Pages

Sunday, 1 September 2013

மவ்லவி ஹாஃபிழ் s முஹம்மது ஹனீஃப் ஆலிம் ஹஸனி

கேள்வி'பதில்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... (திருமணத்திற்கு
முன் பெண்ணை நேரடியாக பார்க்க இஸ்லாத்தில்
அனுமதி உண்டா ???)
" விதவை பெண்ணிடம்
அவளது கட்டளையை பெறாமலும், கன்னிப்
பெண்ணிடம் சம்மதம் பெறாமலும் திருமணம்
செய்து வைக்க கூடாது " என்று நபி [ஸல்]
அவர்கள் கூறினார்கள்.. அப்போது நபித் தோழர்கள்,
அல்லாஹவின் தூதர் அவர்களே ! அவளது சம்மதம்
எவ்வாறு ? என்று கேட்டதற்கு, " அவள் மௌனமாக
இருப்பது " என்று பதில் கூறினார்கள் என
அபூ ஹுரைரா (ரலி ) அறிவிக்கிறார்கள ்..
(ஆதாரம் - முஸ்லிம்)
"ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நாடிய
ஒருவரிடம் "அவளை நீ பார்த்து விட்டாயா?"
என்று நபி[ஸல்] அவர்கள் கேட்டதற்கு அவர்
"இல்லை" என்று சொன்னார்.. (அவரிடம்) "செல்!
அவளைப் பார்த்துக்கொள்! " என்று நபி [ஸல்]
அவர்கள் கூறினார்கள்.. என அபூ ஹுரைரா(ர லி)
அறிவிக்கிறார்கள ்.. (ஆதாரம்- முஸ்லிம் )
"உங்களில் எவரேனும் (திருமணத்திர்க் காக )
பெண் பேசினாள் அவளை மனம் புரிந்து கொள்ளத்
தூண்டும் அம்சம் எதையெனும்
அவளிடமிருந்து அவரால் பார்க்க முடிந்தால் ,
அவ்வாறே பார்த்துக் கொள்ளட்டும் "
என்று நபி[ ஸல்) அவர்கள் கூறினார்கள்..
(அறிவிப்பாளர்: ஜாபீர் (ர லி ) , ஆதாரம் -
அஹ்மத், அபூ தாவுத் , ஹாகிம் )..

No comments:

Post a Comment