Pages

Sunday, 16 February 2020

தீமையைக் கரம் கொண்டு தடுத்தல்...

தீமையைக் கரம் கொண்டு தடுத்தல்...

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول  من رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ، وذلك أضعف الإيمان ) رواه مسلم
அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்கவும், அடுத்து நாவால் தடுக்கவும், இவை இரண்டும் இயலா விட்டால் மனதளவில் வெறுத்து விடட்டும்”, இது ஈமானின் பலஹீனமான நிலையாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                          

     ( நூல்: முஸ்லிம் )

ஆனால், எத்தனையோ சட்டங்கள் இருந்தும் குற்றங்களை குறைக்க முடியவில்லை. குற்றவாளிகளை தண்டிக்க முடிவதில்லை. மட்டுப்படுத்த முடியவில்லை.

நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டும் என அல்லாஹ்வால் ஆணையிடப்பட்ட ஓர் சமூகம் இந்த நிலையைக் கண்டு நபிகளார் {ஸல்} அவர்கள் கூறிய மூன்றாம் நிலையிலேயே நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தீமைகளை தடுக்கும் முதல் இரண்டு நிலைகளில் முஸ்லிம் சமூகம் இருக்குமானால் உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக குற்றங்களை குறைத்து, குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைகளை வழங்கி, குற்றங்கள் நிகழா வண்ணம் தடுக்க முடியும்.

ஆம்! கையால் தடுப்பது அல்லது நாவால் தடுப்பது இவ்விரண்டிற்கும் பொருள் தருகிற ஹதீஸ் விரிவுரையாளர்கள் இவ்வாறு விளக்கம் தருகின்றார்கள்.

التغيير باليد للقادر عليه
إنكار المنكر بيده كولي الأمر ومن ينوب عنه ممن أعطي صلاحية لذلك،

அதாவது, அதற்கான முழு ஆற்றலையும் ஓர் முஸ்லிம் பெற்றவனாக இருக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்த வரை முஸ்லிம்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி, நிர்வாகம் ( காவல்துறை மற்றும் சட்டத்துறை, நீதித்துறை ) ஆகியவற்றில் இல்லாததே இந்த ஹதீஸை அமல் செய்ய முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

No comments:

Post a Comment