Pages

Sunday, 1 September 2013

தன்னீர்

நிறைய தண்ணீர் குடிப்பதால்
பல்வேறு பலன்கள்
இருப்பது நமக்குத் தெரியும்.
லேட்டஸ்டாக, ரத்த
அழுத்தத்தை சீராக வைக்க,
நரம்பு உறுதி,
சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர்
உதவுவதாக ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
அமெரிக்காவில்
உள்ளது வண்டர்பில்ட்
பல்கலைக்கழக மருத்துவ
மையம். அதன்
ஆராய்ச்சியாளர்கள் குழு,
தேவையான அளவு தண்ணீர்
குடிப்பதால் ஏற்படும்
மருத்துவ நன்மைகள்
பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர்
குடித்ததும் அது ரத்த
தமனிகளில்
அடைப்புகளை கரைந்து ஓடச்
செய்வது ஆய்வில் தெரிய
வந்தது. அதன்மூலம்,
உடலில் ரத்த அழுத்தம் சீராக
பராமரிக்கப்படும்.
எனவே, ரத்த அழுத்த
நோயாளிகள் மயக்கம்,
தலைசுற்றல்,
வாந்தி உணர்வு போன்ற
அறிகுறிகளை உணர்ந்தால்,
ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர்
குடிப்பது நல்லது. அத்துடன்,
நரம்பு மண்டலத்தின்
செயல்பாட்டையும் தண்ணீர்
உறுதிப்படுத்துகிறது.
அன்றாட
வேலைகளின்போது ஏற்படும்
சக்தி இழப்பை குறைக்கிறது
என்றும் ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment