Pages

Friday, 3 January 2020

இமாம்_ஹஸன்_அல்_பஸ்ரி அவர்கள் தவ்பா செய்வதின் முக்கியத்துவத்தை கூறினார்கள்

இமாம்_ஹஸன்_அல்_பஸ்ரி அவர்கள் தவ்பா செய்வதின் முக்கியத்துவத்தை கூறினார்கள்


 ஒருமுறை தன் மாணவர்களுடன் சபையில் மார்க்க கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது...

قصة الإمام حسن البصري والاستغفار ... 

جاء رجل إلى الحسن البصرى فقال له : إن السماء لم تمطر !! 


فقال له الحسن البصرى : استغفر الله


ثم جاء رجل آخر فقال له : اشكوا الفقر!!


فقال له الحسن البصرى : استغفر الله



ثم جاء ثالث فقال له: امرأتي عاقر لا تلد!!


فقال له الحسن البصرى : استغفر الله


ثم جاء رابع فقال له أجدبت الأرض فلم تنبت !!


فقال له الحسن البصرى : استغفر الله

فقال الحاضرون للحسن البصرى : عجبنا لك أو كلما جاءك شاك قلت له استغفر الله


فقال لهم الحسن البصرى ما قلت شيئ من عندي وقرأ قوله تعالى : 


(فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا) نوح 


هل تتمنى راحة البال، وطمأنينة القلب والمتاع الحسن ؟


(وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ) هود 


ஒரு மனிதர் அவரிடம் வந்து எனக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றது" என்று சொன்னார். அதற்கு இமாம் அவர்கள் "என்ன பிரச்சனை என்று கேட்டார்கள்" . அதற்கு அம்மனிதர் "எங்கள் பகுதியில் மழை இல்லை, எங்கள் நிலங்களெல்லாம் வரண்டுவிட்டது, நாங்கள் என்ன செய்வது ஏதேனும் வழி சொல்லுங்கள்" என்று கேட்டார். அதற்கு இமாம் சொன்னார்கள் " (இஸ்திக்ஃபார்) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு அதிகமாக கேளுங்கள் " என்று. உடனே அந்த மனிதர் இமாம் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு சென்றார்.......

அதே போல் இன்னொரு மனிதர் வந்து "ஷேக் நான் வறுமையில் சிக்கிக்கொண்டேன், என்னிடம் செல்வம் இல்லை, வருமானத்திற்கு வழியும் இல்லை" என்றார். அதற்கு இமாம் சொன்னார்கள் " (இஸ்திக்ஃபார்) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு அதிகமாக கேளுங்கள் " என்று. உடனே அந்த மனிதர் இமாம் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு சென்றார்.......

இதை இமாம் ஹஸன் அல் பஸ்ரி அவர்களுடைய மாணவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அதே போல் மூன்றாவதாக ஒரு மனிதர் வந்தார் "ஷேக் எனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை என்றார்". அதற்கு இமாம் சொன்னார்கள் " (இஸ்திக்ஃபார்) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு அதிகமாக கேளுங்கள் " என்று. உடனே அந்த மனிதர் இமாம் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு சென்றார்....... 

உடனே இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மாணவர்கள் "இமாம் அவர்களே எந்த மனிதர் எந்த பிரச்சினை என்று வந்தாலும் நீங்கள் ஒரே தீர்வையே கூறுகின்றீர்கள் அதாவது இஸ்திக்ஃபார் செய்யுங்கள் என்று, எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை" என்று இமாம் ஹஸன் அல் பஸ்ரி அவர்களிடம் கேட்டார்கள்....

அதற்கு இமாம் ஹஸன் அல் பஸ்ரி அவர்கள் "இது அல்லாஹ் சொன்ன தீர்வு" என்றார்கள். 

அல்லாஹ் கூறுகின்றான் : 

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ‏

"நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள், நிச்சயமாக அவன் மன்னிப்பவன்" (71:10)

يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ‏

"பாவ மன்னிப்புக் கேட்டால் அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை பொழிய செய்வான்" (71:11) 

وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا ‏

"இன்னும் அல்லாஹ் உங்களுக்கு பொருள்களையும் குழந்தைகளையும் கொண்டு உதவி செய்வான், இன்னும் உங்களுக்காக தோட்டங்களை உண்டாக்குவான், உங்களுக்காக ஆறுகளை பெருக்கெடுத்து ஓடச் செய்வான்" (71:12). 

இன்ஷா அல்லாஹ், நீங்கள் அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள், அவனிடம் மீண்டும் திரும்புங்கள், அவனிடம் அழுது தவ்பா செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மன்னிக்க கூடியவன். 

وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَ يُؤْتِ كُلَّ ذِىْ فَضْلٍ فَضْلَهٗ ‌ وَاِنْ تَوَلَّوْا فَاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيْرٍ‏
நீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரையில் உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று  நான் பயப்படுகிறேன்.
(அல்குர்ஆன் : 11:3)


#அஸ்தஹ்ஃபிருல்லாஹ் #

No comments:

Post a Comment