   فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
84:11அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
84:12   وَيَصْلَىٰ سَعِيرًا
84:12அவன் நரகத்தில் புகுவான்.
84:13   إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
84:13நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:14   إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ
84:14நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
84:15   بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
84:15அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
84:16   فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
84:16இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
84:17   وَاللَّيْلِ وَمَا وَسَقَ
84:17மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
84:18   وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
84:18பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
84:19   لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
84:19நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
84:20   فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
84:20எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.
84:21   وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
84:21மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
84:22   بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
84:22அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
84:23   وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
84:23ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
84:24   فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
84:24(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
84:25   إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
84:25எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.

No comments:

Post a Comment