ஃபஜ்ர் பயான் |
Thursday, 31 October 2013
ஃபஜ்ர் பயான்
Wednesday, 30 October 2013
திருக் குர் ஆன் விளக்கவுரை
திருக் குர் ஆன் விளக்கவுரை |
Tuesday, 29 October 2013
ஹதீஸ்
ஸஜ்தாவின் போது..
அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 744

திருக் குர் ஆன் வழங்குதல்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னக்கடை கிளை சார்பாக சார்பாக நடத்தப்படும் மதரஸதுத் தக்வா சிறுவர்கள் அரபி பாட சாலையில் 29/10/2013 அன்று காலை மாணவ மாணவிகளுக்கு யஸ்ஸர்னல் குர் ஆன்.திருக்குர் ஆன். துஆக்களின் தொகுப்புகள் . மஸ்ஜித் தக்வா தலைமை இமாம் . மவ்லவி ஹாஃபிழ் sமுஹம்மது ஹனீஃப் ஆலிம் ஹஸனி அவர்கள் வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
Monday, 28 October 2013
மதரஸா நிகழ்ச்சி
மதரஸா நிகழ்ச்சி |
Sunday, 27 October 2013
ஃபஜ்ர் பயான்
ஃபஜ்ர் பயான் |
Saturday, 26 October 2013
Thursday, 24 October 2013
Wednesday, 23 October 2013
Monday, 21 October 2013
ஃபஜ்ர் பயான்
ஃபஜ்ர் பயான் |
Sunday, 20 October 2013
Saturday, 19 October 2013
ஃபஜ்ர் பயான்
ஃபஜ்ர் பயான் |
Friday, 18 October 2013
மானவர்கள் பயான்
மானவர்கள் பயான் |
ஃபஜ்ர் பயான்
ஃபஜ்ர் பயான் |
Thursday, 17 October 2013
Friday, 11 October 2013
Thursday, 10 October 2013
அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகம்
இஸ்லாமிய வாழ்வியலில் புனித ஹஜ் வழிப்பாடா னது மிக முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. அந்த வணக்கமுறையின் உருவாக்கத்திற்கு அல்லது ஆரம்ப நிகழ்வுகளுக்கு ஒரு பெண்ணினது பங்கும் மிக முக்கிய த்துவமுடையதாகக் காணப்படு கிறது.
குறிப்பாக புனித ஹஜ்ஜின் போது ஹஜ் கிரிகைகளின் செயற் பாட்டு ரீதியான வரலாற்றுச் சம்ப வங்களில் அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாக உணர்வுகள் முஸ்லிம் உலகின் பெண்ணினத் திற்கே பெருமை சேர்க்கும் கைங்கரியமாகக் காணப்பட்ட அன்றைய தியாக நிகழ்வுகள் உலகிற்கே பறைசாற்றி நிற்கின்றன.
ஹஜ் வணக்க வழிபாடுகளுக்கு கால்கோளாய் அமைந்த தியாகத்தின் உயர் இலட்சியத்தினை அடைவதில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் செயற்பாடுகளுக்கு தமது மனைவி யான அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகமும் முன்னிலை பெறுகிறது.
ஒரு பெண்ணாக இருந்து தன் பிஞ்சுப் பாலகன் பசி யுடன் தகித்துக்கொண்டிருந்த வேளை யில்தான் இறைவன் ஸம் ஸம் எனும் வற்றா நீரூற்றை இவ்வுலகிற்கு அளித்தான். அன்றுமுதல் இன்றுவரை ஏன் உலகம் முடிவுறும் வரையில் இவ்வற்றா நீரூற்று உலக மாந்தர் களுக்கு முடிவுறா நீராகவே காணப் படும் என்பது இறைவன் வாக்கு.
ஹஜ்ஜின் போது ஹஜ்ஜாஜிகள் ஸபா, மர்வா எனும் இரு மலை களுக்கிடையில் ஏழுமுறை தொங் கோட்டம் ஓடுவதன் காரணம், அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் அன்று தன் பாலகனுக்கு நீர்த்தேடி இரு மலைகளுக்குமிடையில் ஓடிய அந்நிகழ்வை ஞாபகமூட்டி, அன்னா ரின் தியாகத்தை உணர்த்தவே ஹஜ் மாந்தர் அனைவரும் இவ்வாறு ஓட வேண்டுமென இறைவன் கட்டளையாக இருக்கிறது.
இன்றைய உலகில் பெண் என்னதான் தியாகம் செய்தாலும் அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகத்தைவிட மேம்பட்டதாய் இருக்க முடியாது. ஏனென்றால் இறைவனின் கட்டளையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்திய அன்னை ஹாஜரா (அலை) அன்னாரது கணவரான அஜரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் செயற்பாடுகளில் பங்கெடுத்து இன்றைய மக்கா அமைந்துள்ள இடத்தில் தன்னந்தனியாக தன் இளம் பாலகனுடன் கொளுந்து விட்டெரியும் பாலைவனத்தில் தம் இறைவன் இட்ட ஆணையை நிறைவேற்ற மனைவியையும் பிள்ளையையும் விட்டுச் சென்ற அவ்வேளையின் நிகழ்வை உலகில் எப்பெண்தான் ஏற்கத் துணிவாள்? எனவேதான் பெண்களின் உயர் விழுமிய பாங்கையும், அன்புக் கணவன் இட்ட கட்டளையையும் மீறாது நடந்துகொண்டார்கள்.
இன்றைய ஸம் ஸம் நீரூற்று அமைந்துள்ள இடத்தில் கொண்டு வந்து தனிமையில் விட்டு விட்டுத் திரும்பி வருகின்ற போது கேட்கி றார்கள். அன்னையர் ஹாஜரா “எவ்வித மனித நடமாட்டமோ வாழ்வதற்கான வசதி வாய்ப்புக் களோ அற்ற இந்த இடத்தில் என்னையும் நம் பாசக் குழந்தையையும் விட்டுவிட்டு நீங்கள் (இப்றாஹீம் நபி) எங்கே சொல்கிaர்கள்” எனக் கேட்டார்கள்.
அதற்கு இப்றாஹீம் நபி அவர்கள் எதுவும் பேசாது மெளனமாக இருக்க மீண்டும். மனைவி அதே வினாவைத் தொடுக்க மீண்டும் மெளனமாகி றார்கள். மனைவியவர்கள் 3ம் தடவையும் கேட்கிறார்கள். இது அல்லாஹ்வின் கட்டளையா? ஆம் இது அல்லாஹ்வின் கட்டனையேதான் எனக் கூறியதும் “நீங்கள் அக்கட்டளையை நிறைவேற்றுங்கள்.
எங்களை அந்த அல்லாஹ்வே காப்பாற்றுவான்” என இறை நம்பிம்பிக்கையை முன்னிலைப்படுத்திய நம்பிக்கையுடன் கூறி தன் கணவனுக்கு விடைகொடுத்தார்கள் இதுதான் தியாகம்!யாருமற்ற பாலைவனத்தில் தமது பிஞ்சுக் குழந்தையுடன் தனிமையில் இருக்கக வேண்டுமே என அஞ்சாத நெஞ்சத்துடன் பசித்தாகத்தைப் பெரிதாக நினைக்காது இறைக்கட்டளைக்கு அடிபணிந்து, கணவன் சொற்கேட்ட மனைவியாக அவ்வாறு நடந்து கொண்டதை, அந்த ஈமானிய வெளிப்பாட்டின் உறுதியினை தனிப்பெண்ணாக இருந்து வாழ்ந்து காட்டிய அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் உயர்ந்த பெண்ணாக மளிர்கிறார்.
இன்றைய அறபு நாடு செல்வச் செழிப்பு மிக்கதாய் திகழ்வதற்கும் உலக மக்கள் ஒன்றுகூடும் இடமாக மக்கமா நகரம் திகழ்வதற்கும், அபயமளிக்கப்பட்ட பூமியாக திகழவும் இப்றாஹீம் நபி அவர்களினதும், மனைவியார் ஹாஜரா (அலை), தனயன் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உறுதியான ஈமானிய வெளிப்பாடே புனித ஹஜ் எனும் கடமையில் கூடிய பாங்கினை செலுத்தும் கிரிகைகளின் தொகுப்பாய் அமைந்துள்ளது; கணவன் தனிமையில் விட்டபோது கணவன் மீது எவ்விதமான எரிச்சலும் கோபமும் கொள்ளாது, தனையனது பசியினை போக்கிடவும் அவ்வேளை அவர்கள் பட்ட துயர் உலகில் எந்த பெண்ணுக்குத்தான் முடியும்.
எனவேதான் அல்லாஹ்வின் பற்றுறுதி வாய்ந்த அசைக்க முடியாத ஈமானியத்தின் உச்சியில் நிற்கிறார் அன்னை ஹாஜரா நாயகி அவர்கள். உலக முஸ்லிம் பெண்மணிகளின் முன்மாதிரியாகத் திகழும் இவர்களின் தியாகத்தின் விளைவு உலக முடிவு நாள்வரையும் உலக மக்களால் பேணப்பட்டு வரும் ஹஜ் வணக்கத்தின் பல செயற்பாடுகளில் அன்னை ஹாஜரா அவர்கள் பட்ட துயரின் மீட்டலை முஸ்லிம் உம்மா குறிப்பாக பெண்ணினம் இவ்வேளை நினைவு கூர்வது இஸ்லாமிய நெஞ்சங்களின் தார்மீக கடமையல்லவா. அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் தியாகம்

Wednesday, 9 October 2013
ஹதீஸ்
ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது....
இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். “திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்”
” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்...
தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது . (திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை”
திருக்குர்ஆன் 26:121.).“அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்”.
(திருக்குர்ஆன் 29:15.)” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில்
அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.
(திருக்குர்ஆன் 54:13-15.)இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.
மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டைச்சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் திகதியன்று கிழக்குத்துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது.
இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன.
16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.
மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.
‘அக்கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்திருக்கிறோம்; சிந்திப்பவர் உண்டா?’ என்று கூறி, சமீபத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது .
திருக்குர்ஆன், “இறைவனின் வேதம்” என்பதற்கு இது சான்றாகவுள்ளது.
இந்த சம்பவங்கள் மூலம் இஸ்லாம் எவ்வாறான மார்க்கம் என்றும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என்றும் அறிய முடிகிறது

நமக்குச் சொந்தமானதை அடுத்தவர் அபகரிக்க முயன்றால்…
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرٍ، ثنا أَحْمَدُ بْنُ مَهْدِيٍّ، ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ بِلالٍ، ثنا الْعَلاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ : أَرَأَيْتَ إِنْ جَاءَنِي رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي قَالَ لا تُعْطِهِ مَالَكَ قَالَ أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِيقَالَ فَقَاتِلْهُ قَالَ أَفَرَأَيْتَ إِنْ قَتَلَنِي قَالَ فَأَنْتَ شَهِيدٌ قَالَ أَفَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ قَالَ هُوَ فِي النَّارِ
ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ ﻟﻠﻨﺴﺎﺋﻲ 449
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தோடு ஒருவன் வந்தால் (நான் செய்ய வேண்டியது) என்னவெனக் கூறுங்கள்” என்று கேட்டார். “அவனுக்கு உமது செல்வத்தை(விட்டு)க் கொடுத்து விடாதே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவன் என்னுடன் சண்டையிட்டால்..?” என்று அவர் கேட்டார். “நீயும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்று விட்டால்..?” என்று அவர் கேட்டார். “நீ உயிர்தியாகி (ஷஹீத்) ஆகிவிடுவாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “நான் அவனைக் கொன்று விட்டால்?” என்று அவர் கேட்டார். அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 449

தாயத்து ஆபத்து
" தாயத்து " .............. நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், “ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரிடத்தில் தாயத்து இருக்கிறது” என்று சொல்லி தன்னுடைய கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர், ” யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் ” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹ்மத் 16781.
ஹதீஸ்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும்.
ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தர்மமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும்.
நல்ல (இனிய) சொல்லும் ஒருதர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி (2989)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ سُلَامَى مِنْ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ وَيُمِيطُ الْأَذَى عَنْ الطَّرِيقِ صَدَقَةٌ رواه البخاري

மனைவியை காதலியுங்கள்….!
மனைவியை காதலியுங்கள்….!
திருமணம் செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் அடைவதில்லை. அன்றைய தினத்திலிருந்து உங்கள் வாழ்வின் இறுதி நாள் வரை அவள் தான் உங்கள் இல்லறத்தின் பங்காளி, வாழ்வின் நீண்ட பாதையில் வழித்துணை மற்றும் உற்ற தோழி எல்லாம்.
அன்று முதல் அவள் தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், தினத்தையும், வருடங்களையும், சுகங்களையும், துக்கங்களையும், கனவுகளையும், கவலைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறவள்.நீங்கள் நோயுறும் போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது ஓடோடி வருபவளும் அவள் தான்.
உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும் போது அவள் தான் உங்கள் மதி மந்திரி.
உங்கள் மனைவி தான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும் போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள். சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும் போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும். அந்த தின முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகும் முன்பு நீங்கள் கடைசியாக பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கி விட்டப் பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் முழு உலகம், நீங்கள் தான் அவளது முழு உலகம்.
கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் இயம்பிட முடியும்..? இந்த உறவின் தன்மையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப் பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்..
“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்”.(சூரா அல்-பகரா.2:187).
எவ்வளவு சத்தியமான உவமை, ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதர்களுக்கு மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை, மரியாதையை, அழகை, கண்ணியத்தை வழங்குகின்றன. கடும் பனி பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப்பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தை, பாதுகாப்பை, கண்ணியத்தை வழங்குபவள் மனைவி தான்.
இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக்கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை. இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெருவெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ் தான் தனது அளப்பறிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரணகர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது.
அல்லாஹ் உங்களுக்கு துணைகளை ஏற்படுத்தினான் (உங்கள் வாழ்க்கை துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான்.)
(சூரா அல்-நஹ்ல் 16:72)
அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை தான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:
மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன் தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருக செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).
ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும், உணர்வுகள் வேறு வடிவம் பெறும், ஏன்.! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும். நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக்கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டு பங்களிப்பு மிக மிக அவசியம். திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால் செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு, பரிமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும். பெருமானார் நபி (ஸல்..) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள். தங்களது மனைவி ஆயிஷாவை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள். மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.
நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்..) அவர்கள் சொன்னார்கள்:
அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடும் ஒரு கவளம் உணவு உட்பட.
ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறு சிறு விஷயங்களானாலும் சரியே. அல்லாஹ்வின் தூதர் தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா…?
அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்..) அவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள். எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விஷயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விஷயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.
உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர் தான்.
இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்பு தான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்துக்கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும். விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும். நாம் தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. சூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.
இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்..) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்: 25 வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள். தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்ப தவறியதில்லை.
அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுடி வாழ அகிலத்தோருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு

Subscribe to:
Posts (Atom)