ஆண் பெண் பாலின பாகுபாட்டை இஸ்லாம் ஊக்குவிக்கின்றதா?....
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ()
“ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எவர் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ, அவர்களை (இவ்வுலகில்) மணமான வாழ்வு வாழச்செய்வோம். மேலும், (மறுமையில்) அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலி வழங்குவோம்.”
(அல்குர்ஆன்; 16:97)
وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ()
”கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவணங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் நிரந்தரமாய் தங்கி வாழ்வார்கள்.
மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக உயர்வான அல்லாஹ்வின் திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும் இதுவே மாபெரும் வெற்றியாகும்.”
(அல்குர்ஆன்; 9:72)
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
”ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன் பணிபவர்களாகவும், தர்ம்ம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களின் மறைவிடங்களை பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களாகவும் இருக்கின்றார்களோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்காக மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.”
(அல்குர்ஆன்; 33:35)
إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ ()
“ ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா – தான தர்மங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்கு பன்மடங்கு பகரம் வழங்கப்படும். அவர்களுக்கு கண்ணியமான கூலியும் உண்டு .”
(அல்குர்ஆன்; 57:18)
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ()
“ ( நபியே! ) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.”
( அல்குர்ஆன்: 24:30 )
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
“மேலும், ( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்!
( அல்குர்ஆன்: 24:31 )
والسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
அல்லாஹ் கூறுகின்றான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைகளுக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்.”
(அல்குர்ஆன்:5:38)
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ
“திருமணமாகா விபச்சாரி, விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் தண்டனையாக நூறு கசையடி அடியுங்கள்”.
( அல்குர்ஆன்: 24: 2 )
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()
“மேலும், ( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்! தங்களுடைய அழகை வெளியே காட்டாதிருக்கட்டும்! அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்!”
தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள், மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழ்கிற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்களின் முன்னிலையில் அன்றி வேறு எவருடைய முன்னிலையிலும் தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம்.
தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களுடைய கால்களைப் பூமியில் அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம்.”
( அல்குர்ஆன்: 24:31 )
கற்பொழுக்கமுள்ள விஷயங்கள் ஆகட்டும், ஆன்மீக வழிபாடாகட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இஸ்லாம் எவ்வித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.
மேலும், சமயக்கடமைகள் ஆகட்டும், சுமத்தப்பட்ட பொறுப்புகளாகட்டும் அங்கேயும் இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.
குற்றவியல் தண்டனைகளில் ஆண், பெண் இருவருக்கும் சமமான தண்டனை, ஆணுக்கு தலாக் என்றால் பெண்ணுக்கு ஃகுலா என்றும் சமமாகவே உரிமைகள் வழங்கி பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை.
மேலும், அல்லாஹ் வழங்குகின்ற இவ்வுலக பாக்கியங்களும் மறு உலக சுவனமும் ஆண், பெண் என்ற பாகுபாட்டினைக் கொண்டும் கொடுக்கப்படுவதில்லை.
மாறாக, நல்லறங்களைச் செய்கிற முஃமினாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் சொல்கின்றது என்பதையே இவ்வசனங்கள் அனைத்தும் ஒரு சேர நமக்கு உணர்த்துகின்றன.
ஆனால், ஆடை மற்றும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் ஆண்களிடம் விதிக்காத ஒரு சில கட்டுப்பாடுகளை பெண்கள் மீது இஸ்லாம் விதிக்கின்றது.
எனவே, ஆடை மற்றும் அழகை வெளிப்படுத்துகிற விவகாரத்தில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர் என்று இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது.
ஆகவே, இஸ்லாமிய வழிகாட்டுதல்கள், சட்டங்கள் ஆண் பெண் பாலின பாகுபாட்டை உண்டு பண்ணுகின்றது என்கிற குற்றச்சாட்டு மிகவும் தவறானதும் பிழையானதும், இட்டுக்கட்டப்பட்டதும் ஆகும்.
No comments:
Post a Comment