Tuesday, 21 April 2015

நீர் அருந்தும் முறையும், நீர் அருந்தும் முன்னும் பின்னும் மொழிய வேண்டிய இறை நினைவும்!

அபூஸயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர்। “பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மன்னர் கேட்டார். “ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார். “உம் வாயைவிட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். “தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.

“அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்: முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.

“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும் பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு வந்தனர்”அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ.

“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது “பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’ என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ

உடலுக்கும் ஆன்மாவுக்குமான ஒளியை இறைவனிடம் வேண்டிப் பெறுதல்!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப்பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள் பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள் அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள்.

‘அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன்.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார். (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

 புகாரி பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6316

Monday, 20 April 2015

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ

« اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ ، وَالكَسَلِ ، وَالجُبْنِ ، والهَرَمِ ، والبُخْلِ ، وأعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ ، وأعوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ » .وفي رواية : « وَضَلَعِ الدَّيْنِ ، وَغَلَبَةِ الرِّجَالِ

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் அஜ்சி, வல் கஸ்லி, வல் ஜுப்னி, வல் ஹரமி, வல் புக்லி, வ அவூது பிக மின் அதாபில் கப்ரி, வ அவூது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல்மமாதி ((மற்றொரு அறிவிப்பில்… வளலஇத் தய்னி வஙலபதிர் ரிஜால்))
யா அல்லாஹ் பலவீனத்தை விட்டும், சோம்பேறித்தனத்தைவிட்டும், கோழைத்தனத்தை விட்டும், தள்ளாத வயதை விட்டும், கஞ்சத்தனத்தை விட்டும், நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன். மேலும் கப்ரின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகின்றேன் மேலும் வாழ்வில் ஏற்படுகின்ற தீங்கை விட்டும், மரணத்தின் தீங்கைவிட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன் ((மற்றொரு அறிவிப்பில் கடனின் தீங்கைவிட்டும், மனிதர்களின் அதிக்கத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்))
அறிவிப்பாளர்: அனஸ் (ரழி) அவர்கள் ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ

என் பிழையையும், அறியாமையையும் பொறுத்தருள்வாயாக

اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوالِ نِعْمَتِكَ، وتَحَوُّلِ عَافِيَتِكَ ، وفُجَاءةِ نِقْمَتِكَ ، وَجَميعِ سَخَطِكَ . رواه مسلم

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜவாலி நிஃமதிக, வ தஹவ்வுலி ஆஃபியதிக, வ புஜாதி நிகமதிக வ ஜமீயி ஸகதிக
யா அல்லாஹ் உன் அருட்கொடைகள் நீங்கிப் போவதைவிட்டும், நீ அளித்த ஆரோக்கியம் (என்னை விட்டு) நீங்குவதை விட்டும், என் திடீர் வேதனையை விட்டும் உன் அனைத்து கோபங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி) அவர்கள்
ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ

என் பிழையையும், அறியாமையையும் பொறுத்தருள்வாயாக – 2

اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ ومنْ شَرِّ مَا لَمْ أعْمَلْ » . رواه مسلم

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஷர்ரி மா அமில்து வமின ஷர்ரி மா லம் அஃமல்.
யா அல்லாஹ்! நான் செய்தவற்றில் ஏற்பட்ட தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் மேலும் நான் செய்தவற்றில் ஏற்படும் தீங்குகளைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் எனக் கூறுபவர்களாக இருந்தார்கள்
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்
ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-8

இஸ்திஃபார் செய்வதின் மகிமை

رَبِّ اغِْفرْ لِي وَتُبْ عَلَيَّ إنْكَ أنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

அஸ்தஹ்பிருல்லாஹல்லதீ லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் வஅதூபு இலைஹி
நான் அல்லாஹு-விடம் பிழைபொறுப்பு இறைஞ்சுகிறேன். அவனைத்தவிர எந்த நாயனும் கிடையாது. அவன் என்றும் ஜீவித்திருப்பவன். என்றும் நிலைத்திருப்பவன், அவன் பக்கம் தவ்பாச் செய்து மீளுகிறேன்’ என்று கூறுகிறாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். அவர் புனித போரில் புறமுதுகு காட்டி ஓடிவந்த பொதிலும் சரியே!
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி) அவர்கள்
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, ஹாகிம்

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-9

என் பிழையையும், அறியாமையையும் பொறுத்தருள்வாயாக

اللَّهُمَّ لَكَ أسْلَمْتُ ، وَبِكَ آمَنْتُ ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ ، وإلَيْكَ أنَبْتُ ، وَبِكَ خَاصَمْتُ ، وإلَيْكَ حَاكَمْتُ . فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ ، وَمَا أَخَّرْتُ ، وَمَا أَسْرَرْتُ ، وَمَا أعْلَنْتُ ، أنتَ المُقَدِّمُ ، وأَنْتَ المُؤَخِّرُ ، لا إلهَ إِلا أنْتَ

அல்லாஹும்ம லக அஸ்லம்து, வபிக ஆமன்து, வஅலைக தவக்கல்து வ இலைக அனப்து, வ பிக காஸம்து, வ இலைக ஹாகம்து, ஃபஃபிர்லீ ம கத்தம்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்து, வமா அஃலன்து அன்தல் முகத்திமு வ அன்தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்த
யா அல்லாஹ்! உனக்கே வழிப்பட்டேன். உன்னைக் கொண்டே ஈமான் கொண்டேன், உன் மீதே (என் காரியங்களை) பொறுப்புச் சாட்டி விட்டேன், உன் பக்கமே மீண்டு விட்டேன், உன்னைக் கொண்டே வாதிடுகிறேன், உன் பக்கமே வழக்குரைக்கிறேன் (முறையிடுகிறேன்) ஆகவே நான் முற்படுத்திய பாவங்களையும், பிற்படுத்திய பாவங்களையும், நான் இரகசிய மாகச் செய்த பாவங்களையும், நான் பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் எனக்கு மன்னித்தருள்வாயாக! நீயே பிபடுத்துபவன், உன்னை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள்
ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-10

பாதுகாப்பு தேடும் துஆக்கள் – 1

« اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ ، وَعَذَابِ النَّارِ ، وَمِنْ شَرِّ الغِنَى وَالفَقْرِ »

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் பித்னதின் நாரி வதாபின் நாரி வமின் ஷர்ரில் ஙினா வல் ஃபக்ரி
யா அல்லாஹ்! நரகத்தின் குழப்பத்தை விட்டும், நரக நெருப்பின் வேதனையை விட்டும், செல்வம் மற்றும் வறுமையின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-11

பாதுகாப்பு தேடும் துஆக்கள் – 2

« اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأخْلاَقِ ، وَالأعْمَالِ ، والأهْواءِ »

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் முன்கராத்தில் அக்லாகி வல் அஃமாலி வல் அஹ்வாயி
யா அல்லாஹ்! தீய குணங்களை விட்டும், தீய செயல்களை விட்டும், தீய ஆசைகளை விட்டும் நிச்சயமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்
அறிவிப்பாளர்: குத்பா பின் மாலிக் (ரழி) அவர்கள்
ஆதாரம்: திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-12

பாதுகாப்பு தேடும் துஆக்கள் – 3

« اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي ، وَمِنْ شَرِّ بَصَرِي ، وَمِنْ شَرِّ لِسَانِي ، وَمِنْ شَرِّ قَلْبِي ، وَمِنْ شَرِّ مَنِيِّي »

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஷர்ரி ஸம்ஈ, வமின் ஷர்ரி பஸரீ, வமின் ஷர்ரி லிஸானீ, வமின் ஷர்ரி கல்பீ, வமின் ஷர்ரி மனிய்யீ
யா அல்லாஹ்! ஏன் செவியின் தீங்கைவிட்டும், என் பார்வையின் தீங்கைவிட்டும், என் நாவின் தீங்கைவிட்டும், என் இதயத்தின் தீங்கைவிட்டும், என் மர்மஸ்தானத்தின் தீங்கைவிட்டும், நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
அறிவிப்பாளர்: ஷகல் பின் ஹுமைத் (ரழி) அவர்கள்
ஆதாரம்: திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-13

லைலத்துல்கத்ர் இரவை அடைந்தால் ஓதவேண்டிய துஆ
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ
(பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
ஆதாரம்: திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-14

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (ஆதாரம்: புகாரி 6306)

நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ-15

அனைத்து துஆ-களையும் உள்ளடக்கிய ஒரு துஆ

اللَّهُمَّ إنِّي أسَألُكَ مِنْ خَيْر مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ محمَّدٌ ؛ وأعوذُ بِكَ مِنْ شَرِّ مَا استَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ ، وأنتَ »المُسْتَعانُ ، وَعَليْكَ البَلاَغُ ، وَلا حَولَ وَلا قُوَّةَ إِلا باللهِ » . رواه الترمذي

அல்லலாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் கைரி மா ஸஅலக மின்ஹு நபிய்யுக முஹம்மதுன் வ அவூது பிக மின் ஷர்ரி மஸ்தகஆத மின்ஹு நபிய்யுக முஹம்மதுன் வஅன்தல் முஸ்தஆனு வஅலைகல் பலாவு வலா ஹவ்ல வலா குவ்வத் இல்லா பில்லாஹி
யா அல்லாஹ்! உன் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னிடம் கேட்ட நலவானவை அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். உன் நபி முஹம்மத் (ஸல்) அவாகள் உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீங்கானவை அனைத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன. நீ தான் உதவி கோரப்படுபவன் நான் கேட்பவைகளை எனக்கு அருள்வது உன்னிடமே உள்ளது எந்த திரும்புதலும் எந்த ஆற்றலும் உன்னைக்கொண்டே தவிர இல்லை.
அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரழி) அவர்கள்
நூல்: திர்மிதி

அல்லாஹ்வின் அருள்மறை

அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ் மிக அழகான செய்தியை வேதமாக இறக்கினான். இவை முரண்பாடில்லாமல் ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும் இருக்கின்றன. (பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள்இறைவனை எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தோல்களின் உரோமக்கால்கள் (இவற்றைக் கேட்கும்போது) சிலிர்த்துவிடுகின்றன. பிறகு அவர்களுடைய தோல்களும், இதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன்மூலம் தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால் எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகின்றானோ அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
(அல்குர்ஆன் : 39 : 23)
மனிதகுலம் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக வல்ல இறைவன் இறக்கி அருளிய வேதமான பரிசுத்த குர்ஆனை வல்லஅல்லாஹ்தானே புகழ்ந்து பாராட்டி கூறுகிறான். அதை அழகானது என வர்ணிக்கின்றான். அதனுடைய சொல் அமைப்பிலும், இலக்கண நயத்திலும், கருத்து செரிவிலும், ஈர்க்கும் தன்மையிலும், அது அழகானதாக அமைந்துள்ளது. அதிலே எந்தவிதமான முரண்பாடும் காணமுடியாது. சில வசனங்கள் மற்றசில வசனங்களுக்கு எல்லா அம்சங்களிலும் ஒப்பானதாக அமைந்துள்ளது. இலக்கியநயத்தில் ஒன்றை ஒன்று மின்சும் விதத்தில் உள்ளது. எந்த இடத்தில் அது கலந்திருந்தாலும் குர்ஆன் வசனங்களை தனியாக கண்டுபிடித்துவிடமுடியும். இப்படிப்பட்ட கட்டமைப்பு திருக்குர்ஆன் வசனங்களுக்கு மட்டுமே உள்ளது.
வரலாறுகளையும், மனித சமூகம் படிப்பினை பெறவேண்டிய விஷயங்களையும், மறுமை நிகழ்வுகளையும், மனிதவாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும் திரும்பத்திரும்ப அதில் கூறப்பட்டாலும் அதைப்படிப்பதில் எந்தவிதமான சோர்வும் ஏற்படுவதில்லை, அதன் வசனங்களை எத்தனை முறை திரும்பத்திரும்ப ஓதினாலும் ஓதக்கூடியவர்களுக்கு எவ்வித சோர்வும் ஏற்படுவதில்லை. குர்ஆன்வசனங்களை செவியேற்கின்ற இறைநம்பிக்கையாளர்களின் மேனிரேமாங்களெல்லாம் சிலிர்த்துவிடுகின்றன. இறையச்சம் அதிகரித்து விடுகிறது. அல்லாஹ்வின் அருளை வேண்டி கண்கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். இந்த நிலை இறைவசனங்ளில் தங்கியுள்ள கருத்துக்களையும், பொருளையும் உணர்ந்து ஓதுகின்ற போதுதான் ஏற்படுகிறது. உணர்வற்ற நிலையில் வெறும் வாயளவில் ஓதுவதினால் இந்த நிலை ஏற்படாது. குர்ஆன் வசனங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து ஓதுகின்ற போதுதான் அதன் எதார்த்த நிலையை நம்மால் புரியமுடியும்.

புத்தாடை அணியும்போது (கூறப்படும்) துஆ

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி வகைரி மாஸுனிஅ லஹு, வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸுனிஅ லஹு.
பொருள்: யாஅல்லாஹ்! புகழ் அனைத்தும் உனக்கே உரியது; நீதான் எனக்கு அதை அணிவித்தாய்; அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; இன்னும், அதன் தீமை மற்றும் எதற்காக அதைத் தயார் செய்யப்பட்டதோ அந்தத்தீமையிலிருந்து உன்னிடம் நான் காப் புத் தேடுகிறேன்.
நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, பகவீ, அல்பானிக்குரிய முக்தஸர் ஷமாயில்

அத்திர்மிதீ, பக்கம்:47, காண்க          

நபிகளாரின் பொன்மொழிகள்

நபித்தோழர் அபூதர்ரில் கிஃபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னுடைய நேசர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஏழு கட்டளைகளை உபதேசித்தார்கள். ஏழைகளை நேசிக்கவேண்டும், அவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டும், உனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்த்து நன்றி செலுத்தவேண்டும், யாரிடத்திலும் எந்தத் தேவையையும் கேட்காமல் இருக்கவேண்டும், இரத்த உறவினர்களைச் சேர்ந்து வாழவேண்டும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் யாருடைய ஏச்சுப்பேச்சுக்களையும் பயப்படக்கூடாது. “லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்” என்பதை அதிகம் கூறிக்கொண்டிருக்க வேண்டும். அது அல்லாஹ்வுடைய அர்ஷின் கீழ் உள்ள பொக்கிஷத்திருந்து உள்ளதாகும்.
(நூல் : அஹ்மத், தப்ரானி)
இந்த அறிவுரைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த நபித்தோழர்களில் ஒருவரான அபுதர்ரில் கிஃபாரி அவர்களுக்கு கட்டளையிட்டாலும், இவை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் தனது வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவையாகும். சிறந்த பண்புடனும், தன்னம்பிக்கையுடனும் மனிதன் வாழ்விற்குத் தேவையான விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. எல்லாமே மணிமொழிகள். தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும்போது சமூகத்தில் அமைதிநிலவும். ஒற்றுமை மலரும்.
முதல் அறிவுரையாக ஏழைகளை நேசிக்க வேண்டும் என்றும், அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்றும் கூறியிருப்பது, கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதரத்தில் நலிந்து அடிமட்டத்தில் இருக்கின்றவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிடவேண்டும் என்பதிலும், ஏழை என்பதற்காக சமுதாயத்தில் உள்ள வசதி வாய்ப்புடையவர்கள் அவர்களை ஒதுக்கிவிடக்கூடாது. அவர்களுடன் நெருங்கிப் பழகவேண்டுமென்பதிலும் அல்லாஹ்வின் தூதர் அக்கரை காட்டி, நலிவுற்ற சமூகத்தைப் பற்றி கவலைப்பட்டுள்ளார்கள் என்பதை உணரமுடிகிறது. பொருளாதாரத்தில் தனக்குக்கீழ் நிலையில் உள்ளவர்களையே பார்க்கவேண்டும். அப்போதுதான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் நிலை ஏற்படும். முடிந்த அளவிற்கு தன்னுடைய தேவையைதானே நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்கவேண்டும். குடும்ப உறவினர்களுடன் நெருக்கமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகவேண்டும், அவர்களை வெறுக்கக்கூடாது, எங்கும் யாரிடத்திலும் உண்மையை துணிச்சலோடு கூறவேண்டும். அதில் தயக்கம்காட்டக்கூடாது. அல்லாஹ்விற்காக நாம் வாழும்போதும், அவனுடைய கட்டகளைகளை நமது வாழ்வில் கடைபிடிக்கின்றபோதும் அதைப்பார்த்து ஏளனம் செய்கின்ற, வசைபாடுகின்ற யாரைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. அல்லாஹ்வின் வல்லமையையும், அவனுடைய ஆற்றலையும் நினைத்துப்பார்த்து, அவனை அதிகமதிகம் தியானம் செய்யவேண்டும். இந்த நெறிமுறைகளை மனிதசமூகம் எல்லோரும் தங்கள் வாழ்வில் கடைபிடிக்கின்றபோது, வாழ்க்கையில் நிம்மதியும் சுபிட்சமும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, 17 April 2015

கழிவறையில் நுழைகின்ற போது (கூறப்படும்) துஆ

بِسْمِ اللَّهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبائِث

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி வல் கபாயிஸி
பொருள்: (அல்லாஹ்வின் பெயரால் பிரவேசிக்கிறேன்) யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களி (ன்தீமையி)லிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
நூல்கள் : புகாரீ பாகம்: 1, பக்கம்: 45, முஸ்லிம், பாகம்:1, பக்கம்: 283ல் பதிவு
செய்துள்ளார்கள். இதன் தொடக்கத்தில் பிஸ்மில்லாஹ் அதிகமாக உள்ளது; அதை ஸயீது பின் மன்ஸுர் பதிவு செய்துள்ளார். ஃபத்ஹுல் பாரீ 1/244 காண்க!

கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ

غُفْرَانَكَ

குஃப்ரானக.
பொருள்: உன்னிடம் பாவம் பொருத்தருள வேண்டுகிறேன்.
நூல்கள்: திர்மிதீ, அபூதாவூது, இப்னுமாஜா ஆகியவை. ஜாதுல் மஆதின் தக்ரிஜ்2/387 காண்க

Thursday, 16 April 2015

உளு செய்யுமுன் கூறப்பட வேண்டிய துஆ

بِسْمِ اللَّهِ

பிஸ்மில்லாஹி.
நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மது ஆகியோர் இதைப் பதிவு செய்துள்ளார்கள்; இர்வாஉல் கலீல் பாகம்:1/பக்கம் 122 காண்க!

உளு முடிந்து பின் கூறப்படும் துஆ

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.
பொருள்: வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்) இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உயரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன்.
நூல்: முஸ்லிம் பாகம்:1/பக்கம்209.

اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

அல்லாஹும் மஜ்அல்னீ மினத்தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்.
பொருள்: யா அல்லாஹ்! தவ்பா – பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக!
நூல்கள்: திர்மிதீ, 1/78, மற்றும் ஸஹீஹ் அத்திர்மிதீ, 1/18 பக்கம் பார்க்க!

سُبْحانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَيْكَ

ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த, அஸ்தஃக்ஃபிருக வஅதூபு இலைக.
பொருள்: யா அல்லாஹ்! உனது புகழைக் கொண்டு (உனக்குத் தகுதியற்ற தன்மைகளிலிருந்து) உன்னைத் துதிக்கிறேன்; உன்னிடம் பிழை பொருக்கத்தேடுகிறேன்; உன்பால் தவ்பாவும் செய்கிறேன்.
நூல்கள்: நஸாயீ அமலுல்யவ்மி வல்லைலா, பக்கம்: 173, மற்றும் இர்வாவுல்
கலீல்1/பக்கம்135, பாகம்2/பக்கம்94, பார்க்க!

வீட்டிலிருந்து புறப்படும் போது ஓதும் துஆ

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَاَ حَوْلَ وَلَا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல லா குவ்வத இல்லா பில் லாஹி.
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்; என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து), அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன்; மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.
நூல்கள்: அபூதாவூத் 4/325, திர்மிதீ 5/490, ஸஹீஹ் அத்திர்மிதீ 3/151 காண்க!

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன்அளில்ல அவ் உளல்ல, அவ் அஜில்ல அவ் உஜல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.
பொருள்: யா அல் லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது (பிறரால்) நான் வழி தவறச் செய்யப்படல், அல்லது நான் பிசகிவிடுதல் அல்லது (பிறரால்) நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத் து விடல் அல்லது (பிறரால்) நான் அநீதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனனாக ஆகிவிடல் அல்லது (பிறரால்) அறிவீனம் என்மீது ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் காவல் தேடுகிறேன்.
நூல்கள்: அஹ்லுஸ்ஸுனன், ஸஹீஹுத் திர்மிதீ 3/152, ஸஹீஹ் இப்னு மாஜா 2/336 காண்க!

வீட்டினுள் நுழையும் போது ஓதும் துஆ

ِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى  رَبِّنَا تَوَكَّلْنَا

பிஸ்மில்லாஹி வலஜ்னா, வ பிஸ்மில்லாஹி கரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம்; நம் முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
அபூதாவுத் 4/ 325, 5096 அஷ்ஷைக் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் தனது துஹ்பஃதுல் அஹ்யார் எனும் நூலில் பக்கம் 28 ல் இதை ஹஸன் எனக் கூறியுள்ளார். முஸ்லிமில் ஸஹீஹான தரத்தில் பதிவாகியுள்ள ஒரு செய்தியில்: “எவர் தனது வீட்டினுள் நுழையும்போதும், உணவை உற்கொள்ளளும்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுவாரோ, உங்களுக்கு இந்த வீட்டில் தங்குவதோ, உணவோ கிடையாது என ஷைத்தான் கூறிவிடுகின்றான்.

பள்ளிக்குச் செல்கின்ற போது (கூறப்படும்) துஆ

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُوراً، وَفِي لِسَانِي نُوراً، وَفِي سَمْعِي نُوراً، وَفِي بَصَرِي نُوراً، وَمِنْ فَوْقِي نُوراً، وَمِنْ تَحْتِي نُوراً، وَعَنْ يَمِينِي نُوراً، وَعَنْ شِمَالِي نُوراً، وَمِنْ أَمَامِي نُوراً، وَمِنْ خَلْفِي نُوراً، وَاجْعَلْ فِي نَفْسِي نُوراً، وَأَعْظِمْ لِي نُوراً، وَعَظِّم لِي نُوراً، وَاجْعَلْ لِي نُوراً، وَاجْعَلْنِي نُوراً، اللَّهُمَّ أَعْطِنِي نُوراً، وَاجْعَلْ فِي عَصَبِي نُوراً، وَفِي لَحْمِي نُوراً، وَفِي دَمِي نُوراً، وَفِي شَعْرِي نُوراً، وَفِي بَشَرِي نُوراً

அல்லாஹும்மஜ்அல் ஃபீகல்பீ நூரன், வஃபீ லிஸானீ நூரன், வ ஃபீ ஸம்யீ நூரன், வ ஃபீ பஸரீ நூரன், வமின் ஃபவ்கீ நூரன், வமின் தஹ்தீ நூரன், வ அன் யமீனீ நூரன், வ அன் ஷிமாலீ நூரன், வ மின் அமாமீ நூரன், வ மின் கல்ஃபீ நூரன், வஜ்அல் ஃபீ நஃப்ஸீ நூரன், வ அஃழிம் லீ நூரன், வ அழ்ழிம் லீ நூரன், வஜ்அல்லீ நூரன், வஜ்அல்னீ நூரன், அல்லாஹும்ம அஃதினீ நூரன், வஜ்அல் ஃபீ அசபீ நூரன், வ ஃபீ லஹ்மீ நூரன், வ ஃபீ தமீ நூரன், வ ஃபீ ஷஃரீ நூரன் வஃபீ பஷரீ நூரன்.
பொருள்: யா அல்லாஹ்! என் இதயத்தில் ஒளியை என்னுடைய நாவிலும் ஒளியை, என்னுடைய செவியிலும் ஒளியை, என்னுடைய பார்வையிலும் ஒளியை, எனக்கு மேலிலிருந்தும் கீழிலிருந்தும் ஒளியை, எனக்கு வலப் பக்கமிருந்தும் இடப்பக்கமிருந்தும் முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் ஒளியை நீ ஆக்கிடுவாயாக! என் மனதிலும் ஒளியை நீ ஆக்கிடுவாயாக! எனக்கு ஒளியை பெரிதாக்குவாயாக! ஒள்யை எனக்குப் பிரம்மாண்டமானதாகவும் ஆக்குவாயாக! எனக்காக ஒளியை ஆக்கிடுவாயாக! என்னையே ஒளியாக்கி வைப்பாயாக! யா அல்லாஹ்! எனக்கு ஒளியை நல்குவாயாக! என்னுடைய நரம்பிலும் ஒளியை, என்னுடைய இறைச்சியிலும் ஒளியை, என் இரத்தத்திலும் ஒளியை, என்னுடைய முடியிலும் ஒளியை, என்னுடைய மேனியிலும் ஒளியை நீ ஆக்கிடுவாயாக!
குறிப்பு : இவையனைத்துக் காரியங்களும் 11/116ல் 6316 இலக்கமிட்டு புகாரீயில் உள்ளது; மற்றும் முஸ்லிமில் 1/526, 529, 530ல் 763 இலக்கமிட்டு பதிவாகியுள்ளது.
(ஹ) பாகம்: 5 பக்கம் 483, 3419 இலக்கமிட்டு திர்மிதீயில்.

اللَّهُمَّ اجْعَلْ لِي نُوراً فِي قَبْرِي… وَنُوراً فِي عِظَامِي

அல்லாஹும்மஜ்அல்லீ நூரன் ஃபீ கப்ரீ, வ நூரன் ஃபீஇழாமீ என உள்ளது
பொருள்: என்னுடைய கப்ரில் ஒளியை மற்றும் எலும்புகளில் ஒளியை நீ ஆக்குவாயாக!
அதபுல் முஃப்ரதில் 695 இலக்கமிட்டு பக்கம் 258ல் இமாம் புகாரீ,

وَزِدْنِي نُوراً، وَزِدْنِي نُوراً، وَزِدْنِي نُوراً

வ ஜித்னீ நூரன், வ ஜித்னீ நூரன், வ ஜித்னீ நூரன் என்று இதனைப் பதிவு செய்துள்ளார்கள்.
பொருள்: எனக்கு ஒளியை அதிகமாக்கிடுவாயாக! (மும்முறை)
இதன் அறிவிப்புத் தொடர் சரியானதென 536 இலக்கமிட்டு அல்பானீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

وَهَبْ لِي نُوراً عَلَى نُورٍ

வ ஹப்லீ நூரன் அலா நூரின்
பொருள்: ஒளிக்கு மேல் ஒளியை எனக்கு அன்பளிப்பு செய்வாயாக!
இப்னு அபீ ஆஸிமின்பால் இதை இணைத்து பத்ஹுல் பாரீயில் இப்னு ஹஜர் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். பத்ஹு 11/118 காண்க! இன்னும் அவர்கள், ‘பல்வேறு அறிவிப்புகளில் இருபத்தைந்து குணங்கள் – செயல்கள் ஒருமித்து விட்டன’ என்று கூறியுள்ளார்கள்.

பள்ளியில் நுழையும்போது(கூறக்கூடிய) துஆ

أَعُوذُ بِاللَّهِ العَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

அஊது பில்லாஹில் அழிமி, வபிவஜ்ஹிஹில் கரீமி, வஸுல்தானிஹில் கதீமி மினஷ் ஷைத் தானிர் ரஜீம்.
பொருள்: மகத்தான அல்லாஹ்வைக் கொண்டு, சங்கையான அவனுடைய முகம், பூர்வங்கமான அவனுடைய அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு தூக்கி எறியப்பட்ட ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்.
நூல்கள்: அபூதாவூது, மற்றும் 4591 இலக்கமிட்ட ஸஹீஹ் அல்ஜாமிஉ காண்க!

بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ]1 [وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ] 2 اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ3.

(பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து) (1) (வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹி) (2) அல்லாஹும் மஃப்தஹ்லீ அப்பாவ ரஹ்மதிக. (3)
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் நுழைகிறேன்; அருளும் சாந்தியும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக! யா அல்லாஹ் உன்னுடைய அருள் வாயில்களை எனக்கு நீ திறப்பாயாக!
(1) இப்னுஸ் ஸுன்னீ அவர்கள் 88 இலக்கமிட்டு இதனைப் பதிவு செய்துள்ளார்கள்; இன்னும் அல்பானீ அவர்கள் இதை அழகான தரத்தையுடைய தெனக் கூறினார்கள்.
(2) அபூதாவூத் 1/126, மற்றும் ஸஹீஹுல் ஜாமிஉ 1/528 காண்க!
(3) முஸ்லிம் 1/494, மற்றும் சுனன் இப்னு மாஜாவில் ஃபாதிமா – ரளியல்லாஹு அன்ஹா – அவர்களின் ஹதீஸிலிருந்து, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக! என பதிவாகி உள்ளது. அது போன்றவற்றுக்காக அல்பானீ அவர்கள் அதைச் சரியானதெனக் கூறியுள்ளார்கள். ஸஹீஹ் இப்னு மாஜா 1/128: 129 காண்க!

பள்ளியில் நுழையும்போது(கூறக்கூடிய) துஆ

أَعُوذُ بِاللَّهِ العَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

அஊது பில்லாஹில் அழிமி, வபிவஜ்ஹிஹில் கரீமி, வஸுல்தானிஹில் கதீமி மினஷ் ஷைத் தானிர் ரஜீம்.
பொருள்: மகத்தான அல்லாஹ்வைக் கொண்டு, சங்கையான அவனுடைய முகம், பூர்வங்கமான அவனுடைய அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு தூக்கி எறியப்பட்ட ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்.
நூல்கள்: அபூதாவூது, மற்றும் 4591 இலக்கமிட்ட ஸஹீஹ் அல்ஜாமிஉ காண்க!

بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ]1 [وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ] 2 اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ3.

(பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து) (1) (வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹி) (2) அல்லாஹும் மஃப்தஹ்லீ அப்பாவ ரஹ்மதிக. (3)
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் நுழைகிறேன்; அருளும் சாந்தியும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக! யா அல்லாஹ் உன்னுடைய அருள் வாயில்களை எனக்கு நீ திறப்பாயாக!
(1) இப்னுஸ் ஸுன்னீ அவர்கள் 88 இலக்கமிட்டு இதனைப் பதிவு செய்துள்ளார்கள்; இன்னும் அல்பானீ அவர்கள் இதை அழகான தரத்தையுடைய தெனக் கூறினார்கள்.
(2) அபூதாவூத் 1/126, மற்றும் ஸஹீஹுல் ஜாமிஉ 1/528 காண்க!
(3) முஸ்லிம் 1/494, மற்றும் சுனன் இப்னு மாஜாவில் ஃபாதிமா – ரளியல்லாஹு அன்ஹா – அவர்களின் ஹதீஸிலிருந்து, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக! என பதிவாகி உள்ளது. அது போன்றவற்றுக்காக அல்பானீ அவர்கள் அதைச் சரியானதெனக் கூறியுள்ளார்கள். ஸஹீஹ் இப்னு மாஜா 1/128: 129 காண்க!

நபி வழி துஆக்கள்

பள்ளியிலிருந்து வெளியேறுகின்ற போது (கூறப்படும்) துஆ

بِسْمِ اللَّهِ وَالصّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலாரசூலில்லாஹி, அல்லாஹும்ம .இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக, அல்லாஹும் மஃஸிம்னீ மினஷ் ஷைதானிர் ரஜீம்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால், அருளும் சாந்தியும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மீது உண்டாகுக! யா அல்லாஹ்! நிச்சயமாக நான், உன்னுடைய பேரருளிலிருந்து உன்னிடம் கேட்கிறேன்; யா அல்லாஹ்! தூக்கியெறியப்பட்ட ஷைத்தானிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!
‘அல்லாஹும் மஃஸிம்னீ மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்பதன் அதிகமானது இப்னுமாஜாவிற்குரியதாகும்;. ஸஹீஹ் இப்னுமாஜா 1/129 காண்க!

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் ஓதும் துஆ

اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்ன(க்)க அபுFவ் வுன்(த்) துஹிப்Bபுல் அப்Fவ பFபுF அன்னீ
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!

அலர்ஜியைத் தடுக்கும் மீன்

 அலர்ஜியைத் தடுக்கும் மீன்
மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: விஞ்ஞானிகள் தகவல்!
கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!
திருக்குர்ஆன் 16:14 
கடந்த வார உணர்வு இதழில், “சைவ, அசைவ உணவுகள் - ஓர் ஒப்பீடு” என்ற தலைப்பில் சைவ உணவுகளை வெறுத்து அசைவ உணவுகளை மட்டுமே ஒருவர் உட்கொண்டால் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ஆய்வில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி  நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.
குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன.
அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள்.
உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சிலருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும்.
மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.
மீன் என்பது அசைவம் என்று சொல்லி அதை ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Monday, 13 April 2015

நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர் அடக்கம் செய்யப் பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார். "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப் பட்டு ஒளிமயமாக்கப் படும். பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும்.
நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.
இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள். அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப் பட்டுக் கொண்டே இருப்பான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதீ 991

ஜகாத்தின் சிறப்புகள்

இரட்டிப்புக் கூலி
மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.
(அல்குர்ஆன் 30:39)
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
(அல்குர்ஆன் 57:18)
அச்சமில்லை
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:262)
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன்2:277)
எழுதப்படும் இறையருள்
"எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக! நாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்'' (எனவும் மூஸா பிரார்த்தித்தார்). "என் வேதனையை நான் நாடியோருக்கு அளிப்பேன். எனது அருள், எல்லாப் பொருட்களையும் விட விசாலமானது. (என்னை) அஞ்சி, ஸகாத்தும் கொடுத்து, நமது வசனங்களை நம்புகிற மக்களுக்காக அதைப் பதிவு செய்வேன்'' என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 7:156)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 9:71)
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 24:56)
சுவனத்தின் வாரிசுரிமை
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 23:1-11)
இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். "நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களை சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்'' என்று அல்லாஹ் கூறினான்.
(அல்குர்ஆன் 5:12)
உறவினருக்கு உதவுபவர் வெற்றியாளர்
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 30:38)
மன்னிப்பும் மகத்தான கூலியும்
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:45)
மறுமையில் திரும்பக் கிடைக்கும் பொருள்
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
(அல்குர்ஆன்2:110)
எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதைக் குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்34:39)
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 73:20)
நட்டமில்லாத வியாபாரம்
அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலை நாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோர் நஷ்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.
(அல்குர்ஆன் 35:29,30)
நரகத்திலிருந்து விடுதலை
இறையச்சமுடையவர் அ(ந்நரகத்)திலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.
(அல்குர்ஆன் 92:17,18)
பொருட்களைத் தூய்மைப் படுத்தும் புனிதக் கடமை
(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 9:103)
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! என்ற (அல்குர்ஆன் 9:34) வசனம் இறங்கிய போது இது முஸ்லிம்களுக்குப் பெரும் சிரமத்தை அளிப்பதாக இருந்தது. இதை அறிந்த உமர் (ரலி), "உங்களுக்கு இந்தக் கவலையை நான் தீர்த்து வைக்கிறேன்'' என்று கூறி, (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று, "அல்லாஹ்வின் நபியே! இந்த வசனம் உங்களுடைய தோழர்களுக்கு சிரமத்தை அளிக்கிறது' என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பொருளாதாரத்தில் எஞ்சியிருக்கும் பொருளை தூய்மைப்படுத்துவற்காகவே தவிர ஜகாத்தை விதியாக்கவில்லை. (உங்களுடைய சொத்துக்கள்) உங்களுக்குப் பின்னால் உள்ளோருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தை விதித்திருக்கிறான்'' என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத்
பல்கிப் பெருகும் தர்மம்
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:261)
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன் 2:265)
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
(அல்குர்ஆன்2:276)
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 2:245)