Pages

Monday, 10 February 2020

பிறர் நலம் பேனுதல்!!!!

ஒரு முஸ்லிம் உலகின் எந்த ஒரு மூலையில் பாதிப்புக்கு உள்ளானாலும் அந்த பாதிப்பு நமக்கு ஏற்பட்ட ஓர் பாதிப்பாக நாம் உணர வேண்டும்...

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு எவ்வகையில் எல்லாம் கடமைப் பட்டிருக்கின்றான் என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தையும் வாழ்க்கையும் நமக்கு மிகப் பெரும் முன்மாதிரியான வழிகாட்டியைத் தந்திருக்கின்றது.

அந்த வழியில் நின்று அவர்களுக்கு ஆறுதல் தருவோம்! அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ வழிவகுப்போம்!

قول رسول الله - صلى الله عليه وسلم -: ((المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا))

”ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளருக்குக் கட்டிடத்தைப் போன்றவராவார். எப்படி ஒரு கட்டிடம் நிலைத்திருப்பதற்கு ஒரு செங்கல் இன்னொரு செங்கலின் துணை கொண்டு உறுதிப்படுத்துகின்றதோ அதைப் போன்று” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

وقوله - عليه السلام -: ((مثل المؤمنين في توادهم وتراحمهم؛ كمثل الجسد، إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى)).

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அன்போடும், கருணையோடும் இருப்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் உடலை உதராணமாகச் சொல்லலாம். காய்ச்சலின் போதோ, அல்லது ஏதாவது நோவினையின் போதோ உடலின் ஏதாவது ஒரு உறுப்புக்கு பாதிப்பு என்றால் ஒட்டு மொத்த உடலும் அதில் பங்கெடுத்துக் கொள்கின்றதே அதைப் போன்று” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிம் உலகின் எந்த ஒரு மூலையில் எந்த ஒரு பாதிப்புக்கு உள்ளானாலும் அந்த பாதிப்பு நமக்கு ஏற்பட்ட ஓர் பாதிப்பாக நாம் உணர வேண்டும்.

நாம் வாழ்கிற இந்த ஜனநாயக இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான வழிகளைக் கையாண்டு அவர்களின் பாதிப்பில் இருந்து அவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment