Pages

Saturday, 15 February 2020

சொர்க்கத்தின் தொடர்பை தாயின் உபகாரம் பெற்றுக்கொடுத்தது....

சொர்க்கத்தின் தொடர்பை தாயின் உபகாரம் பெற்றுக்கொடுத்தது.

وعن عائشة
 قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " دخلت الجنة فسمعت فيها قراءة فقلت : من هذا ؟ قالوا : حارثة بن النعمان كذلكم البر كذلكم البر " . وكان أبر الناس بأمه . رواه في " شرح السنة " . والبيهقي في " شعب الإيمان "
 وفي رواية : قال : " نمت فرأيتني في الجنة " بدل " دخلت الجنة

நபி(ஸல்) கூறினார்கள். 

நான் கனவுலகில் சொர்க்கம் சென்றேன். அங்கு ஒருவர் குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டு விசாரித்தேன். அப்போது வானவர்கள் என்னிடம் அவர் உங்கள் தோழர் ஹாரிஸா(ரலி) என்றார்கள். இதனைத் தொடர்ந்து நபி (ஸல்) ஸஹாபாக்களிடம் பெற்றோருக்கு உபகாரம் செய்வதால் உங்களுக்கும் இது போன்ற அந்தஸ்து கிடைக்கும் என்று கூறிவிட்டு ஹாரிஸா(ரலி) தன் தாயிக்கு அதிகம் உபகாரம் செய்யக்கூடியவராக இருந்தார் என்று கூறினார்கள். 

நூல்: பைஹகி.

இந்த நிகழ்வு நடைபெற்றபோது ஹாரிஸா(ரலி) உலகில்தான் இருந்தார்கள். உலகில் வாழும்போதே அவ்வாலிபருக்கு சொர்க்கத்தின் தொடர்பை தாயின் உபகாரம் பெற்றுக்கொடுத்தது.

No comments:

Post a Comment