Tuesday, 26 May 2015

ஜாபிர்(ரலி)


6382. ஜாபிர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள். 
(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், 'அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ 'ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ' ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி'ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி' என்று பிரார்த்தித்து, 'உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்' என்று கூறினார்கள். 
(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், 'நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்' அல்லது 'என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்' நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) 

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...