யா அல்லாஹ் ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு எங்களை அழகு படுத்துவாயாக!
اَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِِنِيْ مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِيْ،
وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِيْ،
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ،
وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ،
وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ،
وَأَسْأَلُكَ نَعِيْمًا لاَ يَنْفَدُ،
وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَ تَنْقَطِعُ،
وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ،
وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ
وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ
وَأَسْأَلُكَ الشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلا فِتْنَةٍ مُضِلَّةٍ
اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الإِيمَانِ
وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِيْنَ.
யா அல்லாஹ்!
உன்னுடைய மறைவான அறிவைக் கொண்டும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றலைக் கொண்டும் (நான் கேட்கின்றேன்)
நான் (இவ்வுலகில்) வாழ்வது எனக்கு நலவாக இருந்தால் என்னை உயிர் வாழ வைப்பாயாக!
நான் மரணிப்பது எனக்கு நலவாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக!
யா அல்லாஹ்!
மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் உனக்கு அஞ்சி வாழ்வதை கேட்கின்றேன்.
சந்தோச நிலையிலும் கோபப்படும் போதும் சத்தியத்தை மொழியும் பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன்.
செல்வ நிலையிலும் வறுமையிலும் நடுநிலை பேணுவதை கேட்கின்றேன்.
முடிவில்லாத அருட்பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன்,
மேலும் உனது தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் (மனோ) நிலையை நான் உன்னிடம் கேட்கின்றேன்,
மேலும் மரணத்தின் பின் இதமான வாழ்க்கையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்,
மேலும் உனது திருமுகத்தை காணும் இன்பத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்,
இன்னும் வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதில் ஆர்வத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்,
யா அல்லாஹ்!
ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு எங்களை அழகு படுத்துவாயாக!
மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக!
(அஹ்மத்,நஸாயி)
No comments:
Post a Comment