அனைத்தையும் அறிபவன் அல்லாஹ் மட்டுமே ...
اَللَّهُمَّ إِنَّكَ َتَرَى مَكَانِيْ،
وَتَسْمَعُ كَلاَمِيْ،
وَتَعْلَمُ سِرِّيْ وَعلاَنِيَتِيْ،
لاَ يَخْفَى عَلَيْكَ شَيْئٌ مِنْ أمْرِيْ،
أنَا الْبَائِسُ الْفَقِيْرُ،
الْمُسْتَغِيْثُ الْمُسْتَجِيْرُ،
الْوَجِلُ الْمُشْفِقُ،
الْمُقِرَّ الْمُعْتَرِفُ بِذَنْبِهِ،
أسْألُكَ مَسْألةَ الْمِسْكِيْنِ،
وَأبْتَهِلُ إِلَيْكَ إِبْتِهَالَ الْمُذْنِبِ الذَّلِيْلِ،
وَأدْعُوْكَ دُعَاَءَ الْخَائِفِ الضَّرِيْرِ،
مَنْ خَضَعَتْ لَكَ رَقَبَتُهُ،
وَذَلَّ جِسْمُهُ،
وَرَغِمَ أنْفُهُ.
யா அல்லாஹ்!
என் நிலையினை நீ பார்க்கின்றாய்.
என் பேச்சை நீ கேட்கின்றாய்.
என் அந்தரங்கத்தையும் பகிரங்கத்தையும் (ஒன்று போல்) நீ அறிகிறாய்.
என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை!
நான் ஒன்றுமில்லாத ஏழை!
இரட்சிப்புத் தேடுபவன்!
அபயம் தேடுபவன்!
இரக்கத்தன்மையுள்ள, இழகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன்,
மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகின்றேன்.
பணிந்த நிலையில் மண்டியிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன்.
(யா அல்லாஹ்!)
பிடரியைப் பணியவைத்து,
மேனியைப் பணிவாய் வைத்து,
மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் வைத்து குருடரான பயந்தவனின் பிரார்த்தனையாக,
நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்.
(தப்ரானி)
No comments:
Post a Comment