Pages

Tuesday, 4 February 2020

இஸ்லாம் தவறான பகுதியை நீக்கி விட்டு, அழகானதையை அங்கீகரிக்கும்…

இஸ்லாம் தவறான பகுதியை நீக்கி விட்டு, அழகானதையை அங்கீகரிக்கும்…

عن الربيِّع بنت معوذ بن عفراء جاء النبي صلى الله عليه وسلم فدخل حين بُني علي – أي : دُخل عليها في الزواج - فجلس على فراشي كمجلسك مني فجعلت جويريات ( أي بنات صغيرات ) لنا يضربن بالدف ويندبن من قتل من آبائي يوم بدر إذ قالت إحداهن :
وفينا نبي يعلم ما في غد
فقال : دعي هذه وقولي بالذي كنت تقولين .
رواه البخاري ( 4852 ) .

ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவிக்கிறார்கள்: “

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ( இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் – ரஹ் – அவர்களிடம் ) ‘எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்.

அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.
                       
( நூல் புகாரி )

இங்கே, தஃப் அடிப்பதையும், கவி படிப்பதையும் அங்கீகரித்த மாநபி {ஸல்} அவர்கள் தவறான வார்த்தைப் பிரயோகத்தை தவிர்த்து விடுமாறு கட்டளையிட்டார்கள் ...

No comments:

Post a Comment