Pages

Saturday, 18 January 2020

நபி( ஸல் )அவர்கள் தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்தித்ததும், அவர்கள் மீதுள்ள பரிவால் அழுததும் ...

நபி( ஸல் )அவர்கள் 
தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்தித்ததும், அவர்கள் மீதுள்ள பரிவால் அழுததும் 

باب دعاء النبي صلى الله عليه وسلم لأمته وبكائه شفقة عليهم



حدثني يونس بن عبد الأعلى الصدفي أخبرنا ابن وهب قال أخبرني عمرو بن الحارث أن بكر بن سوادة حدثه عن عبد الرحمن بن جبير عن عبد الله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني الآية وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم فرفع يديه وقال اللهم أمتي أمتي وبكى فقال الله عز وجل يا جبريل اذهب إلى محمد وربك أعلم فسله ما يبكيك فأتاه جبريل عليه السلام فسأله فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال وهو أعلم فقال الله يا جبريل اذهب إلى محمد فقل إنا سنرضيك في أمتك ولا نسوءك

صحيح مسلم -

(ஒரு முறை ) நபி ( ஸல் ) அவர்கள், இப்ராஹீம் ( அலை ) அவர்கள் தொடர்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ள “ இறைவா ! நிச்சியமாக! இவை ( சிலைகள் ) மக்களில் அதிகம் பேரை வழிகெடுத்துவிட்டன; எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ ( அவரை ) நீயே மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கின்றாய்” என்ற ( 14:36 ஆவது ) வசனத்தையும் ,

ஈசா ( அலை ) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள “( இப்போது ) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே ! நீ இவர்களை மன்னித்தாலும் ( அப்போதும் ) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய் “ என்ற ( 5 : 118 ) ஆவது வசனத்தையும் ஒதிக் காட்டினார்கள்.

அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தி யவாறு “ இறைவா ! என் சமுதாயம் ; என் சமுதாயம் ( இவர்களைக் காப்பாற்றுவாயாக ! ) “ என்று பிரார்த்தித்தார்கள்; அழுதார்கள்.

அப்போது வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் ( வானவர் ஜிப்ரீலிடம் ) , “ ஜிப்ரீலே ! நீங்கள் முஹம்மதிடம் சென்று - உங்கள் இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் - “ நீங்கள் ஏன் அழுகிறீர்கள் ?” என்று கேளுங்கள் “ என்றான்.

அவ்வாறே ஜிப்ரீல் ( அலை ) அவர்கள் சென்று அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள்,அல்லாஹ்வுக்குத் தெரியும் ; என்றாலும் -தாம் கூறியவற்றை ( மேற்கண்டவாறு ) தெரிவித்தார்கள்.

அதற்கு அல்லாஹ் , “ ஜிப்ரீலே ! முஹம்மதிடம் சென்று நாம் உம் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம்; உம்மை நாம் கவலையடையச் செய்யமாட்டோம் “ என்று கூறுக என்றான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் ( ரழி )

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 346

-----------------------------------------------------------------------------

என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்

நூல் : ஸஹீஹுல் புகாரீ 3461

-----------------------------------------------------------------------------

فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة ثم يقول أنا أولى بكل مؤمن من نفسه

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :

உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் ( குர் ஆன் ) ஆகும் , வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை ( மார்க்கத்தின் பெயரால் ) புதிதக உண்டாக்கப்படுபவை ஆகும்.

ஒவ்வொரு முஃமினுக்கும் அவரது உயிரை விட நான் நெருக்கமானவனாவேன்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1573

No comments:

Post a Comment