ஸஅத் இப்னு முஆத் (ரலி) யார்?அவர்கள் என்ன செய்தார்கள்?
இங்கே நபித்தோழர்கள் இதுவரை கண்டிராத மிக ஆடம்பரமான அணிகலனை கண்டு வியந்து ஆச்சர்யப்பட்டு நின்ற போது
ஸஅத் இப்னு முஆத் ரலி எனும் சக நபித்தோழருக்கும் அவரின் கைக்குட்டை (கர்சீப்)க்கும் சுவனத்தின் அந்தஸ்தை நபிகளார் மிக உயர்வாய் கூறினார்கள் என்றால்...
مناديل سعد بن معاذ
في الجنة خير من هذا
”சுவனத்தில் ஸஅத் இப்னு முஆதின் (ரலி) கைக்குட்டை இதை விட மிகச் சிறந்தது எனக் கூறினார்கள். ( صحيح البخاري)
ஒரு சந்தர்ப்பத்தில்
ஸஅத் ரலி அவர்களின் பேச்சையும், அவரிடம் காணப்பட்ட ஆக்ரோஷமான உற்சாகத்தையும் கண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அக மகிழ்ந்தார்கள், ஆனந்தமடைந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இதயத்தை குளிரூட்டினார்
ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.
( நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஷிஹாம் பக்கம்: 125,126 )
கந்தக் யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஒரு மாத காலத்திற்கு பின் அன்னார் வஃபாத்தானார்கள்.
அன்னாரின் நல்லடக்கத்திற்க்கு சென்ற போது இப்பூமிக்கு இதற்கு முன் வருகை தராத எழுபதினாயிரம் வானவர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள்
என நபி (ஸல்) கூறியதாக ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கும் நபிமொழியொன்றை திர்மிதியில் காணலாம்.
عن جابر ، سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن معاذ.
”ஸஅத் இப்னு முஆத் (ரலி) யின் மரணத்தால் அர்ஷ் நடுங்கியது என நபி (ஸல்) அவர்கள் கூறிய நபிமொழியை முதவாத்திரான அதிகமான அறிவிப்புகளின் மூலம் காணலாம்.
حينما سمع النبي أحد المنافقين يقول: ما رأينا كاليوم، ما حملنا نعشًا أخف منه قط. فقال رسول الله : "لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن معاذ، ما وطئوا الأرض قبل ذلك اليوم".
நாங்கள் ஸஅத்ப்னு முஆத் (ரலி)யின் உடலை சுமந்து சென்ற போது என்ன இலகுவாகக் கொண்டு செல்கிறார்கள் என முனாபிக்குகள் விமர்சித்த போது வானவர்கள் ஜனாஸாவை சுமந்து வருகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழியை திர்மிதியில் பார்க்கலாம்.
வாழ்கின்ற போதும் சீரும் சிறப்போடும் வாழ்ந்து மரணத்திற்குப் பிறகும் நற்பேருடன் நல்லடக்கம் செய்யப்பட்டு நாளை மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்தை அடையவிருப்பவதாக நபி (ஸல்) அவர்களால் கூறப்பட்ட அந்த மாண்பாளரின் எத்தகைய செயல் இப்பாக்கியத்தை அடைய வைத்தது எது என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃதை (ரலி) நோக்கி மகிழ்ச்சி பொங்க கூறினார்கள்.
لقد حكمت فيهم بحكم الله من فوق سبع سموات ( الرحيق المختوم)
”முஆதே! ஏழு வானங்களுக்கு மேலுள்ள (அல்லாஹ்) இறைவனின் தீர்ப்பைக் கொண்டு அவர்கள் விஷயத்தில் நீர் தீர்ப்பளித்தீர்”
அவர் நீதியை தேர்ந்தெடுத்தார்! நேர்மையை கடைபிடித்தார் அவரின் நேர்மையை உரசிப்பார்க்க வந்த சோதனையை நீதியால் சோபனமாக்கினார்!
மதீனத்து அன்சாரிகளில் முதல் இஸ்லாமிய குடும்பம் இவருடையது.
அவ்ஸ் கோத்திரம் அப்துல் அஷ்ஹல் குடும்பம் தமது கோத்திரத்திலேயே இஸ்லாத்திற்காக அனைத்திலும் முன்னிலையில் நிற்பவர் இவரே
ஸய்யிதில் அன்ஸார் - அன்ஸாரிகளின் தலைவர் என அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்கள்.
பத்ர், உஹதில் கலந்து கொண்ட சிறப்பும் இவர்களுக்கு உண்டு.
No comments:
Post a Comment