Thursday, 22 October 2020

மறுமையில் அல்லாஹ்வை பார்க்க முடியாதவர்கள் மூன்று நபர்கள்...

 மறுமையில் இறைவனை பார்க்க முடியாதவர்கள் -3


ثلاثةٌ لا ينظرُ اللهُ عزَّ وجلَّ إليهم يومَ القيامةِ : العاقُّ لوالديْهِ ، و المرأةُ المُترجِّلةُ ، و الدَّيُّوثُ .... 


الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 674 | خلاصة حكم المحدث : إسناده جيد


 மூன்று நபர்கள் அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்


1.பொற்றோரைத் துன்புறுத்துபவன்


2.ஆண்களை போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண்


3.தனது குடும்பத்துப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அறிந்தும் கண்டிக்காமலிருப்பவன் என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல்: ஸில்ஸிலா ஸஹீஹா 674 தரம் : ஸஹீஹ்

ஆரோக்கியத்துடன் இருக்கும் போது செய்யும் நற்காரியங்கள்...

 ஆரோக்கியத்துடன் இருக்கும் போது செய்யும் நற்காரியங்கள்


إذا ابتلى اللَّهُ العبدَ المسلِمَ ببلاءٍ في جسَدِهِ قالَ اللَّهُ : اكتُب لَه صالِحَ عملِه الَّذي كانَ يعملُهُ فإن شفاهُ غسلَه وطَهَّرَه وإن قبضَه غفرَ لَه ورحِمَهُ .


الراوي : أنس بن مالك | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 30 | خلاصة حكم المحدث : صحيح ، رجاله رجال الصحيح

 


அல்லாஹ் ஒரு முஸ்லிம் அடியானுக்கு உடலில் நோயைக் கொடுத்து சோதித்தால் 


 இறைவன் ( வானவர்களுக்கு ) கட்டளையிடுவான் :


இந்த அடியானுக்கு அவர் ( நல்ல நிலையில் செய்துவந்த ) அனைத்து நற்செயகளையும் பதிவு செய்யுங்கள் என்று கட்டளையிடுவான்.


 பிறகு அவருக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்துவிட்டால் அவரை ( பாவங்களை விட்டும் ) கழுவிச் சுத்தம் செய்கிறான்.


 

அவரது உயிரைக் கைப்பற்றிவிட்டால் அவரது பாவங்களை மன்னித்து அவர் மீது அருள்பொழிகிறான்.


நூல் : ஸஹீஹ் அஹ்மத் ( 30 ) தரம் : ஸஹீஹ்

குர் ஆன் உடைய போதனைகள் யாருக்கு பயன் தரும் ?

குர் ஆன் உடைய போதனைகள் யாருக்கு பயன் தரும் ?

اِنَّ فِىْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ

யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் ( குர் ஆனில் ) படிப்பனை உள்ளது ( 50 :37 )

اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌۙ‏ 

இது அறிவுரையும் தெளிவான குர் ஆனும் தவிர வேறில்லை (36:69 )

لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا

உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும்

وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ‏ 

( நம்மை ) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் ( இதை அருளினோம் ) (36:70)

தந்தை குழந்தை பெயருடன் அழைக்கப்படுவது...

 தந்தை குழந்தை பெயருடன் அழைக்கப்படுவது


لما وفَدَ إلى رسولِ اللهِ صلى الله عليه وسلم سمعهُ وهم يكنُّونَ هانئًا أبا الحكمِ، فدعاهُ رسولُ اللهِ صلى الله عليه وسلم فقال لهُ : إنَّ اللهَ هو الحكَمُ وإليهِ الحُكمُ، فلمِ تُكنىَّ أبا الحكمِ . فقال : إنَّ قومي إذا اختلفُوا في شيءٍ أتَوْني فحكمتُ بينهُم، فرضِيَ كلا الفريقَيْنِ . قال : ما أحسنَ هذا! فما لك من الولدِ ؟ قال : لي شُريحٌ، وعبدُ اللهِ، ومسلمٌ . قال : فمنْ أكبرُهم ؟. قال : شُريح قال : فأنت أبو شُريحٍ فدعا له ولولدِهِ


الراوي : هانئ بن يزيد بن نهيك أبو شريح | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 5402 | خلاصة حكم المحدث : صحيح


நான் வெளியூரில் இருந்து நபி ஸல் அவர்களை சந்திப்பதற்காகத் எனது தூதுக்குழுவினருடன் வந்திருந்த நேரத்தில் எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் ( அறிவின் தந்தை ) என அழைப்பதை நபி ஸல் அவர்கள் செவியுற்றார்கள்.


உடனே நபி ஸல் அவர்கள் என்னை அழைத்து அல்லாஹ் தான் ஞானம் மிக்கவன் அவனிடமே அனைத்து ஞானங்களும் மீளும் எனவே நீ அபுல் ஹகம் என்று புனைப் பெயரை சூட்டிகொள்ளாதீர் என்று என்னிடம் கூறினார்கள்.


அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே ! எனது கூட்டத்தினருக்கு மத்தியில் ஏதெனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் என்னிடம் வருவார்கள்.


நான் அளிக்கும் தீர்ப்பை இரு சாராரும் திருப்தியுடன் ஏற்பார்கள் என்று கூறினேன் இதை கேட்ட நபி ஸல் அவர்கள் இது எவ்வளவு அழகான விஷயம் என்று கூறி விட்டு.


உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா ? எனக் என்னிடம் கேட்டார்கள். ஷுரைஹ், முஸ்லிம், அப்துல்லாஹ் என்று மூவர் உள்ளனர் என்றேன்.


அவர்களில் மூத்தவர் யார் ? என்று நபி ஸல் கேட்டார்கள் . நான் ஷுரைஹ் என்றேன் அப்படியாயின் நீ அபூஷுரைஹ் என்று கூறிவிட்டு எனக்காகவும் என்னுடைய குழந்தைகளுக்காகவும் பிரார்த்தித்தார்கள் 


இதை ஷுரைஹ் பின் ஹனீ அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் நஸாயீ 5402   தரம் : ஸஹீஹ்

நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுவோம்...

நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.*


*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".*


*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.*


*அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.*


*"உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை* *அதிகமாக்குங்கள்*. *உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள்.*


*அறிவிப்பு : அவ்ஸ் பின் அவ்ஸ்* 


*நூல் 📚: அபூதாவூத் 883*


*عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ : فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ ؛ فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ ؛ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ ". قَالَ : قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ - يَقُولُونَ : بَلِيتَ - ؟ فَقَالَ : " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَجْسَادَ الْأَنْبِيَاءِ* ".

அல்லாஹ்விற்காக நேசிப்போம்...

 அல்லாஹ்விற்காக நேசித்தல். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


#நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் கடந்து சென்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே (கடந்து செல்லும்) இவரை நான் நேசிக்கிறேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதை அவரிடம் தெரியப்படுத்தினாயா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் எழுந்து சென்று அவருக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். அவர் அந்த நண்பரிடம் எழுந்து சென்று இன்னாரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விற்காக நான் உங்களை விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் எவனுக்காக என்னை நீங்கள் நேசிக்கிறீர்களோ அவன் உங்களை நேசிப்பானாக என்று கூறினார்.


அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)


நூல்: அஹ்மத் (11980)

நபிகளாரை நேசிப்போம்...

 நபிகளாரை நேசித்தல்.


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ: ((وَمَا أَعْدَدْتَ لِلسَّاعَةِ؟)) قَالَ: حُبَّ اللَّهِ وَرَسُولِهِ، قَالَ: ((فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ))، قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بَعْدَ الإِسْلاَمِ فَرَحًا أَشَدَّ مِنْ قَوْلِ النَّبِي : ((فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ))، قَالَ أَنَسٌ: فَأَنَا أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ، فَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِأَعْمَالِهِمْ.


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச் சமூகத்திற்கு வருகை தந்தார்.


வந்தவர், ”அல்லாஹ்வின் தூதரே! யுகமுடிவு நாள் எப்போது வரும்”? என்று வினவினார்.


அதற்கு, அண்ணலார் “அதற்காக நீர் என்ன தயாரிப்பு செய்து வைத்திருக்கின்றீர்?” எனக் கேட்டார்கள்.


அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் நான் அளவு கடந்த நேசத்தை கொண்டிருக்கின்றேன். இதையே நான் அந்த நாளுக்கான தயாரிப்பாக வைத்திருக்கின்றேன்” என்றார்.


அது கேட்ட அண்ணலார் “அப்படியாயின் நீர் யாரை நேசிக்கின்றீரோ, அந்நாளில் அவருடன் இருப்பீர்!” என பதில் கூறினார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதரை நேசிக்கும் எங்களுக்கு நாங்கள் இஸ்லாத்திற்கு வந்த போது எவ்வளவு மகிழ்ந்தோமோ அந்த அளவு மகிழ்ச்சியை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்ன அந்த வார்த்தையால் அடைந்தோம்.”


”உண்மையில் நான் அல்லாஹ்வின் தூதரையும், அபூபக்ர் மற்றும் உமர் (ரலி – அன்ஹுமா) ஆகியோரையும் நேசிக்கின்றேன். அவர்கள் அளவு என்னால் இபாதத் செய்ய முடியாவிட்டாலும் அவர்களோடு சுவனத்தில் நானும் இருக்கப் போகிறேன்” எனும் நம்பிக்கையை அந்த வார்த்தை என்னுள் ஏற்படுத்தியது.


                                                   

( நூல்: இப்னு மாஜா, புகாரி )

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...