Friday, 2 June 2017
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்
عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ , أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ حَدَّثَهُ ، عَنْ عَائِشَةَ , قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ‘ إِنَّ أَحَبَّ الأَعْمَالِ عِنْدَ اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ ‘ , وَكَانَتْ عَائِشَةُ إِذَا عَمِلَتْ عَمَلا دَاوَمَتْ عَلَيْهِ .
ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல், குறைவாயினும் தொடர்ந்து செய்யும் செயலாகும்’
ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு செயலை செய்தால் அதனை தொடர்ந்து செய்வார்கள்.
(நூல்-புகாரி)
நல்ல அமல்
நல்ல அமல்
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "
مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَكُونَ لَهُ خَبِيء
ٌ مِنْ عَمَلٍ صَالِحٍ فَلْيَفْعَلْ".
صححه الألباني في "السلسلة الصحيحة
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
‘உங்களில் ஒருவருக்கு இரகசியமாக
ஒரு ஸாலிஹான அமலை
நிறைவேற்றி வர முடியுமாயின்
அதனை அவர் செய்து கொள்ளட்டும்.’
(நூல்--அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா)
நபிமொழி
நபிமொழி
وَفُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ...
சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின்
எந்த வாயிலும் மூடப்படுவதில்லை...'
(அபூஹுரைரா (ரலி),
திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
நபிமொழி
நபிமொழி
قال رسول الله صلى-
وإن أبغضكم إلي وأبعدكم مني يوم القيامة : الثرثارون والمتشدقون والمتفيهقون
رواه الترمذي
الثرثارون : هم الذين يتكلفون كثرة الكلام
المتشدقون : هم المتطاولون على الناس بكلامهم
المتفيهقون : هم الذين يتكلمون بملء أفواههم ويتوسعون في الكلام ويغربون فيه تكبرا وارتفاعا وإظهارا لفضلهم على غيرهم
நபியவர்கள் கூறினார்கள் :
உங்களில் எனக்கு மிகவும் வெறுப்புக்குரியவர்களும்,
மறுமையில் என்னை விட்டு மிகவும் தூரமானவர்களும் யார் எனின்,
வலிந்து தேவையற்ற கதைகளில் ஈடுபடுபவர்களும், மக்களைப் பற்றி எல்லை மீறிப் பேசுபவர்களும், அடுத்தவர்களைத் தாழ்த்தி,
தன்னைப் பற்றி வாய் நிறையப்
பெருமை பேசுபவர்களும் ஆவர்.
(நூல்-திர்மிதி)
பாவங்களில் மிகப் பெரியது
பாவங்களில் மிகப் பெரியது
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ جَرِيرٍ، قَالَ عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ " أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ " . قَالَ ثُمَّ أَىٌّ قَالَ " أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ " . قَالَ ثُمَّ أَىٌّ قَالَ " أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ " فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا { وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا}.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது" என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், "நிச்சயமாக அது மிகப் பெரிய பாவம்தான்" என்று சொல்லிவிட்டு, "பிறகு எது?" என்று கேட்டேன். "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்க, அவர்கள், "உன்(மீது அபார நம்பிக்கைவைத்துள்ள) அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று சொன்னார்கள்.
(நூல்-முஸ்லிம்- 141)
நற்செய்தி சொர்க்கம் செல்வார்"
நற்செய்தி சொர்க்கம் செல்வார்"
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " أَتَانِي جِبْرِيلُ - عَلَيْهِ السَّلاَمُ - فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ " . قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ . قَالَ " وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ "
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்" என்று நற்செய்தி கூறினார். உடனே நான், "அவர் விபசாரம் செய்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை)"விபசாரம் செய்தாலும் திருடினாலும் சரியே" என்று பதிலளித்தார்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல் -முஸ்லிம் 153)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்" என்று நற்செய்தி கூறினார். உடனே நான், "அவர் விபசாரம் செய்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை)"விபசாரம் செய்தாலும் திருடினாலும் சரியே" என்று பதிலளித்தார்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல் -முஸ்லிம் 153)
Subscribe to:
Posts (Atom)
ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை
ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...
-
தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம் (சிறு குறிப்பு) !!! وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ ...
-
திருக்குர்ஆன் கேள்வி பதில் ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்? ! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62) ஸாலிஹ் (அலை) அவர்களின் ...
-
ஸஹாபி பெண்மனி உம்மு அம்மாரா (ரலி)…. உம்மு அம்மாரா (ரலி) என்றும் உம்மு உமாரா (ரலி) என்றும் வரலாறு அறிமுகப்படுத்துகிற தியாக மங்கை நுஸை...
