Pages

Sunday, 26 January 2020

வெட்டு காயத்திற்கு மருதாணியே சிறந்த மருந்தாகும்...

வெட்டு காயத்திற்கு மருதாணியே சிறந்த மருந்தாகும்:

عَنْ عَلِيِّ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ جَدَّتِهِ سَلْمَى, وَكَانَتْ تَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَا كَانَ يَكُونُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرْحَةٌ وَلَا نَكْبَةٌ, إِلَّا أَمَرَنِي رَسُولُ اللَّهِ 
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَضَعَ عَلَيْهَا الْحِنَّاء

َ (ترمذى- 2054, ابن ماجه-3502)  

அலி பின் உபைதுல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்: 

'ஸல்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்துக்கொண்டிருந்தார்கள். நபியவர்களுக்கு (வாளால்ஏற்பட்ட) வெட்டு காயம், (கல் அல்லது முள்ளால் ஏற்பட்ட) காயம் இவை போன்றவைகளுக்கு மருதாணியை அதில் தடவுமாறு எனக்கு சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்';.

 (திர்மிதி-2054, இப்னுமாஜா-3502)

மருதாணி இலை நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.

 புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. 

கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

 மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.  ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும். இதன் வேர்ப்பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும். இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும். இரும்பு வாணலில் தேங்காய், நெய் 500 மி.லிட்டர் விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திற்காக 10 கிராம் சந்தனத்தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைத்த் தேய்க்க முடி வளரும் நரைமாறும். ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண் ஆகியவற்றிகு இதன் இலையை அரைத்து  நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம்.

அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம். பவுடராக வரும் இந்த மருதாணியில் எந்த அளவு அதன் மருத்துவ குணங்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி இலைகளை பறித்து உபயோகித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment